Monday, August 22, 2011

மேகம் சுரக்கும் பால்...இதில் தைரியமாய் நனையலாம்....


படத்தில் பாடலுக்கான சூழல் :

நாயகன் (அரவிந்தசாமி) தன்னுடைய அண்ணன் (பிரகாஷ்ராஜ்) சொல்லுக்கு கட்டுப்பட்டு திருட்டு வேலையை செய்து வருபவர். அப்படி ஒரு இடத்தில் இரவில் திருட செல்லும்போது உறங்கிக் கொண்டிருக்கும் நாயகியை பார்க்கிறார். அங்கு நாயகியின் டைரியை அவருக்கு தெரியாமல் எடுத்துக் கொண்டு வந்துவிடுகிறார். அந்த டைரியில் நாயகி எழுதி வைத்திருக்கும் கவிதைதான் இந்த பாடல் என சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

நாயகியை கவர்வதற்க்காக அவருக்கு தெரியாமல் ஒரு நாள் மழையில் நாயகியின் கவிதையை நாயகன் பாடலாக பாடும் படி படக்காட்சிகள் அமைந்துள்ளன. அந்த பாடலை பாடும் நாயகனை நாயகி பின்தொடர்ந்து வருவார்.

பாடலுக்கான விளக்கம் :

வைரமுத்துவிடம் ஒரு காட்சி விளக்கப்பட்டப்பின் அந்தகாட்சியில் மிகவும் ஒன்றிவிடுவார். மேலும் அந்த காட்சி அந்த சூழ்நிலை அவற்றைப் பொருத்து அவர்பயன்படுத்தும் வார்த்தைகள் கவிதையின் உச்சமாக இருக்கும் அப்படி அவர் எழுதிய இக்கவிதையும் மழையின் மகிமையை உச்சத்திற்க்கு கொண்டு செல்வதுதான்.
 சிந்தும் இந்த மழைத்துளியை எடுத்து சேர்த்து வைத்து அதை அந்த மின்னல் கொண்டு மாலையாக கோர்த்துவிடலாம். கொட்டுகின்ற மழையை அப்படியே பிடித்து மழை நீரை அருந்தும் சக்கரவாக  பறவைப்போன்று எனக்கும் இந்த மழை பருக ஆசையாக இருக்கிறது.


மழையை ஒரு துளி விழுது என்பார். ஆலமரத்தில் தொங்கும் விழுதுபோன்று வானிலிருந்து ஒரு துளியாய் விழும் இதுவும் ஒரு விழுது என்று பாடலை ஆரம்பிக்கிறார். இந்த விழுதுகளை பிடித்து அப்படியே வானில் ஏறிவிடலாம் போலிருக்கிறதே...
 

மழை நீர் மிகவும் சுத்தமானது..  (ஆனால் முதலில் வரும் மழை அமில மழை என்று அறிவியல் கூறுகிறது) அந்த தூய நீர் சேரும் இடத்திற்க்கு ஏற்றார் போல் மாறிவிடும். பூவில் தேனாகவும், சிப்பியில் முத்தாகவும் பாவிப்பது மழை நீர்தான் தற்போது அவர் மீது விழுந்ததால் கவிதையாகவும் மாறிவிடுகிறதாம்.

இந்த இயற்கை அன்னை அனைவரும் குளிக்க அமைத்த மிகப்பெரிய ஷவராம்...  இளைய வயதில் மழையில் நனைவது மிகவும் சுகமானது... இந்த இளைய வயதில் நனையாமல் பிறகு எந்த வயதில் நனைவது என்று ஆதங்கத்துடன் எழுதியுள்ளார்


மழை என்பது தூரல், இடி, சாரல், மேகம், வானவில், என அத்‌தனையும் சுமந்து ஒரு கவிதைப்பேன்று வருகிறது அதை எதிர்த்து கதவடைத்தால் எப்படி... மழைப்பெய்தால் குடைப்பிடிப்போம் அதை கருப்புகொடியாக வர்ணனை செய்கிறார்.


