Showing posts with label வைரமுத்து. Show all posts
Showing posts with label வைரமுத்து. Show all posts

Wednesday, May 15, 2013

ஒரு பண்பாடு இல்லையென்றால்...


பாடலுக்கான சூழ்நிலை :

பட்டணத்துக்கு நடிக்க ஆசைப்ட்டு  தவறான ஒருக்கு உதவிசெய்ய அரண்மனையில் வேலைக்கு ‌சேறுகிறார் நாயகன் (ரஜினி). அங்கு ஆள்மாறட்டம் செய்து இருந்தாலும் இவர் தவறு செய்யாமல் இருக்கிறார். அந்த வீட்டில் இர்ந்துக் கொண்டு அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார்.. அப்படியிருக்க அந்த வீட்டில் இருக்கும் மூத்த மகள் தன் பிறந்த நாளை நாயகனுக்கு தெரியாமல் நண்பர்களுடன் போதை? ஆடல் பாடலுடன் கொண்டாடுகிறார். இதை பார்க்கும் இளைஞர்கள் இப்படி குடித்து விட்டு தன்னை மறந்து தன்னுடைய பண்பாட்டை மறந்து இப்படி கெட்டுப் போகிறார்களே.. என்று மனநொந்து பாடுவதாத இந்த பாடல் அமைந்துள்ளது...

பாடல் விளக்கம் :

மேலை நாட்டு கலாச்சாரம் எவ்வாறு நமது நாட்டில் புற்று நோய் போல மெல்ல மெல்ல நமது பண்பாட்டை சீரழித்து வருவதை எளிமையான பாடல் வரிகளில் அமைத்துள்ளார் கவிப்பேரரசு.

புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பெண்களும் ஆண்களும் அநாகரிகமாக குத்தாட்டம் போடுவதும், மது பானங்கள் குடிப்பதும், வயது வித்தியாசம் இல்லாமல் கூத்தடிப்பதும் கலாச்சார சீரழிவின் உச்ச கட்டம்.

இப்படி நம் தேசத்திற்கு என்று இருக்கும் பண்பாட்டை மறந்து இப்படியிருக்கிறார்களே என்று வேதனைப்படுவதாக உள்ளது தீய பழக்கமானது முதலில் சாதாரனமாக வந்து பின்பு அது நம்மை அடிமைப்படுத்திவிடும் என்று கவிப்பேரரசு மிகவும் தெளிவாக குறிப்பிட்டு இருப்பார்...

பொதுவாக பாவத்தை போக்க கங்கையில் குளிப்போம் ஆனால் பண்பாடு தவறியவர்கள் கங்கையில் குளித்தால் அந்த கங்கையே அழுக்காகி விடும் என்ற வரிகள் இந்த பாடலை உச்சத்தில் வைக்கிறது..
மயக்கம் என்பது ஒரு மாத்திரையில் இல்லை விளக்குள் இறுந்தும் இப்படி இருட்டுக்குள் வாழ்வது சரியா? தம் தேசம் உன்னை அழைத்துக் கொண்டிருக்கிறது ஏன் இப்படி கொட்டுப்போகிறாய் என்று அந்த பாடல் விளக்குகிறது..

‌‌ஜேசுதால் குரலில் மிகவும் இனியாக இருக்கும் இந்தபாடல் ஒரு பங்ளாவில் படமாக்கப்பட்டிருக்கும். காட்சிகள் வரி‌களட நம்மை கண்டிப்பாக ஆட்கொள்ளும்..

பாடல் விவரம் :

படம்: ராஜா சின்ன ரோஜா
இசை: சந்திரபோஸ்
பாடியவர்: KJ ஜேசுதாஸ்
வரிகள்: வைரமுத்து
‌வெளிவந்த ஆண்டு : 1989

அந்த பாடல் வரிகள் :

ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை
நம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை
சிறகில்லாமல் தள்ளாடும் செல்ல கிளிகள்
என் கண்ணோரம் இப்போது கண்ணீர் துளிகள்  (ஒரு பண்பாடு..)

வளர்ந்து வராத பிறை இல்லை
வடிந்து விடாத நுரை இல்லை
திரும்பி வராத பகல் இல்லை
திருந்திவிடாத மனம் இல்லை
ஒரு நாள் சுவைப்போம் என்று நினைத்தால்
ஒரு நாள் சுவைப்போம் என்று நினைத்தால்
உயிரை சுவைக்கும் பொய் இல்லை
இதை இன்பம் என்பது இழக்காகும்
நீ குளித்தால் கங்கை அழுக்காகும்   (ஒரு பண்பாடு..)

