Wednesday, March 16, 2011

சின்னத் தாயவள் தந்த ராசாவே.........


 பாடலுக்கான சூழ்நிலை :

நாயகன் பிறந்த உடனே அவரது தாய், அனாதையாக ஒரு கூட்ஸ் வண்டியில் அனுப்பிவிடுகிறார். இப்படி சிறுவயதில் குழந்தை பெற்றுவிட்டோமே என்று  இவ்வாறு முடிவெடுக்கிறார். நாயகன் ஒரு குப்பத்தில் ஒரு பாட்டி எடுத்து வளர்த்து ஆளாக்குகிறார். 

சூர்யா என்ற பெயரில் ஒரு ரவுடியாக வளர்ந்து வருகிறார். தன்னை இப்படி அனாதையாக விட்டு விட்ட தாயின் மிகவும் கோவாமாக இருக்கிறார்.  அதற்குபின் வளர்ந்து தன் தாயைப்பற்றிய உண்மையை அறிந்து அந்த தாய் யாருரென்று அடையாளம் காணுகிறார். தன்னுடைய தாயை முதல்முதலாய் காண ஒரு கோயிலுக்கு வருகிறார் நாயகன். அப்போது தன் தாயை அவருக்கு தெரியாமல் பார்க்கிறார். நான் ஒரு ரவுடி அந்த தாயிக்கு நான் தான் மகன் என்ற உண்மையை சொல்லக்கூடாது என்று முடிவெடுக்கிறார். அந்த சூழ்நிலையில் இப்படல் இடம்பெருகிறது.
.

பாடலுக்கான பொருள் :

ஒரு சின்ன தாயால் உறுவான ராசாவே.. நீ முள்ளில் தோன்றினாலும் நீயும் ஒரு ரோசாதான். உன்னை விட்டுவிட்ட பிறகு உன்னை எப்படியாவது கண்டுபிடிக்கவேண்டும் என்று அவள் அழுகிறாள்.. நீயும் தாய் வேண்டி அழுகிறாய்.. வெண்ணிலா தேயும் வரம் பெற்றது ஆனால் என்நிலா தேயாது.. மகனே உன்னை இந்த நெஞ்சோடு அனைக்காது இந்த உலகை விட்டு பிரியாது என்று ஏக்கத்தோடு பாடுகிறார்.

உன்னுடைய முகம் பால் மணம் வீசக்கூடியது.. உன் பார்வையில் தாய் மனம் பொங்கி வழிகிறது உன்னை வரம் வாங்கி பெற்றெடுத்தேன்.. ஆனால் வெய்யிலில் உன்னை வாட வைத்துவிட்டேனே.. இந்த தெய்வம் அந்த கோயிலை சென்று சேரும் நாள் எப்போது.. என்ற பொருள் படும்படி பாடல் இயற்றப்பட்டுள்ளது.

பாடலின் சிறப்புகள் :

1. தமி‌ழ் இருக்கும் அம்மா பாடலில் எப்போதும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்த பாடல்.

2.மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்த இப்படத்தில் வரும் இபபாடலில் ரஜினியின் நடிப்பு தாய் பாசத்திற்காக ஏங்கும் அவரது முகபாவனை சிறப்பாக இருக்கும்.

3.இத்திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்களான அர்ஜூனன் (அர்ஜீன்) கர்ணா (சூர்யா), துரியோதனன் (தேவ்ராஜ்) போன்றவர்கள் மகாபாரதக் கதையில் பின்னப்பட்ட கதாபாத்திரங்கள் என்பதாக பலரும் கருதுவது குறிப்பிடத்தக்கது.
 4. இளையராஜாவின் இசை, ஜானகி அம்மாவின் குரல்,  ஸ்ரீவித்யாவின் நடிப்பு,  சந்தோஷ் சிவத்தின் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது.
 
பாடலின் விவரம் :

படம்: தளபதி
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: எஸ்.ஜானகி
இயக்கம் : மணிரத்தினம்
வெளிவந்த ஆண்டு : 1991


ஷஅந்த பாடலின் வரிகள் :


பல்லவி

ம்.. ம்ம்.. ம்ம்.. ம்ம்..

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ.. நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ   (சின்னத் தாயவள்


சரணம் -1 
தாயழுதாளே நீ வர.. நீயழுதாயே தாய் வர
தேய்பிறை காணும் வெண்ணிலா
தேய்வது உண்டோ என் நிலா
உன்னை நான் இந்த நெஞ்சில் வாங்கிட
மெத்தை போல் உன்னை மெல்லத் தாங்கிட
விழி மூடாதோ.   (சின்னத் தாயவள்


சரணம் -2 
பால்மணம் வீசும் பூமுகம்.. பார்க்கையில் பொங்கும் தாய் மனம்
ஆயிரம் காலம் ஓர் வரம் வேண்டிட வந்த ஓர் வரம்
வெயில் வீதியில் வாடக் கூடுமோ
தெய்வக் கோயிலைச் சென்று சேருமோ
எந்தன் தேனாறே..  (சின்ன தாயவள்)


அந்த பாட்டையும் கொஞ்சம் கேளுங்க...

படிச்சிட்டு போயிட்டா எப்படி...
ஏதாவது சொல்லிட்டு போங்க..

இந்தப்பாடல் வேடந்தாங்கல் கரன் அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடல்...

14 comments:

  1. ஜானகி அம்மாவின் குரல் இன்னும் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.. அருமையான பாடல் நினைவூட்டியதற்கு பாட்டு ரசிகனுக்கு கோடானகோடி நன்றிகள்..

    ReplyDelete
  2. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
    வடை போச்சே....

    ReplyDelete
  3. ரொம்ப நாளா ஆளையே காணோம் எங்கேய்யா போனீர்....?

    ReplyDelete
  4. அழகான பாடல்

    ReplyDelete
  5. பகிற்வுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  6. எனக்கும் மிகப்பிடித்த பாடல் இது!

    ReplyDelete
  7. இனிய பாடல். பகிர்வுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  8. எனக்கும் புடிச்ச பாட்டுய்யா இது மாப்ளய்க்கும் புடிக்குமா சர்தான் நன்றி நண்பா

    ReplyDelete
  9. தங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி!
    http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_4203.html

    ReplyDelete
  10. டும்டும்...டும்டும்...

    பாடலின் விளக்கம் அருமை.
    வலைசரத்தில் அறிமுகம் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  11. இனிய பாடல்.பாடலின் விளக்கம் அருமை.வாழ்த்துக்கள்..

    ReplyDelete

படிச்சி முடிச்சாச்சா..
தட்டிக் கொடுங்கள் அதை அடைக்கத்துக் கொள்கிறேன்...
இல்லையென்றால்
குட்டு வையுங்கள் அதை உரமாக்கிக் கொள்கிறேன்..
தட்டலோ குட்டோ அவசியம் பதிவு செய்யுங்கள்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...