மழை என்பது வான்தேவதை நமக்கெல்லாம் தந்த பரிசு யாரும் திரும்பிக் கொள்ளாதீர்கள்.. நெடுஞ்சாலையில் நனைய எவருடைய சம்மதமும் வேண்டாம்.. மழை ‌என்பது மேகம் சுரந்த பால் அதில் நனைவதற்க்கு ஏன் தயக்கம் அப்படி மழையில் நனையவில்லையென்றால் நாம் வாழ்நாளில் பாதி இழந்ததற்க்கு சமம்.. இந்த கண்களை மூடி நனைந்து இந்த மண்ணில் சொர்க்கம் காண்போம் என உணர்வுப்பூர்வமான வடிக்கப்பட்டுள்ளது இக்கவிதை.
 
பாடலுக்கான விவரங்கள் :


திரைப்படம்: என் சுவாசக் காற்றே
வெளிவந்த வருடம்: 1999
இயற்றியவர்: கவிப்பேரரசு வைரமுத்து
பாடியவர்: எம்.ஜி. ஸ்ரீரிகுமார்
இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரஹ்மான்

அந்த பாடல் வரிகள் :

சுரம் :
ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
ஒரு துளி விழுது ஒரு துளி விழுது

ஒரு துளி... இரு துளி...
சிறு துளி... பல துளி...

பல்லவி :
 
சின்னச் சின்ன மழைத்துளிகள்
சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூல் எடுத்துக்
கோர்த்து வைப்பேனோ
 
அனு பல்லவி:  

சக்கரவாகமோ மழையை அருந்துமாம்
நான் சக்கரவாகப் பறவையானேனோ
மழையின் தாரைகள் ஈரவிழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

(சின்னச் சின்ன மழைத்துளிகள் )

சரணம் : 1

சிறு பூவினிலே விழுந்தால் 
ஒரு தேன்துளியாய் வருவாய்...

சிறு சிப்பியிலே விழுந்தால்
ஒரு முத்தெனவே மலர்வாய்...

பயிர் வேரினிலே விழுந்தால்
நவதானியமாய் விளைவாய்...

என் கண்விழிக்குள் விழுந்ததனால்
கவிதையாக மலர்ந்தாய்
 
அந்த இயற்கை அன்னை படைத்த
ஒரு பெரிய ஷவரிது...

அட இந்த வயது கழிந்தால்
பிறகெங்கு நனைவது...

இவள் கன்னி என்பதை இந்த மழை
கண்டறிந்து சொல்லியது

சக்கரவாகமோ மழையை அருந்துமாம்
நான் சக்கரவாகப் பறவையானேனோ
மழையின் தாரைகள் வைரவிழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ (சின்ன சின்ன)சரணம் : 2

மழை கவிதை கொண்டு வருது
யாரும் கதவடைக்க வேண்டாம்

ஒரு கறுப்புக் கொடி காட்டி
யாரும் குடை பிடிக்க வேண்டாம்

இது தேவதையின் பரிசு
யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்

நெடுஞ்சாலையிலே நனைய
ஒருவர் சம்மதமும் வேண்டாம்

அந்த மேகம் சுரந்த பாலில்
ஏன் நனைய மறுக்கிறாய்

நீ வாழ வந்த வாழ்வில்
ஒரு பகுதி இழக்கிறாய்

நீ கண்கள் மூடிக் கரையும் போது
மண்ணில் சொர்க்கம் ஏதுவாய்

நீ கண்கள் மூடிக் கரையும் போது
மண்ணில் சொர்க்கம் மீளுவாய்

சக்கரவாகமோ மழையை அருந்துமாம்
நான் சக்கரவாகப் பறவையானேனோ
மழையின் தாரைகள் வைரவிழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

(சின்னச் சின்ன மழைத்துளிகள் )


அந்த பாடல் காட்சி :


தமிழ் பாடலில் ஒளிந்துள்ள அறிய கருத்துக்களை வெளிக்கொணர்க்கே இவ்முயற்ச்சி... என் வேலையை நான் செய்து விட்டேன் ரசித்தவர்கள் தயவு செய்து  கருத்து சொல்லிவிட்டு செல்லுங்கள்.. 
 
