திரை இசை தமிழ் பாடல்களில் வளமான பாடல்கள் நம்மில் இருக்கிறது... அவற்றின் ஒளிந்துக்கிடக்கும் ஒருசில பாடல்களில் ஒன்றை இன்று தந்திருக்கிறோன் (என் அறிவுக்கு எட்டிய அளவுக்கு) இப்பாடலைப்பற்றி இன்னும் தகவல்கள் இருந்தால் பின்னுட்டத்தில் தெரியப்படுத்தவும்.
பாடலின் விவரம் :
பாடல் : பொன் மாலை பொழுது!!
படம் : நிழல்கள்
வெளிவந்த நாள் : நவம்பர் 6, 1980
குரல் : S.P.பாலசுப்பிரமணியம்
இசை : இசை ஞானி இளையராஜா.
பாடலாசிரியர் : வைரமுத்து (இது வைரமுத்து திரைக்காக எழுதிய முதல் பாடல்)
படத்தின் இயக்கம் : பாரதிராஜா
பாடலில் நடித்தது : சந்திரசேகர்
பாடலுக்கான சூழ் நிலை :
ஓர் இளைஞன் கலா ரசிகன், வாழ்க்கையை மிகவும் நேசிப்பவன், சமூகத்தில் இருக்ககூடிய சிக்கல்களை தீர்க்க நினைப்பவன், ஆனால் அதற்கான தீர்க்கமான முடிவு தெரியாதவன் அப்படி இருக்கும் ஒரு இளைஞன் ஒரு மாலை நேரத்தில் மண்ணில் கொட்டிக் கிடக்கும் இயற்கை அழகை ரசித்து பாடும் படி இந்த பாடல் அமைந்துள்ளது.
பாடலுக்கானப் பொருள் :
மாலை நேரம் பகலின் தோலுரித்தி இரவு ஆடை அணிந்துக் கொள்ளும். அந்தநேரத்தில் இருக்கும் வண்ணமானது என்து வாசலில் கோலமிட்டு வானமானது இரவுசெல்ல பாலம் அமைத்து கொடுக்கும் போது பறவைகள் தாளமிட்டு இரவை வழியனுப்பும்.... இந்த வானம்தான் எனக்கு ஞானத்தை கொடுக்கும்.. கேள்விகளாளே எனது வேள்விகள் நடக்கும் என்று நாயகன் இயற்கையை பார்த்து பாடுகிறார். பாடல் காட்சியில் மாலைப் பொழுதை தன் கண்முன்னே கொண்டு காட்டியிருப்பார் பாரதிராஜா.
இதோ அந்த பாடல் வரிகள் :
பல்லவி
ஹே ஹோ ஹிம் லலா
பொன் மாலைப் பொழுது
இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானம் மகள் நானுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலைப் பொழுது
சரணம் -1
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ... (இது..
சரணம் -2
வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் சேதி வரும்
கேள்விகளால் வேள்விகளை நான் செய்தேன்... (இது...
விடுப்பட்ட சரணம் -3
(வைரமுத்து அவர்களால் எழுதப்பட்டு பாடலில் இடம் பெறாத மூன்றாவது சரணம்)
”இரவும் பகலும் யோசிக்கிறேன்
எனையே தினமும் பூசிக்கிறேன்
சாலை மனிதரை வாசிக்கிறேன்
தீயின் சிவப்பை நேசிக்கிறேன்
பேதங்களே... வேதங்களா.. கூடாது.. (இது...என்பது தான் அது.
இப்போது இந்த பாடலையும் கேட்டு ரசியுங்கள்...
பகிர்தலுக்கு நன்றி
ReplyDeleteதமிழ்மனத்தில் இனையுங்கள்
நல்ல விளக்கம் நன்றி...
ReplyDeleteநானும் ஓட்டு போட்டுட்டேன்..
படித்தேன் தலைவா சுப்பர்
ReplyDeleteதமிழ் 10 இல் இணையுங்க
ReplyDeleteஇனிய பாடலுக்கான இனிய விளக்கம்!
ReplyDeleteநல்ல அலசல்.சீக்கிரம் பிரபலமாக வலி சொல்கிறேன் பின்னூட்டமிட்டால் பின்னூட்ட மிடுங்கள். வாக்கு போட்டால் நீங்களும் வாக்கு போடுங்கள். பதிவர்கள் உங்களை பின் பற்றினால் நீங்களும் அவர்கள் தளத்தை பின் பற்றுங்கள். இல்லாவிட்டால் அவர்கள் பின் பற்றுவதிளிருந்து விலகி விடுவார்கள். உங்களுக்கு வாசகர்கள் வரத்து கொறஞ்சு விடும்.