மயக்கம் என்பது மாத்திரையா
மரணம் போகும் யாத்திரையா
விளக்கு இருந்தும் இருட்டரையா
விடிந்த பின்னும் இருட்டறையா
வரம்பு கடந்து நரம்பு தளர்ந்து
வரம்பு கடந்து நரம்பு தளர்ந்து
இந்த உலகம் உன்னை அழைக்கிறது
அட இன்னும் வாழ்க்கை இருக்கிறது  (ஒரு பண்பாடு..)
 
அந்தப்பாடலையும் பாருங்களேன்..


கண்டிப்பாக 
ஓட்டுகளும்.. பின்னுட்டமும் நம்மை ஒண்றினைக்கும்...

Monday, August 22, 2011

மேகம் சுரக்கும் பால்...இதில் தைரியமாய் நனையலாம்....


படத்தில் பாடலுக்கான சூழல் :

நாயகன் (அரவிந்தசாமி) தன்னுடைய அண்ணன் (பிரகாஷ்ராஜ்) சொல்லுக்கு கட்டுப்பட்டு திருட்டு வேலையை செய்து வருபவர். அப்படி ஒரு இடத்தில் இரவில் திருட செல்லும்போது உறங்கிக் கொண்டிருக்கும் நாயகியை பார்க்கிறார். அங்கு நாயகியின் டைரியை அவருக்கு தெரியாமல் எடுத்துக் கொண்டு வந்துவிடுகிறார். அந்த டைரியில் நாயகி எழுதி வைத்திருக்கும் கவிதைதான் இந்த பாடல் என சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

நாயகியை கவர்வதற்க்காக அவருக்கு தெரியாமல் ஒரு நாள் மழையில் நாயகியின் கவிதையை நாயகன் பாடலாக பாடும் படி படக்காட்சிகள் அமைந்துள்ளன. அந்த பாடலை பாடும் நாயகனை நாயகி பின்தொடர்ந்து வருவார்.

பாடலுக்கான விளக்கம் :

வைரமுத்துவிடம் ஒரு காட்சி விளக்கப்பட்டப்பின் அந்தகாட்சியில் மிகவும் ஒன்றிவிடுவார். மேலும் அந்த காட்சி அந்த சூழ்நிலை அவற்றைப் பொருத்து அவர்பயன்படுத்தும் வார்த்தைகள் கவிதையின் உச்சமாக இருக்கும் அப்படி அவர் எழுதிய இக்கவிதையும் மழையின் மகிமையை உச்சத்திற்க்கு கொண்டு செல்வதுதான்.
 சிந்தும் இந்த மழைத்துளியை எடுத்து சேர்த்து வைத்து அதை அந்த மின்னல் கொண்டு மாலையாக கோர்த்துவிடலாம். கொட்டுகின்ற மழையை அப்படியே பிடித்து மழை நீரை அருந்தும் சக்கரவாக  பறவைப்போன்று எனக்கும் இந்த மழை பருக ஆசையாக இருக்கிறது.


மழையை ஒரு துளி விழுது என்பார். ஆலமரத்தில் தொங்கும் விழுதுபோன்று வானிலிருந்து ஒரு துளியாய் விழும் இதுவும் ஒரு விழுது என்று பாடலை ஆரம்பிக்கிறார். இந்த விழுதுகளை பிடித்து அப்படியே வானில் ஏறிவிடலாம் போலிருக்கிறதே...
 

மழை நீர் மிகவும் சுத்தமானது..  (ஆனால் முதலில் வரும் மழை அமில மழை என்று அறிவியல் கூறுகிறது) அந்த தூய நீர் சேரும் இடத்திற்க்கு ஏற்றார் போல் மாறிவிடும். பூவில் தேனாகவும், சிப்பியில் முத்தாகவும் பாவிப்பது மழை நீர்தான் தற்போது அவர் மீது விழுந்ததால் கவிதையாகவும் மாறிவிடுகிறதாம்.

இந்த இயற்கை அன்னை அனைவரும் குளிக்க அமைத்த மிகப்பெரிய ஷவராம்...  இளைய வயதில் மழையில் நனைவது மிகவும் சுகமானது... இந்த இளைய வயதில் நனையாமல் பிறகு எந்த வயதில் நனைவது என்று ஆதங்கத்துடன் எழுதியுள்ளார்


மழை என்பது தூரல், இடி, சாரல், மேகம், வானவில், என அத்‌தனையும் சுமந்து ஒரு கவிதைப்பேன்று வருகிறது அதை எதிர்த்து கதவடைத்தால் எப்படி... மழைப்பெய்தால் குடைப்பிடிப்போம் அதை கருப்புகொடியாக வர்ணனை செய்கிறார்.