அன்பான வாசகர்களே இதை எப்போது படித்தாலும்  தங்களுடைய கருத்தை சொல்லுங்க.. அதுதான் என்னைமேலும் பதிவிட வலுசேர்க்கும்...
இதை தங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்துவையுங்கள்...
நன்றி..! நன்றி...!


55 comments:

 1. பழசெல்லாம் கெளறி விட்டுடீங்க சௌந்தர், எனக்கு பிடிச்ச சில பாடல்கள்-ல இதுவும் ஒண்ணு ..

  ReplyDelete
 2. எனக்கும் இந்தப் பாடல் ரொம்ப பிடிக்கும்..
  நன்றி..

  ReplyDelete
 3. நல்ல பாடல்..
  பகிர்வுக்கு நன்றியுடன் பாராட்டுக்களும்....


  http://sempakam.blogspot.com

  ReplyDelete
 4. அருமையான பதிவு
  பாடலுக்கான சூழலை விளக்கி
  பாடலின் பொருளைவிளக்கி
  அதன் சிறப்பை விளக்கி பின்
  அந்தப் பாடலைப் பார்க்கையில்
  ஆஹா..வித்தியாசமான அனுபவமாக உள்ளது
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர்ந்து வருவேன்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. நல்ல பாடல் தெரிவு... அதற்கான விளக்கங்களும் மிக அருமை....

  பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே.

  ReplyDelete
 6. என்ன சார் ஒரு வரி கூட விடாம எழுதிருக்கீங்க அதுவும் அதற்க்கான அர்த்தங்களுடன்

  ReplyDelete
 7. மிகவும் ரசித்த பிடித்த பாடல்....

  சொல்லிய விதம் அருமை சகோ

  தொடருங்கள்

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. எனக்கு பிடித்த பாடல்.

  ReplyDelete
 9. //சிறு சிற்பியிலே விழுந்தால்
  ஒரு முத்தெனவே மலர்வாய்...//

  சின்ன திருத்தம் சகோ..

  சிறு சிப்பியிலே விழுந்தால்
  ஒரு முத்தெனவே மலர்வாய்..//

  ReplyDelete
 10. நல்ல பாடல்
  நல்ல பதிவு!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 11. அட்டகாசமான மதிய உணவு..

  ReplyDelete
 12. சிறப்பான பதிவு.மிக நன்றாக உள்ளது சௌந்தர்.

  ReplyDelete
 13. நனைந்து விட்டேன் நன்றி!

  ReplyDelete
 14. நனைந்து விட்டேன் நன்றி.

  -சே.குமார்.
  மனசு. (http://vayalaan.blogspot.com)

  ReplyDelete
 15. நல்லாவே இருக்கு.
  பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 16. சின்ன சின்ன..அருமையான பல்லவி

  ReplyDelete
 17. அருமை.பாடலின் ஆழமான கருத்தை மிக அருமையாக விளக்கியிருக்கிறீர்கள்.பகிர்வுக்கு நன்றி சகோதரா.

  பெண்மையைப் பற்றி கொஞ்சம்....

  ReplyDelete
 18. அரவிந்த சாமி மழைய ரசித்தவாறே பாட அதை இஷா ரசித்தவாறே பார்க்க... இஷாவை நாம ரசித்தவாறே பார்க்க .... வைரமுத்து கவிதை மழையில் நனைந்து போலிருக்குது...