ReplyDeleteஅருமை நண்பரே உங்களின் இந்த முயர்சிக்கு வாழ்த்துக்கள் அதுவும் முதல் பாடலே ராகதேவனின் இசையின் தொடக்கத்தோடு... பாடல்பற்றி விபரங்கள் தகவல்கள் தொகுத்து வழங்கியமைக்கு மிக்க நன்றி நண்பரே
ReplyDeleteதொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்...
http://tamilaaran.blogspot.com/2011/01/blog-post_8286.html - parunga thala votopodunga thala
ReplyDeleteSpeed Master said...
ReplyDeleteபகிர்தலுக்கு நன்றி
தமிழ்மனத்தில் இனையுங்கள்
கண்டிப்பாக தமிழ் மணத்தில் இணைத்து விடுகிறேன்..
# கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteநல்ல விளக்கம் நன்றி...
நானும் ஓட்டு போட்டுட்டேன்..
ஓட்டளித்ததுக்கு நன்றி..
யாழ். நிதர்சனன் said...
ReplyDeleteபடித்தேன் தலைவா சுப்பர்
நன்றி தலைவா..
யாழ். நிதர்சனன் said...
ReplyDeleteதமிழ் 10 இல் இணையுங்க
தமிழ் 10 இல் இணைத்து விட்டேன் நன்றி
நாங்களும் ஆல் இன் ஆல்தான் . said...
ReplyDeleteநல்ல அலசல்.சீக்கிரம் பிரபலமாக வலி சொல்கிறேன் பின்னூட்டமிட்டால் பின்னூட்ட மிடுங்கள். வாக்கு போட்டால் நீங்களும் வாக்கு போடுங்கள். பதிவர்கள் உங்களை பின் பற்றினால் நீங்களும் அவர்கள் தளத்தை பின் பற்றுங்கள். இல்லாவிட்டால் அவர்கள் பின் பற்றுவதிளிருந்து விலகி விடுவார்கள். உங்களுக்கு வாசகர்கள் வரத்து கொறஞ்சு விடும்.
நண்பரே உங்னகளுடை ய அறிவுரையை 100 சதவீதம் கடைபிடிப்பேன்
//மாணவன் said...
ReplyDeleteஅருமை நண்பரே உங்களின் இந்த முயர்சிக்கு வாழ்த்துக்கள் அதுவும் முதல் பாடலே ராகதேவனின் இசையின் தொடக்கத்தோடு... பாடல்பற்றி விபரங்கள் தகவல்கள் தொகுத்து வழங்கியமைக்கு மிக்க நன்றி நண்பரே
தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்...//
வா ழ்த்துக்கு நன்றி..
யாழ். நிதர்சனன் said...
ReplyDeletehttp://tamilaaran.blogspot.com/2011/01/blog-post_8286.html - parunga thala votopodunga thala
இதையும் படிச்சிட்டேன் தலைவா..
பாட்டு விளக்கம் பாடல் எல்லாம் சூப்பர் ..
ReplyDeleteநல்ல பாடல் மற்றும் அதக்கான விளக்கம். மிக்க நன்றி நண்பரே.
ReplyDeleteமிக அருமையான முயற்சி..! பாராட்டுக்கள்..தொடருங்கள்..! வாழ்க வளமுடன்..!
ReplyDeleteநல்ல முயற்சி நண்பரே.... நன்றாக உள்ளது!
ReplyDeleteவெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteநல்ல பாடல் மற்றும் அதக்கான விளக்கம். மிக்க நன்றி நண்பரே.
நன்றி தோழியே...
தங்கம்பழனி said...
ReplyDeleteமிக அருமையான முயற்சி..! பாராட்டுக்கள்..தொடருங்கள்..! வாழ்க வளமுடன்..!
பாராட்டுக்கு மிக்க நன்றி..
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteநல்ல முயற்சி நண்பரே.... நன்றாக உள்ளது!
உங்கள் வாழ்த்ததால் நான் மேலும் பூரிப்படைகிறேன்..
This comment has been removed by the author.
ReplyDelete