Monday, July 4, 2011

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்கிறது..


தமிழ் திரைப்படத்தில் பாடல்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டாது. பாடல்கள் என்பது படத்தின் கதையை விளக்குவதாகவும், கதாநாயகன் கதாநாயகியின் கதாப்பாத்திரத்தை சொல்லுவதாகவும் இருக்கும். மேலும் காதலை, ஊடலை, புரட்சியை, சோகத்தை, உற்சாகத்தை என அத்தனையும் பாடல்கள் எடுத்துரைக்கிறது. ‌ஆனால் சில பாடல்கள் வாழ்க்கையையும், அதன் தத்துவத்தையும் எடுத்துக்கூறும். தற்போது இதுபோன்ற பாடல்கள் இல்லையென்றாலும் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் அதற்க்கு குறைவைக்கவில்லை. அவரது பாடல்களில் நவரசங்களை மட்டுமல்லாமல் வாழ்க்கையையும் அதன் தத்துவத்தையும் அவரது பாடல் எடுத்துரைத்து காலத்தால் அழியாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு பாடலைத்தான் இப்போது நாம் பார்க்கப்போகிறோம்.

பாடலுக்கான சூழ்நிலை :

 படத்தின் நாயகன் மோகன் (முத்துராமன்) மற்றும் நாயகி ராதா (ஜெயலலிதா) நடுத்ததரக்குடும்பத்தில் பிறந்வர்கள். இருவரும் சந்தித்து காதலித்து திருமணம் செய்துக் கொள்கின்றனர். நாயகன் மிகவும் தன்மானம் மிக்கவராகவும், தன்னுடைய சொந்தக்காலில் நிற்கவேண்டும். தன்னுடைய குடும்பத்தை தன்னுடைய முயற்ச்சியில் நிலைநிறுத்த நினைக்கிறார். ஆனால் அதற்க்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. ஆனால் அதற்கு மாறாக  நாயகி வேலைக்கு சென்று சம்மாதித்து ‌‌அந்த குடும்பத்துக்கு நன்றாக பார்த்துக் கொள்கிறார்.

ஒரு கட்டத்தில் நாயகன் தன்னுடைய இயலாமையை கண்டும் தன்னைவிட அதிக சம்பளம் வாங்கும் தன்னுடைய மனைவின் மீது கோவம் கொண்டு அவமதிக்கிறார். மனதளவில் பிரிந்து வாடும் அவர்கள் ஒரு இசை நிகழ்ச்சிக்கு தனித்தனியே கிடைத்த அழைப்பை ஏற்று செல்கின்றனர். அந்த இசை நிகழ்ச்சியில் பாடப்படுவது போன்று இந்த பாடல் அமைந்துள்ளது.


இந்தப்பாடல் கதையில் வரும் இந்த ஜோடியின் நிலையை பிரிதிப்பலிப்பது போன்று இந்த பாடல் அமைந்துள்ளது. இந்த பாடலை அதை எழுதிய கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பாடுவது போன்று படமாக்கப்பட்டிருக்கும். கவிஞர் இந்தப்பாடலை அழகிய முகபாவனைகளுடன் படத்தில் பாடியிருப்பார்.


பாடலுக்கான விளக்கம் :

பொதுவாக ஒருவருடைய மனநிலையானது இரட்டைவேடம் போடும். அது ஒரு இடத்தில் பலமாகவும்.. ஒரு இடத்தில் பலவீனமாகவும் காணப்படும். அப்படி பலாமாக இருக்கும் இடத்தில் இருந்துக்கொண்டு ஆணவப்படக்கூடாது. 


பாம்பு என்றால் அது கருடனை பார்த்து பயந்து ஓடும். ஆனால் அது சிவனுடைய கழுத்தில் இருந்துக் கொண்டு கருடனையே சௌக்கியமா ‌என்று கேட்கிறதாம்... எவ்வளவு ஆணவம்.. இருக்கும் இடத்தில் இருந்தால் அந்த பாதுகாப்பு வந்து விடும் என்று கருடன் பதிலளிக்கிறது.


இந்த உலகாமானது நாம் வெற்றியடையும் போதும், உயர்ந்த நிலைக்கும் செல்லும் போதும், சாதனைகள் செய்யும் போது வந்து வாழ்த்தி விட்டுச் செல்லும் ஆனால் நம்முடைய கிரிடங்கள் கழட்டப்பட்டுவிட்டதெனில் இருந்து  சீராட்டியவர்கள் சிதறிப்போவார்கள். எங்கு நமக்கு மதிப்பு இல்லையோ, எங்கு நம் வார்த்தைகள் எடுபடவில்லையோ அந்த வாசற்படியை மிதிப்பது அவ்வளவு சரியானது அல்ல.