  ReplyDelete
 19. மழைப்பாடல் பற்றிய மகத்தான விமர்சனத்தைப் பகிர்ந்திருக்கிறீங்க,
  பாடல் பிறந்ததற்கான காரணம்,பொருள் விளக்கம் சிட்டுவேசன் விளக்கம் அனைத்தும் பாடல் விமர்சனத்திற்கு மேலும் வலுச் சேர்த்திருக்கிறது.

  ReplyDelete
 20. மிகவும் ரசித்த பிடித்த பாடல்...

  ReplyDelete
 21. அருமையான பதிவு
  பாடலுக்கான சூழலை விளக்கி
  பாடலின் பொருளைவிளக்கி
  அதன் சிறப்பை விளக்கி பின்
  அந்தப் பாடலைப் பார்க்கையில்
  ஆஹா..வித்தியாசமான அனுபவமாக உள்ளது
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர்ந்து வருவேன்
  தொடர வாழ்த்துக்கள்

  இதத்தானுங்க நானும் சொல்லுறன் .
  அருமையான படைப்பு .இந்த முனியம்மா
  கடையத் திறந்து வச்சிற்று வருவீக வருவீக எண்டு
  காத்துக்கிடக்குறனுங்க.வந்து கருத்தோடு கூடவே
  பிடிச்சா அந்த ஓட்டுகளையும் ரெண்டு கவிதைக்கும்
  அள்ளிப் போட்டுட்டு போங்க .என்ன நா சொல்லுறது .ஹி ...ஹி ..ஹி ...

  ReplyDelete
 22. நல்லாருக்கு சௌந்தர்

  ReplyDelete
 23. தமிழ் பாடலை ரசித்து அருமையான விளக்கத்துடன் எழுதியுள்ளீர்கள்.ரசனை பாராட்டுக்குரியது.என்னுடைய ரசனையையும் பாருங்கள். http://chandroosblog.blogspot.com/2010/10/blog-post_25.html

  ReplyDelete
 24. //ஒரு கறுப்புக் கொடி காட்டி
  யாரும் குடை பிடிக்க வேண்டாம்// அசந்து மறந்து குடைபிடிச்சதுக்கு வருத்தப் படுகிறேன்.
  //இவள் கன்னி என்பதை இந்த மழை
  கண்டறிந்து சொல்லியது// இதுல ஏதும் உள் குத்து இருக்கா?புரியலயே

  ReplyDelete
 25. அன்புடையீர்,
  இதைப்போன்ற பல பாடல் வரிகளை ரசித்திருக்கிறேன். நல்ல கருத்துக்களை பகிர்ந்து கொள்ள அழகான அருமையான அற்புதமான முயற்சி. பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் பணி

  ReplyDelete
 26. அட இன்னா பாஸ் நீங்க?
  நம்ம சைட்டுக்கு வாங்க!
  கருத்து சொல்லுங்க!!
  நாங்களும் பாட்டு எழுதுவோம்ல!

  ReplyDelete
 27. இன்றைய வலைச்சரத்தில் - பாட்டு பாடவா, பார்த்து பேசவா....

  http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_14.html

  உங்களது பக்கம் பற்றி சுட்டி கொடுத்திருக்கிறேன். பாருங்களேன்....

  நட்புடன்

  ஆதி வெங்கட்.

  ReplyDelete
 28. என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவுகளுக்கும் உரித்தாகட்டுக்கும் மிக்க நன்றி பகிர்வுக்கு ......

  ReplyDelete
 29. அன்பு சகோதரா, இந்த வலைபதிவு முயற்சி மிகவும் அருமை, தமிழர்கள் தமிழில்
  பிண்ணூட்டமிட, தமிழ் எழுதியை நிறுவி வாசகர்களுக்கு உதவலாமே, அதிக
  விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் நன்றி

  ReplyDelete
 30. arumaiyaa irukku sir,
  vunkalukku neram iruntha ennoda websita paarrka muyarchi pannunka
  www.basith619.blogspot.com

  ReplyDelete
 31. Hi i am JBD From JBD

  Hi i Read Your Information its Really Very interesting & Usefull!


