Saturday, March 26, 2011

நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு....


பாடலுக்கான  சூழ்நிலை..

இந்த பாடல் படத்தின் துவக்க பாடல், படத்தின் நாயகன் பொன்னுமணி  ஒரு கிராமத்து இளைஞன் அவருடைய மாமன் பெண்ணான நாயகி  சிந்தாமணி (சௌந்தர்யா) நகரத்திற்கு சென்று தன் படிப்பை முடித்து விட்டு கிராமத்திற்கு வருகிறார். சிறுவயது முதல் மிக அன்பாக பழகிவரும் இவர்கள் வளர்ந்தப்பின் சந்திக்க நேர்கிறது. ரயில் வண்டியில் வரும் நாயகியை ‌அழைத்து வர நாயகன் மாட்டுவண்டியில் செல்கிறார். சிறு வயதில் முதுகில் தூக்கிய பழக்க‌த்தை மறக்காத நாயகி தன்னை வீட்டுவரை முதுகில் சுமந்து செல்லும் படி அன்பு கட்டளையிடுகிறார். அதை மீறமுடியாத நாயகன் அவளை சுமந்து கொண்டு வருவது போன்றும் அதன் பின்னனியில் இந்த பாடல் இடம் பெறும்.

பாடலுக்கான பொருள் :

உலகே என் நெஞ்சுக்குள் இருப்பது யாரென்று உங்களுக்கு தெரியுமா, அந்த நெஞ்சுக்குள் கொஞ்சி பேசி ஆடிக் கொண்டிருக்கும் அந்த உருவம் வெளியில் தெரியுமா.. இந்த உலகே அழிந்துப் போனாலும்.. என் உயிரே பிரிந்துப் போனாலும் உள்ளத்தில் இருக்கும் அவளின் உருவம் மட்டும் அழியாது. உன்னால் நான் உண்ணாமலும் உறங்காமலும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்.

அன்பே உன் மீது ஏக்கப்பட்டு நான் இளைத்து விட்டேன் பாடம் படித்து சலித்து போய்விட்டது. தூக்கம் கெட்டு துடித்துக் கொண்டிருக்கிறேன். என் தேகம் தொட்டு அந்த எக்கத்தை போக்கிவிடு உன்னால், உண்ணாமலும் உறங்காமலும் தவித்துக் கொண்டிருக்கிறேன்.

கலங்காதே கண்மணி விரைவில் உனக்கு காஞ்சி பட்டு கொடுத்து கரம்பிடிப்பேன். காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேன். அன்‌பே என் கண்ணில் எப்போதும் நீதான்.  உன்னாலும் நான் உண்ணாமல் உறங்காமல் வாடிக் கொண்டிருக்கிறேன்.
என இருவரும் மாறி மாறி பாடல் வரும் படி அமைந்துள்ளது.

பாடலின் சிறப்புகள் :

1. கார்த்தின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று.
2. இளையராஜாவின் இசை படம் முழுக்க ஆட்சி செய்யும்.
3. நாயகி மறைந்த சௌந்தர்யா இந்த படத்தில்தான் அறிமுகம் ஆனார்.
4. பாடலின் காட்சி அமைப்பு கிராமப்பிண்ணனியில் ரம்மியமான சூழலில் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

பாடலின் விவரம் :

திரைப்படம் : பொன்னுமணி (1993)
இசை :  இளையராஜா
நடிப்பு : கார்த்திக், சௌந்தர்யா, சிவக்குமார்
பாடலாசிரியர் : R.V.உதயகுமார்
பாடியவர்கள்:எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
இயக்கம் : 
R.V.உதயகுமார்
 
அந்த பாடல் வரிகள் :

பல்லவி :


ஆ : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா
         அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா (2)
         உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே
         உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே
         உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி

சரணம் - 1

பெ : ஏக்கப்பட்டு பட்டு நான் இளைத்தேனே
          ஏட்டு கல்வி கேட்டு நான் சலித்தேனே

‌ஆ : தூக்கம் கெட்டு கெட்டு துடிக்கும் முல்லை மொட்டு
        தேக்கு மரம் தேகம் தொட்டு தேடி வந்து தாளம் தட்டு

பெ : என் தாளம் மாறாதையா
           உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் சிந்தாமணி...

பெ : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா
         அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா (2)
         உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே
         உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே
         உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி

சரணம் - 1

ஆ :காஞ்சி பட்டு ஒண்ணு நான் கொடுபேனே
       காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேனே

பெ :மாமன் உன்னை கண்டு ஏங்கும் அள்ளி தண்டு
       தோளில் என்னை அள்ளி கொண்டு தூங்க வைப்பாய் அன்பே என்று

ஆ : என் கண்ணில் நீ தானம்மா
         உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி


அந்த பாடலையும் பாருங்கள் :


 

என் வேலையை நான் செய்து விட்டேன் ரசித்தவர்கள் தயவு செய்து  கருத்து சொல்லிவிட்டு செல்லுங்கள்..
 
இப்பாடல் நண்பர் சி.பி.செந்தில்குமார் அவர்களுக்கு. ....

