Monday, May 2, 2011

அத்திக்காய் ஆலங்காய் வெண்ணிலவே.....

பாடலுக்கான சூழ்நிலை :
 

இத்திரைப்படத்தில் சிவாஜி மூன்று வேடம் ஏற்றிருப்பார். அதில் ஒரு வேடம் ‌அப்பாவி பாண்டியன் பாத்திரம். தற்கொலைக்கு முயன்று பின் காப்பாற்றப்பட்டு, நாயகி தேவிகாவை விரும்புவார். அதே போல் சிவாஜியின் தங்கை‌யான நடிகை வசந்தியும் இவரின் காதலராகவும் சிவாஜியின் நண்பனாகவும் நடித்திருப்பவர் பாலாஜி. (இவருதாங்க அஜித் பில்லாவின் தயாரிப்பாளர்) பல்வேறு கலாட்டாவிற்கு பிறகு இந்த இரு ஜோடியும் தனியே வந்து  ஒரே பந்தலில் திருமணம் செய்துக் கொள்கின்றனர். அன்று இரவு நடக்கும் முதலிரவில் செல்ல கோவத்துடன் இந்த இரு ஜோடியும் பாடும் படி இந்த பாடல் அமைந்துள்ளது.

பாடலுக்கான விளக்கம் :

கவியரசர் கண்ணதாசன் தான் பாடல்களில் செலுத்துகின்ற ஆட்சி பாராட்டுக்குரியது. அவருடைய பாடல்கள் காலங்கள் தாண்டியும் வாழக்கூடியது. அவர் எழுதிய பாடலின் விளக்கத்தை தர முன்வருகிறேன். (இது என் அறிவுக்கு எட்டியதுதான். ஏதாவது தவறாக ‌இருந்தால் மன்னிக்கவும்) இப்பாடல் ஏதோ காய் கறிகளை பற்றி பாடப்பட்டது போல் இருக்கும் உண்மையில் அர்த்தம் அலுவல்ல... தலைவன் மீது கோவம் கொண்ட தலைவியும், தலைவி மீது கோவம் கொண்ட தலைவனும், மாறி மாறி செல்லமாய் தண்டிக்கச் சொல்வது போல் இருக்கும்

பெ : அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?

அத்திக்காய் என்பது அத்திமரத்தில் காய்க்ககூடிய ஒருகாய்.. ஆனால் பாடலில் அத்திக்காய் என்பது திக்கு என்பதற்கு திசை, பக்கம், என்ற அர்த்தங்கள் இருக்கிறது ‌அத்திக்காய் என்றால் அந்த பக்கம் காய்.. காய் என்பது காய்தல் (வெயில் காய்கிறது போன்று இதில் நிலவு) ஆலங்காய். ஆலங்காய் என்பது மிகவும் கசப்பு தன்மைக் கொண்டது கசக்கும் வெண்ணிலவே என்னை காயாதே... அல்லது ஆலங்காய் என்பதின் இன்னோரு அர்த்தம் ஆலம் என்றால் விஷம் என்று அர்த்தம். விஷம் போல காய்கின்ற வெண்ணிலவே என்று பெருள்படுகிறது. இத்திக்காய் என்றால் இந்தப்பக்கமாய் காயதே நான் உன்னைப்போல் பெண்ணல்லவா என்று நாயகி கூறுகிறார்.  

பெ : கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக் காய் மங்கை என்தன் கோவைக்காய்


(கன்னிக்காய்=  கன்னிக்காக, ஆசைக்காய் = ஆசைக்காக)
கன்னியாகிய நான் ஆசைகொண்டு காதல் கொண்ட இந்த பெணணுக்காக (பாவை என்றால் பெண் என்று அர்த்தம்.) அதோ அங்கே சென்று அவரைக் காய்... மங்கை என்தன் கோவைக்காய்.. கோ-என்றால் தலைவன், மன்னன் என்று பொருள்.. அதாவது என்னுடைய தலைவனை காய் என்று பொருள்.

ஆ : மாதுளங்காய் ஆனாலும் என்னுளம் காயாகுமோ?
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?


மாதுளங்காள் ஆனாலும் என்பது (மாது+உள்ளம்=மாதுள்ளம்) அவளுடைய உள்ளம் காயாக இருக்கலாம் அதாவது என்னை தவறாக நினைக்கலாம் ஆனால் என்னுள்ளம் அதுபோல் இல்லை. நிலவே என்னை நீ காயாதே நீயும் என் உயிர் அல்லவா.

ஆ : இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்
 
இரவில் நடக்கும் அந்த கூடலுக்காக அதாவது இரவுக்காகவும், அந்த உறவுக்காகவும் ஏங்கும் இந்த ஏழைக்காக உன் நேரில் நிற்கும் எப்போதும் அவளை உன் கதிர்கலால் சுடு (காய்)

பெ : உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ?
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

மன்னவனே என்னுடைய உருவம்தான் வெறுப்பது போன்று உள்ளது அதாவது உருவம் காய் போல் உள்ளது ஆனால் என் பருவம் அப்படியில்லை. என் உயிரான என் நிலவே என்னை காயாதே. எப்போதும் என்னுயிரும் நீயல்லவா?