  Visit My Website Also : www.cutcopypaste.co.in , www.indiai365.com , www.classiindia.com , www.jobsworld4you.com

  ReplyDelete
 32. you lines are simply super super super. i written some tamil kavithai in my blog.
  please check and give ur comments
  http://alanselvam.blogspot.com/

  ReplyDelete
 33. கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின், பொருள் பொதிந்த திரைப்பட பாடலைத் தந்தமைக்கு நன்றி. பாட்டைகேட்கும்போது தெரியாத பல உவமைகள் படிக்கும்போதுதான் தெரிகிறது.

  ReplyDelete
 34. நல்ல பாடல்.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 35. ஏன் இப்போதெல்லாம் பாடல்
  பதிவு எழுதுவது இல்லை?

  ReplyDelete
 36. நண்பரே,

  என் சுவாசக் காற்றே படத்தை ரசித்ததை விட இந்த பாடலை மிகவும் விரும்பி ரசித்திருக்கிறேன்.

  இந்த பாடலை எப்போது கேட்க நேர்ந்தாலும் என் கண்கள் உடனே மூடிக் கொள்ளும், (டிரைவிங் நேரங்களைத் தவிர்த்து! உடனே மூடிய என் கண்களுக்குள் நான் விரும்பிய படியான மழைக் காட்சிகள் உயிர் பெற்றுவிடும்.

  மழைக் காட்சிகள் மட்டும் அல்ல, நானும் சகோதரிகளும் சேர்ந்து திட்டம் போட்டு வீட்டிலே, வேண்டும் என்றே தண்ணீர் மோட்டாரை போட்டு, மேல்நிலைத் தொட்டியை வழிந்தொட விட்டு,பின் மாடியில் இருந்து கொட்டிய தண்ணீரில், தரைத்தளத்தில் நானும் மற்ற சகோதரிகளும் நனைந்த காட்சிகளும் ஓடும். அதில் கிடைத்த சந்தோஷம், அந்த செய்கையினால் கிடைத்த திட்டுக்களை ஒன்றும் இல்லாமல் செய்துவிட்டது.

  இன்றும் அந்த பாடல் தொலைக்காட்சியில் ஓடும் போது, அந்த சேனலை மாற்ற யாரையும் அனுமதித்தது இல்லை.

  பல வருடங்களுக்கு முன் ஒரு நாள் இந்த பாடலை ரசிக்கும் காரணத்தை மனைவி கேட்டார். நீங்கள் இந்த பாடலை அலசியது போன்றே நானும் என் மனைவிக்கு வரிக்கு வரி விளக்கியது நினைவிற்கு வருகிறது. உமது ரசிப்புத் தன்மைக்கு எனது பாராட்டுக்கள். ரசிகர் வைரமுத்துவிற்கும் எனது பாராட்டுக்கள்.

  ஒவ்வொரு மழை நாளிலும் கையை ஜன்னல் கம்பிகளின் வழியே நீட்டி மழையை ஸ்பரிசிக்கும் போதும் என் மனதில் எழும் உணர்வில் இரண்டு விஷயங்கள் நிறைந்திருக்கும். ஒன்று, இந்த பாடல், இரண்டு, யார் சொன்னது இந்த உலகம் மாயை என்று!, அப்படி சொல்பவர்கள் மழை நாளில் ஜன்னலுக்கு வெளியே நீட்ட கைகள் (இருந்தும்) இல்லாதவர்கள்!.

  அன்புடன்,
  பாலாஜி சுந்தர்.
  www.picturesanimated.blogspot.com

  ReplyDelete
 37. அருமை விளக்கம் நன்றி சகோ

  ReplyDelete
 38. தமிழ் மணத்தில் இன்றைய மதவாத பதிவுகள்!

