Thursday, July 28, 2011

அடத்தமிழா நாளை என்பது யாருக்கு..?

பாடலுக்கான சூழ்நிலை :


ஒரு கிராமத்துப் பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள ஆசைப்படும் நாயகன் ரிஷி (அரவிந்தசாமி) பூஙகுடி கிராமத்திற்கு சென்று அங்கு அக்காவை ‌ பெண்பார்க்க சென்று, பின்பு அங்கு நடக்கும் பிரச்சனையால் அவளுடைய தங்கையான ரோஜாவை (மது) திருமணம் செய்துக் கொண்டு நகருக்கு வந்து விடுகிறார். பின்பு தேன்நிலவுக்காக காஷ்மீர் பகுதிக்கு செல்கிறார். அங்கு தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறார். (படத்தின் கதை இந்த கடத்த‌ல் மற்றும் தீவிரவாத ஒழிப்பை மையப்படுத்தி வருகிறது) அப்படி தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் போது ஒரு தீவிரவாதியால் இந்திய தேசியக்கொடி தீயிட்டுக் கொளுத்தப்படுகிறது. ‌தேசிய உணர்வுடன் அந்த தீயை அணைத்து ‌தேசியக் கொடியை காப்பது போன்று காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அந்த காட்சியின் பிண்ணனியில் இப்பாடல் ஒளிபரப்பாகும்.

பாடலுக்கான பொருள் :

தமிழ் மொழி இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, உள்ளிட்ட உலகநாடுகளில்  63+ மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.  முதல் 20 உலக மொழிகள் பட்டியலில் 18 வது இடம் பிடித்திருக்கிறது.  அப்படி சிறப்பு வாழ்ந்த மொழியைப்பற்றி வைரமுத்து அவர்களால் இயற்றப்பட்டப்பாடல் தான் இது.
 

தமிழனே நாளை நம்முடையது.. இந்த நாடு என்பதும் நம்முடையது. நம்முடைய வீடு எது என்றுக் கேட்டால் அது தமிழ்நாடு என்று சொல்லுங்கள். அதுவே நம்முடைய உணர்வு இந்தியன் என்று இருக்கட்டும்.

இந்தியாவில்  பல்வேறு இனங்கள் நிறைந்துள்ளது ஆனால் குணத்தால் நாம் ஒன்றுப்படுகிறோம். 

அரபியும் விரிகுடாவும் கைகோர்க்கும் கன்னியாகுமரியோ அல்லது இமையத்தில் உயர்ந்து நிற்க்கும் காஷ்மீரோ இடம் ஏதுவாக இருந்தாலும் நிலத்தால் அது ஒன்றாகிறது.

மொழிகள் மாறலாம் பொருளில் மட்டும் ஒன்றாகத்தான் இருக்கிறது. கலி மாறலாம் (கலி என்பது காலத்தை குறிக்கிறது.) இனி எத்தனை ஆண்டுகள் யுகங்கள் மாறினாலும் நம்முடைய தேசியக் கொடி  தேசிய உணர்வு மாறாது.

எட்டு திசைகளில் மாற்றங்கள் இருக்கும் அது எங்கள் நிலத்தை மாற்ற முடியாது. இசைகள் மட்டும் சுரங்கலாம் மாறிப்போகலாம் மொழிகலாள் அவை ஒன்றுதான். நம்முடைய இந்தியா அது ஒன்றுதான்.

தமிழனே கலங்காதே தமிழனாக இருந்தாலும் உனக்குள் இருப்பது இந்திய ரத்தம் ஒன்றான இந்த பாரதம் உன்னைக்காக்கும்.


பாடலின் விவரம் :


திரைப்படம்:   ரோஜா (1992)
பாடல்: தமிழா தமிழா
பாடகர்:  ஹரிஹரன்
இசை:  AR. ரெஹ்மான்
பாடல் ஆசிரியர்:  வைரமுத்து
படத்தின் இயக்கம் : மணிரத்தினம

அந்த பாடல் வரிகள் :
பல்லவி :
தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே(2)

என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே


சரணம் -1

இனம் மாறலாம் குணம் உண்டு தான்
இடம் மாறலாம் நிலம் ஒன்று தான்
மொழி மாறலாம் பொருள் ஒன்று தான்
கலி மாறலாம் கொடி ஒன்று தான்
திசை மாறலாம் நிலம் ஒன்று தான்
இசை மாறலாம் மொழி ஒன்று தான்
நம் இந்தியா அதும் ஒன்று தான்

தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் கலங்காதே(2)

உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா
ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா

தமிழா தமிழா நாளை நம்நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

நவபாரதம் பொதுவானது
இது வியர்வையால் உருவானது...