அன்பான வாசகர்களே இதை எப்போது படித்தாலும்  தங்களுடைய கருத்தை சொல்லுங்க.. அதுதான் என்னைமேலும் உழைக்க வலுசேர்க்கும்... நன்றி... நன்றி...

27 comments:

 1. வணக்கம் பாஸ்....
  அம்மாடி...அருமையான எனக்கு பிடித்த பாடல்...
  சுகமாய் இருக்கும் கேட்கும் போதெல்லாம்...பகிர்வுக்கு நன்றிகள்...
  இந்தப் பாட்டை நன் தேடிக்கிட்டு இருந்தேன் கொஞ்ச நாட்களாக

  அடிக்கடி வாறதில்லைன்னு கோபிக்க கூடாது என??

  தபசி'னு பெயர் வரக் காரணம் என்ன?
  http://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post_26.html

  ReplyDelete
 2. ஆமா சிபிக்கு ஏன் சமர்ப்பணம்??
  அவரு மேல போயிட்டாரா??

  ReplyDelete
 3. படமே பார்க்கத்தேவையில்ல போல் இருக்கு...
  அப்படி ஒரு வருணனை... நன்றி.

  ReplyDelete
 4. நண்பா நல்லா வர்ணனை செஞ்சிருக்கீங்க..........
  இந்தப்பாட்ட கேக்கும்போது செத்துப்போன சொந்தர்யா நேர்ல வராங்கய்யா!

  ReplyDelete
 5. /// ஆமா சிபிக்கு ஏன் சமர்ப்பணம்??
  அவரு மேல போயிட்டாரா??///

  -------------------மைந்தன் சிவா said...  ஐயோ பாவமையா.:)))))

  ReplyDelete
 6. பாடலை அலசுவது புதிய முயற்சி வாழ்த்துக்கள் தொடர்ந்து கலக்குங்கள்!

  ReplyDelete
 7. அசத்தலான பாடல்.. அருமையான உழைப்பு...

  ReplyDelete
 8. "நெஞ்சில் சில் சில்.. " - கன்னத்தில் முத்தமிட்டால் பாடல் விமரிசனம் தேவை

  ReplyDelete
 9. அருமையான பாடல்....
  யோவ் உயிரோடு இருக்குற ஆளுக்கு எப்பிடிய்யா சமர்பிப்பு....

  ReplyDelete
 10. அருமையான பகிர்வு நன்றி

  ReplyDelete
 11. என்னோட ஆல் டைம் ஃபேவரைட் பாட்டு இது :-))

  அது என்னது சி பி க்கு மட்டும் ஸ்பெஷல்..எதுவும் உள் குத்து இருக்கா மக்கா ...???என் ஜாய் :)))))

  ReplyDelete
 12. எனக்கும் பிடித்த பாடல்

  ReplyDelete
 13. அலத்தல் பாடல்
  விளக்கம் அருமை...

  ReplyDelete
 14. அது என்னங்க சிபி க்கு மட்டும் பாட்டு எங்களுக்கெல்லாம் பாட்டு போடமாட்டிங்களா..

  ReplyDelete
 15. என்னய்யா இங்கே பிரச்சனை?

  ReplyDelete
 16. மைந்தன் சிவா said...

  ஆமா சிபிக்கு ஏன் சமர்ப்பணம்??
  அவரு மேல போயிட்டாரா??


  ஆமா.. பால்கனில படம் பார்த்துட்டு இருக்கேன்

  ReplyDelete
 17. ஜெய்லானி said...

  என்னோட ஆல் டைம் ஃபேவரைட் பாட்டு இது :-))

  அது என்னது சி பி க்கு மட்டும் ஸ்பெஷல்..எதுவும் உள் குத்து இருக்கா மக்கா ...???என் ஜாய் :)))))


  அண்ணே உள் குத்தும் இல்லை.. வெளி குத்தும் இல்லை.. ஏதோ ஆசப்பட்டு போட்டுட்டார்

  ReplyDelete
 18. மனதை மயக்கும் பாடல்,அதை ரசிக்கும் படி எழுதியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. மிக அருமையான தேர்வு. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.

  ReplyDelete
 20. இது சிபிக்கு மட்டுமல்ல அநேகப்பெருக்கு விருப்பமான பாடல் பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 21. பாட்டை ரசித்து ஆரதவு நல்கிய அனைவருக்கும் நன்றி...

  ReplyDelete
 22. என்மனதை தொட்டபாடல் சுப்பர் தல

  ReplyDelete
 23. புதிய முயற்சி வாழ்த்துக்கள் தொடர்ந்து கலக்குங்கள்!எனக்கு பிடித்த பாடல் பகிர்வுக்கு நன்றி சகோ

  ReplyDelete
 24. பாடல் தேர்வும் விளக்கமும் அருமை. ஆமா சி.பி. அண்ணனை காக்கா பிடிக்கிறீங்களே? அவர்னால உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்படுகிறதா?

  ReplyDelete

படிச்சி முடிச்சாச்சா..
தட்டிக் கொடுங்கள் அதை அடைக்கத்துக் கொள்கிறேன்...
இல்லையென்றால்
குட்டு வையுங்கள் அதை உரமாக்கிக் கொள்கிறேன்..
தட்டலோ குட்டோ அவசியம் பதிவு செய்யுங்கள்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...