  இன்றைய காப்பி அண்ட் பேஸ்ட் இணையதளங்கள்!

  தமிழ் நாத்தம் ஒரு அறிமுகம்!

  அன்புள்ள தமிழ் வாசக நெஞ்சங்களே நீங்கள் அறிந்த தகவல்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் கருத்துக்களை பதியவேண்டிய முகவ்ரி. tamilnaththam@gamil.com

  please visit: www.tamilnaththam.blogspot.com

  ReplyDelete
 39. வணக்கம்

  அழகிய பதிவு! அமுதமாய் இனித்தது

  கவிஞா் கி.பாரதிதாசன்
  தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
  http://bharathidasanfrance.blogspot.fr/
  kavignar.k.bharathidasan@gmail.com
  kambane2007@yahoo.fr

  ReplyDelete
 40. அருமையான பாடல்களைப் பகிர்ந்துள்ளீர்கள்.
  நன்றி சௌந்தர்.

  உங்களின் மற்றொரு வலையைத் திறந்தால்
  துள்ளுகிறதே... ஏன்..?
  நாங்கள் படிக்கக்கூடாது என்பதாலா...?

  ஏதோ இம்முறை இந்தப் பதிவையாவது படிக்க முடிந்தது.
  நன்றி.

  ReplyDelete
 41. ரசனையை மேம்படுத்த உதவும் அற்புதமான பதிவுகள்....

  தயவு செய்து தொடருங்கள்... காத்திருக்கிறோம்...

  ReplyDelete
 42. மழை எனக்கு மிகவும் பிடிக்கும் .கவிதை டிட்டோ,பாடல் டிட்டோ.so இந்த துளி என்னுள் விழுந்த மழை துளி.இதே போல நானும் என்நண்பர்களிடம் பாட்டுக்களை பற்றி பேசிகிட்டே இருப்பேன்.இனி இங்கவந்து பேசலாம் போல் இருக்கு.அனல் மேலே சாங் பத்தி எழுதியிருகிங்களா?

  ReplyDelete
 43. என்ன ஒரு அருமை.....

  ReplyDelete
 44. ரசனையை மேம்படுத்த உதவும் அற்புதமான பதிவுகள்....

  தயவு செய்து தொடருங்கள்... காத்திருக்கிறோம்...
  அழகிய பதிவு
  இதைப்போன்ற பல பாடல் வரிகளை ரசித்திருக்கிறேன். நல்ல கருத்துக்களை பகிர்ந்து கொள்ள அழகான அருமையான அற்புதமான முயற்சி
  https://www.youtube.com/edit?o=U&video_id=y0FRW0rdoMc

  ReplyDelete
 45. மிகவும் அருமையாக உள்ளது.
  https://www.youtube.com/edit?o=U&video_id=3FaLl1XSxi8

  ReplyDelete
 46. அருமை
  https://www.youtube.com/edit?o=U&video_id=6AkN3c3KcXc

  ReplyDelete
 47. SUPER ARTICLE
  https://www.youtube.com/edit?o=U&video_id=UoVgDL90wn8

  ReplyDelete
 48. https://www.youtube.com/edit?o=U&video_id=TiUW_1Q7blQ

  ReplyDelete
 49. super
  https://www.youtube.com/edit?o=U&video_id=n83X_kuW96U

  ReplyDelete
 50. super post
  https://www.youtube.com/edit?o=U&video_id=DHjNC-t4iZs

  ReplyDelete
 51. excellent post
  https://www.youtube.com/edit?o=U&video_id=-ayAOu1QPnw

  ReplyDelete

படிச்சி முடிச்சாச்சா..
தட்டிக் கொடுங்கள் அதை அடைக்கத்துக் கொள்கிறேன்...
இல்லையென்றால்
குட்டு வையுங்கள் அதை உரமாக்கிக் கொள்கிறேன்..
தட்டலோ குட்டோ அவசியம் பதிவு செய்யுங்கள்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...