மழை என்பது வான்தேவதை நமக்கெல்லாம் தந்த பரிசு யாரும் திரும்பிக் கொள்ளாதீர்கள்.. நெடுஞ்சாலையில் நனைய எவருடைய சம்மதமும் வேண்டாம்.. மழை ‌என்பது மேகம் சுரந்த பால் அதில் நனைவதற்க்கு ஏன் தயக்கம் அப்படி மழையில் நனையவில்லையென்றால் நாம் வாழ்நாளில் பாதி இழந்ததற்க்கு சமம்.. இந்த கண்களை மூடி நனைந்து இந்த மண்ணில் சொர்க்கம் காண்போம் என உணர்வுப்பூர்வமான வடிக்கப்பட்டுள்ளது இக்கவிதை.
 
பாடலுக்கான விவரங்கள் :


திரைப்படம்: என் சுவாசக் காற்றே
வெளிவந்த வருடம்: 1999
இயற்றியவர்: கவிப்பேரரசு வைரமுத்து
பாடியவர்: எம்.ஜி. ஸ்ரீரிகுமார்
இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரஹ்மான்

அந்த பாடல் வரிகள் :

சுரம் :
ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
ஒரு துளி விழுது ஒரு துளி விழுது

ஒரு துளி... இரு துளி...
சிறு துளி... பல துளி...

பல்லவி :
 
சின்னச் சின்ன மழைத்துளிகள்
சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூல் எடுத்துக்
கோர்த்து வைப்பேனோ
 
அனு பல்லவி:  

சக்கரவாகமோ மழையை அருந்துமாம்
நான் சக்கரவாகப் பறவையானேனோ
மழையின் தாரைகள் ஈரவிழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

(சின்னச் சின்ன மழைத்துளிகள் )

சரணம் : 1

சிறு பூவினிலே விழுந்தால் 
ஒரு தேன்துளியாய் வருவாய்...

சிறு சிப்பியிலே விழுந்தால்
ஒரு முத்தெனவே மலர்வாய்...

பயிர் வேரினிலே விழுந்தால்
நவதானியமாய் விளைவாய்...

என் கண்விழிக்குள் விழுந்ததனால்
கவிதையாக மலர்ந்தாய்
 
அந்த இயற்கை அன்னை படைத்த
ஒரு பெரிய ஷவரிது...

அட இந்த வயது கழிந்தால்
பிறகெங்கு நனைவது...

இவள் கன்னி என்பதை இந்த மழை
கண்டறிந்து சொல்லியது

சக்கரவாகமோ மழையை அருந்துமாம்
நான் சக்கரவாகப் பறவையானேனோ
மழையின் தாரைகள் வைரவிழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ (சின்ன சின்ன)



சரணம் : 2

மழை கவிதை கொண்டு வருது
யாரும் கதவடைக்க வேண்டாம்

ஒரு கறுப்புக் கொடி காட்டி
யாரும் குடை பிடிக்க வேண்டாம்

இது தேவதையின் பரிசு
யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்

நெடுஞ்சாலையிலே நனைய
ஒருவர் சம்மதமும் வேண்டாம்

அந்த மேகம் சுரந்த பாலில்
ஏன் நனைய மறுக்கிறாய்

நீ வாழ வந்த வாழ்வில்
ஒரு பகுதி இழக்கிறாய்

நீ கண்கள் மூடிக் கரையும் போது
மண்ணில் சொர்க்கம் ஏதுவாய்

நீ கண்கள் மூடிக் கரையும் போது
மண்ணில் சொர்க்கம் மீளுவாய்

சக்கரவாகமோ மழையை அருந்துமாம்
நான் சக்கரவாகப் பறவையானேனோ
மழையின் தாரைகள் வைரவிழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

(சின்னச் சின்ன மழைத்துளிகள் )


அந்த பாடல் காட்சி :


தமிழ் பாடலில் ஒளிந்துள்ள அறிய கருத்துக்களை வெளிக்கொணர்க்கே இவ்முயற்ச்சி... என் வேலையை நான் செய்து விட்டேன் ரசித்தவர்கள் தயவு செய்து  கருத்து சொல்லிவிட்டு செல்லுங்கள்.. 
 