வாழ்க்கையானது கணவன் மனைவி என்ற இரண்டு சக்கரங்கள் இருந்தால் தால் தான் சீராகச் செல்லும். அப்படி இல்லாமல் நான் பெரியவன், நான் பெரியவள் என்ற வாதம் துவங்கி விட்டால் அந்த வீட்டில் பருவக்காலங்கள் இல்லாமலே புயல் மையம் கொண்டு விடும். அளவுக்கு மீறிய அன்பும் ஆபத்துதான் அதனால் எல்லாற்றிவும் ஒரு அளவோடு இருக்க வேண்டும்.


நிலவும் வானும் எப்போதும் சேர்ந்து இருப்பது. ஆனால் ஆது பிரிவு ஏற்ப்பட்டுவிட்டால் நிலவுமட்டுமே தேயும் வானமானது நீண்டுக்கொண்டே ‌போகும். இந்த உவமை கதைக்கு ஏற்றார் போல் பொருந்திவரும்படி கவிஞர் பாடலை எழுதியுள்ளார். இல்லாதான் இல்லாழ்க்கையில் தாம்பத்தியம் தவிர வேறொன்றும் மகிழ்ச்சியை கொடுக்காது. என்னுள்ளமே என்னைப்பார்த்து கேலி செய்கிறது. என்று கணவன் சொல்வதில் அர்த்தம் இருக்கிறது.


பொதுவான ஒரு ஆணின் தலைமையில் குடும்பம் இருக்கும் போதுதான் அவனுக்கு பெருமை. அதைவிடுத்து மனைவியின் தயவில் வாழ்வது என்பது மிகவும் அவமானமாக தெரியும். படத்தின் கதைப்படி இதே மனநிலையில் இருப்பதால் அவரின் மனநிலையை பாடல் எடுத்துரைக்கிறது.



பாடலுக்கான விவரம் :

படம் : சூரியகாந்தி
 

இசை : M.S. விஸ்வநாதன்
 

பாடியவர் : T.M. சௌந்தர்ராஜன்
 

பாடல் வரிகள் : கண்ணதாசன்
 

படத்தின் இயக்கம் : வி. சீனிவாசன்.

படம் வெளிவந்த வருடம் : 1973


பாடல் வரிகள் :

பல்லவி :

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா (2)
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது.
 
சரணம் - 1
 
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்   (2)

மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது  (பரமசிவன்

சரணம் - 2.

வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால்
எந்த வண்டி ஓடும்
 
உனை போலே அளவோடு உறவாட வேண்டும்
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது
அது சிறுமை என்பது.. அதில் அர்த்தம் உள்ளது

சரணம் - 3

நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே  (2)

என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும் போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது
இது கணவன் சொன்னது.. இதில் அர்த்தம் உள்ளது  (பரமசிவன் 

அந்தப்பாடல் :

 

அன்பான வாசகர்களே இதை எப்போது படித்தாலும்  தங்களுடைய கருத்தை சொல்லுங்க.. அதுதான் என்னைமேலும் பதிவிட வலுசேர்க்கும்...
இதை தங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்துவையுங்கள்...
நன்றி... நன்றி...

35 comments:

  1. மிக நல்ல பாடல். எனக்கு விருப்பமான பாடல். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. "உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது

    அது சிறுமை என்பது அதில் அர்த்தம் உள்ளது!"

    ReplyDelete
  3. நல்ல பாடல்கள் காலத்தால் அழியாது

    ReplyDelete
  4. எனக்கு மிகவும் பிடித்த பாடல்.கதையோடு இணைந்த அருமையான பாடல்!

    ReplyDelete
  5. அப்பப்பா.

    பயங்கரமான ஆளுகப்பா நீங்க..

    தலைப்பை என்னமா கொடுக்கறீக ?

    சூப்பர்.

    யாராலும் மறக்க முடியாத + மறுக்க முடியாத அருமையான பாடல்.

    பகிர்வுக்கு நன்றி..

    நன்றி..

    சிவயசிவ
    http://sivaayasivaa.blogspot.com

    ReplyDelete
  6. ரைட்டு.... பழைய பாடல்கள் என்றுமே இனிமை தான்

    ReplyDelete
  7. ///
    பாரத்... பாரதி... said...

    மிக நல்ல பாடல். எனக்கு விருப்பமான பாடல். பகிர்வுக்கு மிக்க நன்றி.
    /////

    வாங்க பாரத் என்ன ரொம்ப நாளா ஆளையே காணும்...

    மீண்டும் வந்ததற்க்கு நன்றி...

    ReplyDelete
  8. ///
    பாரத்... பாரதி... said...

    "உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது
    அது சிறுமை என்பது அதில் அர்த்தம் உள்ளது!"
    //////

    தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  9. ////
    கிராமத்து காக்கை said...
    நல்ல பாடல்கள் காலத்தால் அழியாது
    /////////


    வாங்க நண்பரே....