அந்தப்பாடலிக் காணொலி காட்சி :


அன்பான வாசகர்களே இதை எப்போது படித்தாலும்  தங்களுடைய கருத்தை சொல்லுங்க.. அதுதான் என்னைமேலும்  வலுசேர்க்கும்... 
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி... நன்றி...



Monday, July 4, 2011

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்கிறது..


தமிழ் திரைப்படத்தில் பாடல்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டாது. பாடல்கள் என்பது படத்தின் கதையை விளக்குவதாகவும், கதாநாயகன் கதாநாயகியின் கதாப்பாத்திரத்தை சொல்லுவதாகவும் இருக்கும். மேலும் காதலை, ஊடலை, புரட்சியை, சோகத்தை, உற்சாகத்தை என அத்தனையும் பாடல்கள் எடுத்துரைக்கிறது. ‌ஆனால் சில பாடல்கள் வாழ்க்கையையும், அதன் தத்துவத்தையும் எடுத்துக்கூறும். தற்போது இதுபோன்ற பாடல்கள் இல்லையென்றாலும் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் அதற்க்கு குறைவைக்கவில்லை. அவரது பாடல்களில் நவரசங்களை மட்டுமல்லாமல் வாழ்க்கையையும் அதன் தத்துவத்தையும் அவரது பாடல் எடுத்துரைத்து காலத்தால் அழியாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு பாடலைத்தான் இப்போது நாம் பார்க்கப்போகிறோம்.

பாடலுக்கான சூழ்நிலை :

 படத்தின் நாயகன் மோகன் (முத்துராமன்) மற்றும் நாயகி ராதா (ஜெயலலிதா) நடுத்ததரக்குடும்பத்தில் பிறந்வர்கள். இருவரும் சந்தித்து காதலித்து திருமணம் செய்துக் கொள்கின்றனர். நாயகன் மிகவும் தன்மானம் மிக்கவராகவும், தன்னுடைய சொந்தக்காலில் நிற்கவேண்டும். தன்னுடைய குடும்பத்தை தன்னுடைய முயற்ச்சியில் நிலைநிறுத்த நினைக்கிறார். ஆனால் அதற்க்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. ஆனால் அதற்கு மாறாக  நாயகி வேலைக்கு சென்று சம்மாதித்து ‌‌அந்த குடும்பத்துக்கு நன்றாக பார்த்துக் கொள்கிறார்.

ஒரு கட்டத்தில் நாயகன் தன்னுடைய இயலாமையை கண்டும் தன்னைவிட அதிக சம்பளம் வாங்கும் தன்னுடைய மனைவின் மீது கோவம் கொண்டு அவமதிக்கிறார். மனதளவில் பிரிந்து வாடும் அவர்கள் ஒரு இசை நிகழ்ச்சிக்கு தனித்தனியே கிடைத்த அழைப்பை ஏற்று செல்கின்றனர். அந்த இசை நிகழ்ச்சியில் பாடப்படுவது போன்று இந்த பாடல் அமைந்துள்ளது.


இந்தப்பாடல் கதையில் வரும் இந்த ஜோடியின் நிலையை பிரிதிப்பலிப்பது போன்று இந்த பாடல் அமைந்துள்ளது. இந்த பாடலை அதை எழுதிய கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பாடுவது போன்று படமாக்கப்பட்டிருக்கும். கவிஞர் இந்தப்பாடலை அழகிய முகபாவனைகளுடன் படத்தில் பாடியிருப்பார்.


பாடலுக்கான விளக்கம் :

பொதுவாக ஒருவருடைய மனநிலையானது இரட்டைவேடம் போடும். அது ஒரு இடத்தில் பலமாகவும்.. ஒரு இடத்தில் பலவீனமாகவும் காணப்படும். அப்படி பலாமாக இருக்கும் இடத்தில் இருந்துக்கொண்டு ஆணவப்படக்கூடாது. 


