Thursday, July 28, 2011

அடத்தமிழா நாளை என்பது யாருக்கு..?

பாடலுக்கான சூழ்நிலை :


ஒரு கிராமத்துப் பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள ஆசைப்படும் நாயகன் ரிஷி (அரவிந்தசாமி) பூஙகுடி கிராமத்திற்கு சென்று அங்கு அக்காவை ‌ பெண்பார்க்க சென்று, பின்பு அங்கு நடக்கும் பிரச்சனையால் அவளுடைய தங்கையான ரோஜாவை (மது) திருமணம் செய்துக் கொண்டு நகருக்கு வந்து விடுகிறார். பின்பு தேன்நிலவுக்காக காஷ்மீர் பகுதிக்கு செல்கிறார். அங்கு தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறார். (படத்தின் கதை இந்த கடத்த‌ல் மற்றும் தீவிரவாத ஒழிப்பை மையப்படுத்தி வருகிறது) அப்படி தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் போது ஒரு தீவிரவாதியால் இந்திய தேசியக்கொடி தீயிட்டுக் கொளுத்தப்படுகிறது. ‌தேசிய உணர்வுடன் அந்த தீயை அணைத்து ‌தேசியக் கொடியை காப்பது போன்று காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அந்த காட்சியின் பிண்ணனியில் இப்பாடல் ஒளிபரப்பாகும்.

பாடலுக்கான பொருள் :

தமிழ் மொழி இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, உள்ளிட்ட உலகநாடுகளில்  63+ மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.  முதல் 20 உலக மொழிகள் பட்டியலில் 18 வது இடம் பிடித்திருக்கிறது.  அப்படி சிறப்பு வாழ்ந்த மொழியைப்பற்றி வைரமுத்து அவர்களால் இயற்றப்பட்டப்பாடல் தான் இது.
 

தமிழனே நாளை நம்முடையது.. இந்த நாடு என்பதும் நம்முடையது. நம்முடைய வீடு எது என்றுக் கேட்டால் அது தமிழ்நாடு என்று சொல்லுங்கள். அதுவே நம்முடைய உணர்வு இந்தியன் என்று இருக்கட்டும்.

இந்தியாவில்  பல்வேறு இனங்கள் நிறைந்துள்ளது ஆனால் குணத்தால் நாம் ஒன்றுப்படுகிறோம். 

அரபியும் விரிகுடாவும் கைகோர்க்கும் கன்னியாகுமரியோ அல்லது இமையத்தில் உயர்ந்து நிற்க்கும் காஷ்மீரோ இடம் ஏதுவாக இருந்தாலும் நிலத்தால் அது ஒன்றாகிறது.

மொழிகள் மாறலாம் பொருளில் மட்டும் ஒன்றாகத்தான் இருக்கிறது. கலி மாறலாம் (கலி என்பது காலத்தை குறிக்கிறது.) இனி எத்தனை ஆண்டுகள் யுகங்கள் மாறினாலும் நம்முடைய தேசியக் கொடி  தேசிய உணர்வு மாறாது.

எட்டு திசைகளில் மாற்றங்கள் இருக்கும் அது எங்கள் நிலத்தை மாற்ற முடியாது. இசைகள் மட்டும் சுரங்கலாம் மாறிப்போகலாம் மொழிகலாள் அவை ஒன்றுதான். நம்முடைய இந்தியா அது ஒன்றுதான்.

தமிழனே கலங்காதே தமிழனாக இருந்தாலும் உனக்குள் இருப்பது இந்திய ரத்தம் ஒன்றான இந்த பாரதம் உன்னைக்காக்கும்.


பாடலின் விவரம் :


திரைப்படம்:   ரோஜா (1992)
பாடல்: தமிழா தமிழா
பாடகர்:  ஹரிஹரன்
இசை:  AR. ரெஹ்மான்
பாடல் ஆசிரியர்:  வைரமுத்து
படத்தின் இயக்கம் : மணிரத்தினம

அந்த பாடல் வரிகள் :
பல்லவி :
தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே(2)

என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே


சரணம் -1

இனம் மாறலாம் குணம் உண்டு தான்
இடம் மாறலாம் நிலம் ஒன்று தான்
மொழி மாறலாம் பொருள் ஒன்று தான்
கலி மாறலாம் கொடி ஒன்று தான்
திசை மாறலாம் நிலம் ஒன்று தான்
இசை மாறலாம் மொழி ஒன்று தான்
நம் இந்தியா அதும் ஒன்று தான்

தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் கலங்காதே(2)

உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா
ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா

தமிழா தமிழா நாளை நம்நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

நவபாரதம் பொதுவானது
இது வியர்வையால் உருவானது...