    ReplyDelete
  10. உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
    உலகம் உன்னை மதிக்கும்
    உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
    நிழலும் கூட மிதிக்கும் (2) - கண்ணதாசனை விஞ்ச ஆளே இல்லை - அருமையான பாடல் .

    ReplyDelete
  11. வாழ்க்கையானது கணவன் மனைவி என்ற இரண்டு சக்கரங்கள் இருந்தால் தால் தான் சீராகச் செல்லும். அப்படி இல்லாமல் நான் பெரியவன், நான் பெரியவள் என்ற வாதம் துவங்கி விட்டால் அந்த வீட்டில் பருவக்காலங்கள் இல்லாமலே புயல் மையம் கொண்டு விடும்-அருமையான வரிகள்-நன்றி....K.S.பழனிசாமி

    ReplyDelete
  12. அருமையான பாடல்கள்

    ReplyDelete
  13. கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசன் தான்.... நல்ல பாடல்.... பகிர்வுக்கு நன்றி நண்பரே....

    ReplyDelete
  14. மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
    மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
    அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது/// என்ன ஒரு கவ்த்துவமான வரிகள்..

    ReplyDelete
  15. இந்த பாடல் வரிகளைக் கேட்கும் பொது கவின்ஞரை மிஞ்ச ஆளே இல்லை..

    ReplyDelete
  16. இந்தப்பாட்டு நானும் கேட்டிருக்கேன் னா.. TMS குரல்தான் ரொம்ப பிடிச்சிருக்கு.. கூடவே பாடல் வரிகளும் :-)

    ReplyDelete
  17. மறக்க முடியாத பாடல் எவ்வளவு அர்த்தம் பொதிந்த வரிகள் ...

    ReplyDelete
  18. நெசமாவே மிக பாடல் இது..
    என்னோட வலைப்பக்கமும் கொஞ்சம் வந்திட்டு போங்க பாஸ்..

    ReplyDelete
  19. மிக அருமையான பாடல். மிக அருமையான பகிர்வு.. :)

    ReplyDelete
  20. மிக அழகான அர்த்தம் உள்ள
    காலக் கரையான் அழிக்க முடியாத பாடலைத்
    தந்தமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. நல்ல பாடல். நான் இப்போதான் பார்க்கிறேன்.

    ReplyDelete
  22. //உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
    உலகம் உன்னை மதிக்கும்
    உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
    நிழலும் கூட மிதிக்கும்//

    நிதர்சனமான வரிகள்.பகிர்வுக்கு நன்றி!!

    ReplyDelete
  23. பாடலுக்கான விளக்கம் அருமை

    ReplyDelete
  24. நல்ல பாடல். நல்ல நரேத்தில் வெளியிட்டு உள்ளீர்கள்.அம்மாவுக்கு மட்டுமல்ல,இதுவரை மேல் மட்டத்தில் இருந்தவர்களுக்கு அனிவருக்கும் எந்த காலத்திலும் பொருந்தும். எழிலன்

    ReplyDelete
  25. அர்த்தம் பொதிந்த அருமையான பாடல். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  26. நல்ல பகிர்வுக்கு நன்றி நண்பரே!!!

    ReplyDelete
  27. எனக்கு மிக பிடித்த பாடல் ....இப்போதெல்லாம் கேட்கவே நேரம் கிடைபதில்லை .....பழைய நினைவுகளை திரும்ப அசை போட வைத்ததிற்கு நன்றி .....

    ReplyDelete
  28. மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
    மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
    அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல் பகிர்வுக்கு நன்றி ஒவ்வொரு வரிகளும் அர்த்தமுள்ள வரிகள்

    ReplyDelete
  29. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : செல்வி காளிமுத்து அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : என் மன வானில்

    வலைச்சர தள இணைப்பு : ஞாயிறு மறையும் வேளை!

    ReplyDelete
  30. அருமையான பாடல் பலரது வாழ்வோடு இன்றும் பொருந்தக்கூடிய அற்புதமான படைப்பு - கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசன் தான்

    ReplyDelete
  31. பாடல் ஒருபுறம் இருதாலும் அதன் விளக்கம் அருமை

    ReplyDelete
  32. என்றும் நிலைக்கும் இந்த பாடல், பல பிரச்னையான தம்பதிகளின் இல்வாழ்க்கைக்கு தீர்வு செய்து, வழிகாட்டியாக இருந்திருக்கிறது என்பது உண்மை!

    ReplyDelete

படிச்சி முடிச்சாச்சா..
தட்டிக் கொடுங்கள் அதை அடைக்கத்துக் கொள்கிறேன்...
இல்லையென்றால்
குட்டு வையுங்கள் அதை உரமாக்கிக் கொள்கிறேன்..
தட்டலோ குட்டோ அவசியம் பதிவு செய்யுங்கள்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...