Thursday, April 21, 2011

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ..

பாடலின் சூழ்நிலை :
 

நாயகன் (தனுஷ்) நாயகி (நயன்தாரா) ஒரே அலுவலகத்தில் வேலை செய்கிறார்கள். நாயகன் வேலைக்கு சேரும்போது நாயகி அவரது மனதை கவர்கிறார். பின்பு ஒருதலையாக காதலிக்கிறார். நாயகன் தனது காதலை சொல்ல அவள் மறுத்துவிடுகிறார். தன்னுடைய மகனுக்கு உதவ நாயகன் தந்தை (ரகுவரன்) நாயகியிடும் பேசுகிறார். அவள் அவரை அவமானம் செய்து விட அவர் மனமொடிந்து இறந்து விடுகிறார். மிகவும் மனமொடிந்துப்போகும் நாயகன் சோகத்தில் உறைந்துப்போகிறார்.

நாயகனின் சூழ்நிலையை பார்த்த நாயகனின் நண்பர் இந்த கவலையை மறக்க அவரை தன்னுடைய கிராமத்திற்கு அழைத்து செல்கிறார். அங்கு சென்ற பிறகுதான் தெரியது நாயகியும்  நண்பரும் சொந்தம் என்று.. தன் தந்தை சாவுக்கு காரணமாவர்... தன் காதலை ஏற்றுக்கொள்ள வில்லை...  சூழ்நிலை காரணமாக அந்த கிராடத்தில் தங்க நேர்கிறது. தன் வலியை அந்த வீட்டில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் பாடுவது போன்று இப்பாடல் அமைந்துள்ளது.

பாடலுக்கான பொருள் :
 
காதல் தோல்வி பாடல்கள் தமி்ழ்திரையில் எவ்வளவோ இருந்தாலும் இந்தப்பாடல் மிகவும் ரசிக்கும்படியிருந்தது.

வெண்மேகம் போன்று இந்த பூமியில் வந்தவ‌ளே உன்னைப்பார்த்ததும் இந்த நெஞ்சம் உன்னை கொண்டாடுகிறது. நீ ஒரு பார்வை பார்த்துவிடு. ஒரு வார்த்தை செல்லிவிடு உன்னால்தானே பல ஞாபகங்கள் என் நெஞ்சில் வந்துவிடுகிறது...

‌பெண்ணே நீ மாலைநேரத்து மஞ்சள் வெயில்... கருமேகத்தில் ஒளிரும் மின்னல் இவ்வளவு அழகிருந்தும் உன்னை பார்ப்பவரை ஏன் தீப்போல் கண்கலங்க வைத்து விடுகிறாய்... பெண்ணே உண்மை சொல்லிவிடு ஒரு புன்னகையில் பெண் இனத்தை கோவபட்டது ஏன்... தேவதைகள் வாழ்வது கண்டிப்பாக வீடாக இருக்காது அது கோயில்தான்.. உனக்குள் இருக்கும் அழகை எப்படி சொல்வது...  நீ எனக்கில்லை என்ற வேதனையில் கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்.. அப்படி வரும் கண்ணீரில் நான் மகிழ்கிறேன்..
உன்னால் தானே பலஞாபம் வந்தாடுகிறது...

எங்கள் மனதை ‌பார்த்தவுடன் கொள்ளையடித்தாய் அந்த தந்திரத்தை  எங்கு சென்று கற்றுவந்தாய்... விழி அசைவில் வலைவிரிக்கிறாய் நாங்கள் அனைவரும் உன்னை பல்லக்கில் தூக்கிச் செல்ல தயாராக இருக்கிறோம்... உன் விரல் பிடிக்கிற வரத்திற்குதான் நான் உயிரோடு இருக்கிறேன் என் காதல் என்னவாகும் அது உன் பாதத்தில் மண்ணாகிவிடுமோ  சொல் என் அன்பே.... என பாடல் எழுதப்பட்டுள்ளது.

இப்பாடலின் காட்சி அமைப்பு... மழை.. வீட்டின் அழகு.. நடனம் அனைத்தும் அருமையாக அமைந்திருக்கும்.


பாடல் விவரம்:


படம்: யாரடி நீ மோகினி
பாடலாசிரியர் : நா.முத்துக்குமார்
நடிப்பு : தனுஷ், நயன்தாரா, ரகுவரன்

இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: ஹரிஹரன்
இயக்கம் : எ. ஜவகர்

வெளிவந்த ஆண்டு : ஏப்ரல் 4, 2008.

அந்த பாடல் வரிகள் : 


பல்லவி :
வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
இந்நேரம் எனை பார்த்து விளையாடுதோ (வெண்மேகம்)

உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டாடுதே.. (உன்னாலே)

வார்த்தை ஒரு வார்த்தை
சொன்னால் என்ன?
பார்வை ஒரு பார்வை
பார்த்தால் என்ன?