அன்பான வாசகர்களே இதை எப்போது படித்தாலும்  தங்களுடைய கருத்தை சொல்லுங்க.. அதுதான் என்னைமேலும் பதிவிட வலுசேர்க்கும்...
இதை தங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்துவையுங்கள்...
நன்றி..! நன்றி...!


Thursday, July 28, 2011

அடத்தமிழா நாளை என்பது யாருக்கு..?

பாடலுக்கான சூழ்நிலை :


ஒரு கிராமத்துப் பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள ஆசைப்படும் நாயகன் ரிஷி (அரவிந்தசாமி) பூஙகுடி கிராமத்திற்கு சென்று அங்கு அக்காவை ‌ பெண்பார்க்க சென்று, பின்பு அங்கு நடக்கும் பிரச்சனையால் அவளுடைய தங்கையான ரோஜாவை (மது) திருமணம் செய்துக் கொண்டு நகருக்கு வந்து விடுகிறார். பின்பு தேன்நிலவுக்காக காஷ்மீர் பகுதிக்கு செல்கிறார். அங்கு தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறார். (படத்தின் கதை இந்த கடத்த‌ல் மற்றும் தீவிரவாத ஒழிப்பை மையப்படுத்தி வருகிறது) அப்படி தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் போது ஒரு தீவிரவாதியால் இந்திய தேசியக்கொடி தீயிட்டுக் கொளுத்தப்படுகிறது. ‌தேசிய உணர்வுடன் அந்த தீயை அணைத்து ‌தேசியக் கொடியை காப்பது போன்று காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அந்த காட்சியின் பிண்ணனியில் இப்பாடல் ஒளிபரப்பாகும்.

பாடலுக்கான பொருள் :

தமிழ் மொழி இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, உள்ளிட்ட உலகநாடுகளில்  63+ மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.  முதல் 20 உலக மொழிகள் பட்டியலில் 18 வது இடம் பிடித்திருக்கிறது.  அப்படி சிறப்பு வாழ்ந்த மொழியைப்பற்றி வைரமுத்து அவர்களால் இயற்றப்பட்டப்பாடல் தான் இது.
 

தமிழனே நாளை நம்முடையது.. இந்த நாடு என்பதும் நம்முடையது. நம்முடைய வீடு எது என்றுக் கேட்டால் அது தமிழ்நாடு என்று சொல்லுங்கள். அதுவே நம்முடைய உணர்வு இந்தியன் என்று இருக்கட்டும்.

இந்தியாவில்  பல்வேறு இனங்கள் நிறைந்துள்ளது ஆனால் குணத்தால் நாம் ஒன்றுப்படுகிறோம். 

அரபியும் விரிகுடாவும் கைகோர்க்கும் கன்னியாகுமரியோ அல்லது இமையத்தில் உயர்ந்து நிற்க்கும் காஷ்மீரோ இடம் ஏதுவாக இருந்தாலும் நிலத்தால் அது ஒன்றாகிறது.

மொழிகள் மாறலாம் பொருளில் மட்டும் ஒன்றாகத்தான் இருக்கிறது. கலி மாறலாம் (கலி என்பது காலத்தை குறிக்கிறது.) இனி எத்தனை ஆண்டுகள் யுகங்கள் மாறினாலும் நம்முடைய தேசியக் கொடி  தேசிய உணர்வு மாறாது.

எட்டு திசைகளில் மாற்றங்கள் இருக்கும் அது எங்கள் நிலத்தை மாற்ற முடியாது. இசைகள் மட்டும் சுரங்கலாம் மாறிப்போகலாம் மொழிகலாள் அவை ஒன்றுதான். நம்முடைய இந்தியா அது ஒன்றுதான்.

தமிழனே கலங்காதே தமிழனாக இருந்தாலும் உனக்குள் இருப்பது இந்திய ரத்தம் ஒன்றான இந்த பாரதம் உன்னைக்காக்கும்.


பாடலின் விவரம் :


திரைப்படம்:   ரோஜா (1992)
பாடல்: தமிழா தமிழா
பாடகர்:  ஹரிஹரன்
இசை:  AR. ரெஹ்மான்
பாடல் ஆசிரியர்:  வைரமுத்து
படத்தின் இயக்கம் : மணிரத்தினம

அந்த பாடல் வரிகள் :
பல்லவி :
தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே(2)

என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே


சரணம் -1

இனம் மாறலாம் குணம் உண்டு தான்
இடம் மாறலாம் நிலம் ஒன்று தான்
மொழி மாறலாம் பொருள் ஒன்று தான்
கலி மாறலாம் கொடி ஒன்று தான்
திசை மாறலாம் நிலம் ஒன்று தான்
இசை மாறலாம் மொழி ஒன்று தான்
நம் இந்தியா அதும் ஒன்று தான்

தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் கலங்காதே(2)

உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா
ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா

தமிழா தமிழா நாளை நம்நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

நவபாரதம் பொதுவானது
இது வியர்வையால் உருவானது...

