படத்தின் நாயகியை அறிமுகப்படுத்துகிற காட்சி.. இந்த கதாபாத்திரத்தின் மனநிலையானது அனைவரிடமும் நம்பிக்கை ஊட்டும் படியான வார்த்தை பேசுகிற, மற்ற அனைவருக்கும் தூண்டு கோளாய் இருக்கிற ஒரு கதாபாத்திரம். நாயகன் நல்ல குணமுடைய தன்மனதுக்கு பிடித்த ஒரு பெண்ணை தேடுகிற இளைஞன். இந்த இருவரையும் சந்திக்க வைக்க வேண்டும். ஊனமுற்றவர்கள் நடத்தும் ஒரு இசை நிகழ்ச்சியில் நாயகி பாட விருப்பப்பட்டு கல்ந்துக் கொண்டு பாடும் படி இப்பாடல் படத்தில் அமைகிறது.. இந்த இசை நிகழ்ச்சிக்கு நாயகனும் வருகிறார். படத்தில் நாயகனும் நாயகியும் விரும்புவதற்கு இப்பாடல் அடித்தளமாக இருக்கிறது..
பாடலுக்கான விளக்கம் :
இந்த உலகில் எத்தனையோ கோடி மக்கள் வந்தார்கள் சென்றார்கள். அந்த கோடி பேர்களில் எத்தனைப் பேர் தன்னை சார்ந்து மக்களின் வளர்ச்சிக்கு, அவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்தார்கள். இங்கே வழிகாட்டுபவர்களை விட வழியாவர்களைத்தான் உலகம் தனிமைப்படுத்திக் காட்டுகிறது. ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கை அவசியம், அந்த தன்னபிக்கை வரவழைக்க இங்கே தன்னம்பிக்கையாளர்கள் அவசியம் வேண்டும். அப்போது தான் சுற்றிக்கிடற சூழ்நிலைகளை தூரம் தள்ளி இந்த உலகை ஆளூம் வல்லமை கிடைக்கும்.
பூக்கள் மென்மையானது அந்த பூக்கூட சொல்கிறது இந்த உலகம் போர்களமாக இருக்கிறது. அதில் போராடிதான் வெற்றியை கான வேண்டும்.
நாம் மனதளவில் திடமான இருக்கவேண்டும். எந்த ஒரு பிரச்சனையும் எதிர்கொள்கிற மனதிடத்தை கடவுள் நமக்கு தந்திருக்கிறான் அதை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். வலியில்லாமல் கிடைப்பதற்கு வாழ்க்கையும், வெற்றியும் ஒன்றும் புள்ளும் பூண்டும் அல்ல. ஆயிரம் முத்தங்களை உள்வாங்கினால்தான் ஒரு பாறை சிலையாகிறது. ஒரு பட்டாம் பூச்சி காலத்தை தின்று தான் புழுவிலிருந்து வெளிப்படுகிறது. போராட்டங்களை எதிர்கொண்டு வெற்றிக்கான ஆசைப்பட்டால் அது கண்டிப்பாக கிடைக்கும்
உச்சிகளை குறிவையுங்கள்... இந்த வானம் அளவுக்கு யோசியுங்கள்... எடுத்து வைக்கும் ஒவ்வொறு அடியும் நம்பிக்கையோடு எடுத்து வையுங்கள்... வைரமுத்து சொல்வான் தலையில்லாமல் கூட நடந்து விடு ஆனால் தன்னம்பிக்கை இல்லாமல் ஒரு அடிக்கூட எடுத்து வைக்காதே.. நாம் எடுத்து வைக்கும் ஒவ்வோறு அடியும் நம்பிக்கையோடு எடுத்து வைத்தால் இந்த வாழ்க்கை நம் வசந்தமாக்கும்...
பாடலின் சிறப்புகள்
1.இந்த பாடலுக்கு இந்த பாடலை பாடிய சித்ரா அவர்களுக்கு தேசிய விருது கிடைத்தது.
2.தேசிய விருது பெற்ற இந்த பாடலை திருச்சிராப்பள்ளியில் ஒரு பள்ளியில் காலை நேர பிரார்த்தனைக்காக சிறுவர்கள் பாடுவதாகவும், ஒரு பல்கலைக் கழகத்தில் பாடத் திட்டத்தில் இதுவும் இணைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
3.இந்த பாடல் காட்சியில் சினேகா மிகவும் உருக்கமாக பாடி நடித்திருப்பார்.
4.ஊனமுற்ற நண்பர்களை கொண்டு படமாக்கியிருப்பார் சேரன்
5.தமிழில் இப்படம் நான்றாக ஓடியதற்கு இப்பாடலும் ஒரு காரணம்.
6. உருக்கமாக இப்பாடலைப் பார்த்தால் கண்களில் கண்ணீர் வருவது உறுதி
பாடல் விவரம் :
பாடல் : பா.விஜய்
பாடியவர் : கே.எஸ்.சித்ரா
பாடலுக்கு இசை : பரத்வாஜ்
படம் வெளிவந்த ஆண்டு : பிப்ரவரி 2004
கதை, இயக்கம், தயாரிப்பு : சேரன்
அந்த பாடல் வரிகள் :
பல்லவி :
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே... நீ மாறிவிடு
மலையோ அது பனியோ... நீ மோதிவிடு
சரணம்- 1
ஆஹ.. ஆஹ.. ஆஹ..
உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போக கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்ற கூடாது
எந்த மனித நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலபோக்கில் காயமெல்லாம்
மறந்து போகும் மாயங்கள்
உளி தாங்கும் கற்கள் தானே மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்
யாருகில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்
மனமே ஓ மனமே... நீ மாறிவிடு
மலையோ அது பனியோ.... நீ மோதிவிடு
சரணம் - 2
வாழ்க்கை கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்
லட்சம் கனவு கண்ணோடு
லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாருமில்லை உறுதியோடு போராடு
மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி எல்லாமே உறவாகும்
தோல்வி இன்றி வரலாறா
துக்கம் என்ன என் தோழா
ஒரு முடிவிருந்தால்...அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்
மனமே ஓ மனமே... நீ மாறிவிடு
மலையோ அது பனியோ.... நீ மோதிவிடு
அந்த பாடலையும் பார்த்துவிட்டு போங்க..
இந்த பாடல் நண்பர் ரஹீம் கஸாலி அவர்களுக்கு பிடித்த பாடல் அதனால் இதனை அவர்க்கு சமர்ப்பிக்கிறேன்..
என்ன ஆச்சா அப்புறம் உங்க வேலை.. மாமூலை கொடுத்துட்டு போங்க..
நான் உங்க பாட்டு ரசிகனுங்க...
நான் உங்க பாட்டு ரசிகனுங்க...
வடை...
ReplyDeleteநல்ல நல்ல பாடல்களை தேடிபிடித்து விளக்கம் கொடுப்பதற்கு நன்றி... இதில் உங்களின் உழைப்பு அபாரம்...துவன்டுவிடாதே நண்பா... தொடருங்கள்...
ReplyDeleteநல்ல பாடல்
ReplyDeleteபழைய பாடல்களையும் பகிருங்கள் MP3 டவுண்லோட் லிங்கும் இணைக்கவும்
This comment has been removed by the author.
ReplyDeleteஎனக்கு மிகவும் பிடித்த படலை விளக்கத்துடன் வெளியிட்டமைக்கு நன்றி பாட்டு ரசிகன். ஓ...இது நேயர் விருப்பமா? தொடரட்டும்,,
ReplyDeleteஎனக்கும் பிடித்த பாடல் இது...
ReplyDeletea good one..:-)
ReplyDeleteஅனைவருக்குமே பிடித்த பாடல் நண்பரே பாடல் வரிகள் தன்னம்பிக்கையை ஊட்டும்விதமாக அமைந்ததுதான் சிறப்பாக பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே :)
ReplyDeleteஃஃஃஃ திருச்சிராப்பள்ளியில் ஒரு பள்ளியில் காலை நேர பிரார்த்தனைக்காக சிறுவர்கள் பாடுவதாகவும், ஒரு பல்கலைக் கழகத்தில் பாடத் திட்டத்தில்ஃஃஃஃ
ReplyDeleteஅதிசயிக்க வச்சுது சகோதரம்... நன்றிகள்...
ரஹீம் கஸாலி அண்ணரே மிகவும் அருமையான தெரிவு வாழ்த்துக்கள்...
ReplyDeleteஏன் தமிழ் மணத்தில் இணைக்கல...
ReplyDeleteஉண்மையிலேயே மிக அற்புதமான பாடல் இது.
ReplyDeleteஉங்களின் விளக்கமும் அருமை..
ஆமாங்க எத்தனைதடவை கேட்டாலும் அலுக்காதபாடல் வரிகள். திரும்பத்திரும்பகேட்கத்தூண்டும். அருமையான
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
This comment has been removed by the author.
ReplyDeleteஎனக்கு ரொம்ப பிடித்த பாடல் ... மிகவும் உறுதி வார்த்தைகளால் கோர்க்கப்பட்ட வரிகளுடனான பாடல். பகரிவுக்கு நன்றி
ReplyDeleteஅனைவருக்கும் பிடித்த பாடல் இது!பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஎன்னங்க மிரட்டி மிரட்டி மாமூல் வாங்குறீங்க... இன்னும் தமிழ்மணத்தில் இருந்து அப்ரூவல் கிடைக்கவில்லையா...
ReplyDeleteமனதுக்கு இதமான மற்றும் தன்னம்பிக்கை ஊட்டுகின்ற பாடல் இதை கேட்கும் போது பலமுறை நானும் என்னை அறியாமலையே அழுதிருக்கிறேன..
ReplyDeleteதங்களுடைய விளக்கம் அருமை..
ReplyDeletenice and encouraging song.Thanks for ur effort and explanation as a 'BOOSTER' to the readers.
ReplyDeleteகருத்தாளம்மிக்க அருமையான பாடல்.
ReplyDeleteவிளக்கம் அருமை..தன்னம்பிக்கை உங்கள் வார்த்தைகளில் வழிகிறது..
ReplyDeletei like this song very much , this song is very nice meaning
ReplyDelete