(உன்னாலே) (வெண்மேகம்
 

சணைம் -1
மஞ்சள் வெயில் நீ மின்னல் ஒளி நீ
உன்னை கண்டவரை கண் கலங்க நிற்கவைக்கும் தீ
பெண்ணே என்னடி உண்மை சொல்லடி
ஒரு புன்னகையில் பெண் இனமே கோவப்பட்டதென்னடி

தேவதை வாழ்வது வீடில்லை கோவில்
கடவுளின் கால் தடம் பார்க்கிறேன்
ஒன்றா இரண்டா
உன் அழகை பாட

கண்மூடி ஓரு ஓரம் நான் சாய்கின்றேன்
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கின்றேன்

(உன்னாலே)


சரணம் - 2
எந்தன் மனதை கொள்ளையடித்தாய்
இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்
விழி அசைவில் வலை விரித்தாய்
உன்னை பல்லக்கினில் தூக்கி செல்ல கட்டளைகள் விதித்தாய்

உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க
உயிருடன் வாழ்கிறேன் நானடி
என் காதலும் என்னாகுமோ
உன் பாதத்தில் மண்ணாகுமோ

(வெண்மேகம்)


அந்த பாடலையும் பாருங்கள் :




என் வேலையை நான் செய்து விட்டேன் ரசித்தவர்கள் தயவு செய்து  கருத்து சொல்லிவிட்டு செல்லுங்கள்..
 
அன்பான வாசகர்களே இதை எப்போது படித்தாலும்  தங்களுடைய கருத்தை சொல்லுங்க.. அதுதான் என்னைமேலும் உழைக்க வலுசேர்க்கும்... நன்றி... நன்றி...

29 comments:

  1. தட்டிக்கொடுகிறேன் நல்ல ஒரு பாடல் அதனை வரிகளாக தந்தமைக்கு நன்றிகள்
    எனது வலைத்தள முகவரி
    http://mahaa-mahan.blogspot.com

    ReplyDelete
  2. ரொம்ப அழகான வரிகள் நிறைந்த பாட்டுய்யா மாப்ள நன்றி

    ReplyDelete
  3. நல்ல வரிகள் தேங்க்ஸ் ......

    ReplyDelete
  4. நல்ல முயற்சி ...பழைய பாடல்களையும் போடுங்கள் ....குறிப்பாக கண்ணதாசன் பாடல்கள் .......

    ReplyDelete
  5. பாட்டு அருமையா இருக்கு.....

    ReplyDelete
  6. தமிழ்மணம் வேலை செய்ய வில்லை மக்கா...

    ReplyDelete
  7. ரசித்த பாடலை மீண்டும் நினைக்க வைத்துவிட்டீர்கள்.

    ReplyDelete
  8. வந்தொட்டோமுள்ள.....பாட்டு ரசிகரே!!

    இனிமையான பாடல் தொகுப்பு.

    ReplyDelete
  9. நன்று .வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. அட்டகாச்ம் போங்க. இப்படி ஒரு ப்ளாக் இருக்கறது எனக்கு இன்னைக்கு தான் தெரியும். சூப்பர் வொர்க். பாராட்டுகள்.!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  11. ரெண்டு ஓட்டும் போட்டாச்சு

    ReplyDelete
  12. இனிமையான பாடல் தொகுப்பு.

    என் வேலையை நான் செய்து விட்டேன்

    ReplyDelete
  13. //# கவிதை வீதி # சௌந்தர் said...
    சூப்பர் பாட்டு...///


    எட்றா எட்றா எட்றா எட்றா அந்த அருவாளை.....

    ReplyDelete
  14. நல்ல பாடல். பகிர்வுக்கு நன்றி நண்பரே..

    ReplyDelete
  15. நல்ல பார்வை ரசனை...
    அந்த மக்கா பயலை மொக்கைய போடாம இருக்க சொல்லுங்க..ஹிஹி அவர் தான் மனோ..

    ReplyDelete
  16. திரைப் பாடல் மனதில் நிற்க வேண்டுமெனில், முதலில் பாடல் எளிதாகவும், புரியும்படியாகவும், அனைவராலும் பாட முடிவதாகவும், திறமையான் பாடகரின் பங்களிப்பாகவும், புதுமையான இசை கோர்ப்பும் இருக்க வேண்டும்!

    இவை அனைத்தும் சேர்ந்ததே " வெண் மேகம்" பாடல்!

    ReplyDelete
  17. This is a good work I like this...congratz..
    Vetha. Elangathilakam.
    Denmark.

    ReplyDelete
  18. இசையின் சுவாசத்தில்தான் அகதி வாழ்வு இன்னும் உயிரோடு.தொடர்ந்தும் வருவேன் பாடல்களை ரசிக்க !

    ReplyDelete
  19. நடத்துங்க நண்பா

    நண்பேன்டா- கடி..கடி...கடி.. இது செம காமெடி... -
    http://tamilaaran.blogspot.com/2011/04/blog-post_4055.html

    ReplyDelete
  20. இனிமையான பாடல் தொகுப்பு இன்னமும் தொடருங்க.

    ReplyDelete
  21. சாயந்திர நேர தென்றல் காற்று, கடுமையான வெய்யிலுக்கு பிறகு வரும் மழை சாரல், இது போன்று மனதினில் தோன்றும் மெல்லிய உணற்வான காதல் , அதை காதலி புறக்கணிக்கும் பொழுது வரும் உணர்வை காதலிக்கும் பாடல். அருமை எப்பொழுதும்

    thulithuliyaai.blogspot.com

    ReplyDelete
  22. அருமை.....

    கைகொடுங்கள்.....

    வாழ்த்துக்கள்.....

    ReplyDelete

படிச்சி முடிச்சாச்சா..
தட்டிக் கொடுங்கள் அதை அடைக்கத்துக் கொள்கிறேன்...
இல்லையென்றால்
குட்டு வையுங்கள் அதை உரமாக்கிக் கொள்கிறேன்..
தட்டலோ குட்டோ அவசியம் பதிவு செய்யுங்கள்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...