அந்தப்பாடலிக் காணொலி காட்சி :


அன்பான வாசகர்களே இதை எப்போது படித்தாலும்  தங்களுடைய கருத்தை சொல்லுங்க.. அதுதான் என்னைமேலும்  வலுசேர்க்கும்... 
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி... நன்றி...



39 comments:

  1. அருமையான பாடல். எப்போ கேட்டாலும் தமிழன் என்ற உணர்வு வரும்.

    ReplyDelete
  2. \இனம் மாறலாம் குணம் உண்டு தான்
    இடம் மாறலாம் நிலம் ஒன்று தான்
    மொழி மாறலாம் பொருள் ஒன்று தான்
    கலி மாறலாம் கொடி ஒன்று தான்
    திசை மாறலாம் நிலம் ஒன்று தான்
    இசை மாறலாம் மொழி ஒன்று தான்
    நம் இந்தியா அதும் ஒன்று தான்\\

    எப்போது கேட்டாலும் சிலிர்த்துக்கொள்ளும் வரிகள் பகிர்வுக்கு நன்றி.
    http://gokulmanathil.blogspot.com
    நம்ம பக்கமும் வந்து போங்க சகோ.

    ReplyDelete
  3. அருமையான படளிகளில் இதுவும் ஒன்று. நினைவில் நிற்கும் பாடல்..

    ReplyDelete
  4. ரஹ்மானின் இசையும் வைரமுத்து வரிகளும் பாடலின் வலிமைக்கு ஆதாரம்!

    ReplyDelete
  5. சினிமா பாடல் என்ற வட்டைதை மீறிய ஒரு தேசிய பாடல் சகோ

    ReplyDelete
  6. சூப்பர் பாட்டுங்கோ.....!!!

    ReplyDelete
  7. சாதாரணமாக ஒரு பாடலைக் கேட்டுவிட்டு, சராசரியாக வேலையைப் பார்த்துக்கொண்டிராமல்..
    வித்தியாசமாக விளக்க முயற்சித்துள்ளீர்கள்.
    பாராட்டுக்கள்.

    ஏற்கனவே பலமுறை கேட்டதாயினும் மீண்டுமொருமுறை நினைவுபடுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete
  8. பாடல் அருமை!

    ReplyDelete
  9. கவிப்பேரரசுவின்
    வைரவரிகள்..
    மிளிரும்
    உணர்வுமிக்க பாடல்...
    பகிர்வுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  10. அருமையான பாடல்

    ReplyDelete
  11. நல்லா இருக்கு சவுந்தர் எனக்கும் மிகவும் பிடித்த பாட்டு

    ReplyDelete
  12. வைரமுத்துவின் வரிகளுக்கு, ஹரிஹரனின் குரல் வலுசேர்த்திருக்கின்றது இப்பாடலில். . .

    ReplyDelete
  13. அழகான அருமையான கருத்துகள் பொதிந்த பாடல்...
    உங்கள் பகிர்விற்கு நன்றி..

    ReplyDelete
  14. அருமையான கருத்துள்ள பாடல்.

    ReplyDelete
  15. பெரும்பாலான பள்ளி விழாக்களில் தேசபக்தி கலை நிகழ்ச்சிகள் நடக்கும்போது தவறாமல் இடம்பெறும் பாடல் இது. கேட்டாலே புல்லரிக்கும் ஒரு பாடல்.

    ReplyDelete
  16. அருமையான பாடல். வேட்கை உணர்வுகளை தட்டி எழுப்பக்கூடிய பாடல்

    ReplyDelete
  17. //தமிழா தமிழா கண்கள் கலங்காதே
    விடியும் விடியும் உள்ளம் கலங்காதே//

    தற்பொழுதும் இந்த ஆறுதலான வரிகள் நெஞ்சை தொடுகின்றன...