பெ : ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய்

நிலவே... ஏலக்காய் போன்று வாசனையுடன் எங்கள் உள்ளத்தை வாழ வை. வாழக்காய் என்பது வாழ்வதற்காக காய். என்று அர்த்தம். ஜாதிக்காய்ப்போன்று தனிமையில் அதை கனிய விடுவது போன்று எங்களை தனிமையில் இன்பம் காண விடு என்று நிலவிடம் காதலி விண்ணப்பமிடுகிறார்.

ஆ : சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவளங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

ஓ.. நிலவே இப்போது சொன்னதெல்லாம் விளங்கிற்றா.? ஏன் இப்படி நாங்கள் சொல்வதை புரிந்துக் கொள்ளாமல் இருக்கிறாய் . தூதுவளங்காய் என்பது தூது விளங்காத என்று பொருள்படும். இவ்வளவு சொல்லியும் என்னை நீ காயப்போகிறாயா? என்னை நீ வெறுக்காதே அன்பே நான் என்பது நீ அல்லவா.

ஆ :உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்கயோ?
        வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?
 

உன் உள்ளம் என் இளகாதோ (மி என்பதை ம்+இ என்று பிரிப்படும்)  ஏன் மிளகாய் போன்று ஓவ்வோறு பேச்சிலும் உறைக்கிறாய் (காரம்). என்று இரு பொருள்படும். இதைப் பார்த்து ஏன் வெண்ணிலவே சிரிக்கிராய் பிறையானது சிரிப்பு சின்னமாக வெள்ளரியை பிளந்தது போல் இருக்கிறதாம்.

பெ : கோதையெனைக் காயாதே கொத்தவரங்காய் வெண்ணிலவே
‌ஆ : இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா 

கோதை என்னை காயாதே என்னை கொத்த வரும் வெண்ணிலவே நாங்கள் இருவரும் அன்பை பரிமாறிக் கொள்ள போகிறோம். ஆகையால் எங்கள் இருவரையும் காயாதே நீ தனிமையிலே ஏங்காதே வெண்ணிலவே.
என்று இந்தபாடல் முடிகிறது.


பாடலுக்கான விவரம் :



பாடல்: அத்திக்காய் காய் காய்
திரைப்படம்: பலே பாண்டியா  (1962)
இந்த பாடலில் நடித்திருப்பவர்கள் : சிவாஜி, தேவிகா, பாலாஜி, வஸந்தி.

படியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி.சுசீலா, 
பி.பி. ஸ்ரீனிவாஸ், ஜமுனா ராணி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

அந்த பாடல் வரிகள் :



பல்லவி :
பெ : அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
          இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?

‌ஆ : அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
         இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
         என்னுயிரும் நீயல்லவோ?
        அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே..

பெ : ஓஓஓ..ஓஓஓ..

சரணம் : 1 


பெ : கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
          அங்கே காய் அவரைக் காய் மங்கை என்தன் கோவைக்காய்
          கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
          அங்கே காய் அவரைக் காய் மங்கை என்தன் கோவைக்காய்

ஆ :  மாதுளங்காய் ஆனாலும் என்னுளம் காயாகுமோ?
          என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

பெ : இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?

பெ : ஓ.. ஓ... ஓ.. ஆஹா.. ஆஹா.. 

சரணம் : 2 

ஆ : இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
         நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்
         இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
         நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்

பெ : உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ?
          என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

இரு :அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
            இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

இரு : ஆஹா..ஆஹா. ஆஹா.. ஆஹா.. 

சரணம் : 3 

பெ : ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
           ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய்
           ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
           ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய்

ஆ : சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவளங்காய் வெண்ணிலா
         என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

இரு : அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
             இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

இரு : ஆஹா..ஆஹா. ஆஹா.. ஆஹா.. 

சரணம் : 4 

ஆ :உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்கயோ?
        வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?
        உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்கயோ?
        வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?

பெ : கோதையெனைக் காயாதே கொத்தவரங்காய் வெண்ணிலவே
‌ஆ : இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா

இரு : அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
            இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

ஆஹாஹா ஆஹா ஓஹோஹோ ஹோஹோ ம்ஹ்ம்ம் ம்ம்
 அந்த பாடலையும் ஒரு முறை பாருங்கள் :
 

தமிழ் பாடலில் ஒளிந்துள்ள அறிய கருத்துக்களை வெளிக்கொணர்வதே என் வேலை... என் வேலையை நான் செய்து விட்டேன் ரசித்தவர்கள் தயவு செய்து  கருத்து சொல்லிவிட்டு செல்லுங்கள்..
 
அன்பான வாசகர்களே இதை எப்போது படித்தாலும்  தங்களுடைய கருத்தை சொல்லுங்க.. அதுதான் என்னைமேலும் பதிவிட வலுசேர்க்கும்...
இதை தங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்துவையுங்கள்...
நன்றி... நன்றி...


வாவ் என்று இத்தளத்தைவலைச்சரத்தில் அறிமுகம் செய்த தோழி ஆனந்தி அவர்களுக்கும்..
Xxtraordinary Blogger Award வழங்கிய தோழி சிநேகிதிக்கும்
பாட்டு ரசிகனின் நன்றிகள்...


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...