பாம்பு என்றால் அது கருடனை பார்த்து பயந்து ஓடும். ஆனால் அது சிவனுடைய கழுத்தில் இருந்துக் கொண்டு கருடனையே சௌக்கியமா ‌என்று கேட்கிறதாம்... எவ்வளவு ஆணவம்.. இருக்கும் இடத்தில் இருந்தால் அந்த பாதுகாப்பு வந்து விடும் என்று கருடன் பதிலளிக்கிறது.


இந்த உலகாமானது நாம் வெற்றியடையும் போதும், உயர்ந்த நிலைக்கும் செல்லும் போதும், சாதனைகள் செய்யும் போது வந்து வாழ்த்தி விட்டுச் செல்லும் ஆனால் நம்முடைய கிரிடங்கள் கழட்டப்பட்டுவிட்டதெனில் இருந்து  சீராட்டியவர்கள் சிதறிப்போவார்கள். எங்கு நமக்கு மதிப்பு இல்லையோ, எங்கு நம் வார்த்தைகள் எடுபடவில்லையோ அந்த வாசற்படியை மிதிப்பது அவ்வளவு சரியானது அல்ல.

வாழ்க்கையானது கணவன் மனைவி என்ற இரண்டு சக்கரங்கள் இருந்தால் தால் தான் சீராகச் செல்லும். அப்படி இல்லாமல் நான் பெரியவன், நான் பெரியவள் என்ற வாதம் துவங்கி விட்டால் அந்த வீட்டில் பருவக்காலங்கள் இல்லாமலே புயல் மையம் கொண்டு விடும். அளவுக்கு மீறிய அன்பும் ஆபத்துதான் அதனால் எல்லாற்றிவும் ஒரு அளவோடு இருக்க வேண்டும்.


நிலவும் வானும் எப்போதும் சேர்ந்து இருப்பது. ஆனால் ஆது பிரிவு ஏற்ப்பட்டுவிட்டால் நிலவுமட்டுமே தேயும் வானமானது நீண்டுக்கொண்டே ‌போகும். இந்த உவமை கதைக்கு ஏற்றார் போல் பொருந்திவரும்படி கவிஞர் பாடலை எழுதியுள்ளார். இல்லாதான் இல்லாழ்க்கையில் தாம்பத்தியம் தவிர வேறொன்றும் மகிழ்ச்சியை கொடுக்காது. என்னுள்ளமே என்னைப்பார்த்து கேலி செய்கிறது. என்று கணவன் சொல்வதில் அர்த்தம் இருக்கிறது.


பொதுவான ஒரு ஆணின் தலைமையில் குடும்பம் இருக்கும் போதுதான் அவனுக்கு பெருமை. அதைவிடுத்து மனைவியின் தயவில் வாழ்வது என்பது மிகவும் அவமானமாக தெரியும். படத்தின் கதைப்படி இதே மனநிலையில் இருப்பதால் அவரின் மனநிலையை பாடல் எடுத்துரைக்கிறது.



பாடலுக்கான விவரம் :

படம் : சூரியகாந்தி
 

இசை : M.S. விஸ்வநாதன்
 

பாடியவர் : T.M. சௌந்தர்ராஜன்
 

பாடல் வரிகள் : கண்ணதாசன்
 

படத்தின் இயக்கம் : வி. சீனிவாசன்.

படம் வெளிவந்த வருடம் : 1973


பாடல் வரிகள் :

பல்லவி :

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா (2)
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது.
 
சரணம் - 1
 
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்   (2)

மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது  (பரமசிவன்

சரணம் - 2.

வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால்
எந்த வண்டி ஓடும்
 
உனை போலே அளவோடு உறவாட வேண்டும்
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது
அது சிறுமை என்பது.. அதில் அர்த்தம் உள்ளது

சரணம் - 3

நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே  (2)

என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும் போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது
இது கணவன் சொன்னது.. இதில் அர்த்தம் உள்ளது  (பரமசிவன் 

அந்தப்பாடல் :

 

அன்பான வாசகர்களே இதை எப்போது படித்தாலும்  தங்களுடைய கருத்தை சொல்லுங்க.. அதுதான் என்னைமேலும் பதிவிட வலுசேர்க்கும்...
இதை தங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்துவையுங்கள்...
நன்றி... நன்றி...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...