    ReplyDelete
  18. தமிழனே கலங்காதே தமிழனாக இருந்தாலும் உனக்குள் இருப்பது இந்திய ரத்தம் ஒன்றான இந்த பாரதம் உன்னைக்காக்கும். ஒற்றுமையை வலியிருத்துவது..

    ReplyDelete
  19. இசையியுடன் இந்த பாடலுடன் காட்சியை பார்க்கும் போது.. ஒரு வேகத்தை உந்தி தள்ளி மொழியின் மீதும் நாட்டின் மீதும் பற்று ஏற்படுகிறது... அருமை நண்பா

    ReplyDelete
  20. என் ப்ளாக்கில் எழுதப்படும் பதிவுகள் கூகுள் ரீடரிலும் டாஷ்போர்டிலும் அப்டேட் ஆகவில்லை.
    என்ன செய்ய வேண்டுமென நண்பர்கள் ஆலோசனை கூறுங்களேன்.

    ReplyDelete
  21. நல்ல கருத்துள்ள இனிய பாடல்.

    ReplyDelete
  22. தமிழனுக்கு புகழ் சேர்க்கும் ஓர் அற்புதமான பாடல் !

    ReplyDelete
  23. இந்தப் பதிவிற்கான உங்கள் உழைப்பு அபாரம்..

    ReplyDelete
  24. என்னது காந்தி செத்துட்டாரா

    ReplyDelete
  25. இன்று எனது பதிவில் ப்ளாக் பதிவு திருட்டை பற்றி நகைச்சுவை .

    வாருங்கள் ,வந்து கருத்தை கூறுங்கள்

    ReplyDelete
  26. எவ்வளவு நாட்கள்ஆனாலும் அனைவரையும்
    இசையால் கட்டிப்போடும் பாடல்

    ReplyDelete
  27. மறக்க முடியாத வரிகள் ... !

    ReplyDelete
  28. இந்தப் பாடலை எப்போ கேட்டாலும் மனதில் ஒரு உற்சாகமும் நம்பிக்கையும் !

    ReplyDelete
  29. வணக்கம் சகோ,
    மொழியின் பெருமை, தமிழர்களின் வீரத்தின் திறமை, என இரண்டையும் கலந்து பாடலுக்கு உரமூட்டி, விடியலை எதிர்பார்த்திருக்கும் ஒரு நாட்டிற்கும் பொருந்தக் கூடிய வகையில் இப் பாடலை நம்பிக்கையெனும் சாந்து பூசித் தந்திருக்கிறார் கவிப்பேரரசர். அவரின் பாடல் வரிகளை விஞ்சும் வகையில்,
    அருமையான பொருள் விளக்கத்தினைத் தந்திருக்கிறீங்க.
    தொடரட்டும் உங்கள் பணி.

    தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  30. அன்பின் சௌந்தர்

    அருமையான பாடல் - வைரமுத்துவின் வைரவரிகள் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  31. நல்லதொரு நாட்டு பற்றுடன் கூடிய பாடல்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  32. அற்புதமான வரிகள். நானும் கூட நீங்கள் எழுதியவாறு தான் புரிந்து கொண்டிருந்தேன். ஆனால் மிக சமீபத்தில் தான் கவனித்தேன். அது,

    நவபாரதம் பொதுவானது
    இது வியர்வையால் ருதுவானது...

    கவனித்து கேளுங்களேன், இன்னும் இனிக்கும்.

    ReplyDelete
  33. நன்று வாழ்த்துக்கள்

    ReplyDelete
  34. தலைநிமிர வைக்கும் தன்னம்பிக்கைப் பாடல். தமிழுக்கு வைரமுத்து ஆக்கிய அற்புத படைப்பு.


    ReplyDelete
  35. தலைநிமிர வைக்கும் தன்னம்பிக்கைப் பாடல். தமிழுக்கு வைரமுத்து ஆக்கிய அற்புத படைப்பு.


    ReplyDelete

படிச்சி முடிச்சாச்சா..
தட்டிக் கொடுங்கள் அதை அடைக்கத்துக் கொள்கிறேன்...
இல்லையென்றால்
குட்டு வையுங்கள் அதை உரமாக்கிக் கொள்கிறேன்..
தட்டலோ குட்டோ அவசியம் பதிவு செய்யுங்கள்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...