அந்தப்பாடலிக் காணொலி காட்சி :


அன்பான வாசகர்களே இதை எப்போது படித்தாலும்  தங்களுடைய கருத்தை சொல்லுங்க.. அதுதான் என்னைமேலும்  வலுசேர்க்கும்... 
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி... நன்றி...



Saturday, January 29, 2011

பொன்மாலைப் பொழுது...


திரை இசை தமிழ் பாடல்களில் வளமான பாடல்கள் நம்மில் இருக்கிறது... அவற்றின் ஒளிந்துக்கிடக்கும் ஒருசில பாடல்களில் ஒன்றை இன்று தந்திருக்கிறோன் (என் அறிவுக்கு எட்டிய அளவுக்கு) இப்பாடலைப்பற்றி இன்னும் தகவல்கள் இருந்தால் பின்னுட்டத்தில் தெரியப்படுத்தவும்.

பாடலின் விவரம் :


பாடல் : பொன் மாலை பொழுது!!
படம் : நிழல்கள்  
வெளிவந்த நாள் : நவம்பர் 6, 1980
குரல் : S.P.பாலசுப்பிரமணியம்
இசை : இசை ஞானி இளையராஜா.
பாடலாசிரியர் : வைரமுத்து (இது வைரமுத்து திரைக்காக எழுதிய முதல் பாடல்)
படத்தின் இயக்கம் : பாரதிராஜா
பாடலில் நடித்தது : சந்திரசேகர்
 

பாடலுக்கான சூழ் நிலை :

ஓர் இளைஞன் கலா ரசிகன், வாழ்க்கையை மிகவும் நேசிப்பவன், சமூகத்தில் இருக்ககூடிய சிக்கல்களை தீர்க்க நினைப்பவன், ஆனால் அதற்கான தீர்க்கமான முடிவு தெரியாதவன் அப்படி இருக்கும் ஒரு இளைஞன் ஒரு மாலை நேரத்தில் மண்ணில் கொட்டிக் கிடக்கும் இயற்கை அழகை ரசித்து பாடும் படி இந்த பாடல் அமைந்துள்ளது.
பாடலுக்கானப் பொருள் :

மாலை நேரம் பகலின் தோலுரித்தி இரவு ஆடை அணிந்துக் கொள்ளும். அந்தநேரத்தில் இருக்கும் வண்ணமானது என்து வாசலில் கோலமிட்டு வானமானது இரவுசெல்ல பாலம் அமைத்து கொடுக்கும் போது பறவைகள் தாளமிட்டு இரவை வழியனுப்பும்.... இந்த வானம்தான் எனக்கு ஞானத்தை கொடுக்கும்.. கேள்விகளாளே எனது வேள்விகள் நடக்கும் என்று நாயகன் இயற்கையை பார்த்து பாடுகிறார். பாடல் காட்சியில் மாலைப் பொழுதை தன் கண்முன்னே கொண்டு காட்டியிருப்பார் பாரதிராஜா.

இதோ அந்த பாடல் வரிகள் :


பல்லவி

ஹே ஹோ ஹிம் லலா

பொன் மாலைப் பொழுது
இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானம் மகள் நானுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலைப் பொழுது

சரணம் -1

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ... (இது..

சரணம் -2

வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் சேதி வரும்
கேள்விகளால் வேள்விகளை நான் செய்தேன்... (இது...



விடுப்பட்ட  சரணம் -3

(வைரமுத்து அவர்களால் எழுதப்பட்டு பாடலில் இடம் பெறாத மூன்றாவது சரணம்)

”இரவும் பகலும் யோசிக்கிறேன்
எனையே தினமும் பூசிக்கிறேன்
சாலை மனிதரை வாசிக்கிறேன்
தீயின் சிவப்பை நேசிக்கிறேன்
பேதங்களே... வேதங்களா.. கூடாது..  (இது...

என்பது தான் அது.

இப்போது இந்த பாடலையும் கேட்டு ரசியுங்கள்...


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...