Monday, January 31, 2011

நீல வானம் நீயும்... நானும்...

 கதைகளம் :

நாயகன் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி தற்போது ஒருவருக்காக வேவு பார்க்கும் வேலையை செய்ய ஒரு சொகுசு கப்பலில் பயணிக்கிறார். அதே கப்பலில் பயணிக்கும் நாயகி இவர் நம்மை வேவு பார்க்க வந்தவர் ‌என்று அறியாமல் அவருடன் பழகுகிறார். ஒரு கட்டத்தில் இவருக்கு திருமணம் ஆகிவிட்டாதா? இல்லையா? என்று கேள்வி எழும்போது நாயகன் எனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று சொல்லி, ஆனால் இப்போது அவள் உயிருடன் இல்லை என்று கூறுகிறார். அவர் எப்படி இறந்தார் என்று நாயகி கேட்ட அதை விளக்கியாக வேண்டும். அப்படி விளக்கும் போது இந்த பாடல் பயணிக்கிறது.

பொதுவாக தமிழ் படங்களில் பிளாஸ்பேக் கதைகள் வெகு நீளமாக பயணிக்கும். ஆனால் இந்த படத்தில் ஒரு பாடலில் அவரின் மொத்த கதையும் சொல்லப்பட்டு விடுகிறது...

நாயகன் ராணுவத்தில் இருக்கும் போது... தீவிரவாதியிடம் மாட்டிக் கொண்ட ஒரு குடும்பத்தை காப்பாற்றுகிறார். அதில் எஞ்சிய ஒரு பெண்ணை காப்பாற்றி பின் அது காதலாக மாறுகிறது.. பின் திருமணம்.. பின்பு மகிழ்ச்சியான வாழ்க்கை.. அவர் கர்பமாகிறார்..ஒரு நாள்  கொடைக்கானல் செல்லும் வழியில் ஒரு கார் விபத்தில் மனைவி இறந்து விடுகிறார்.  இதைதான் பாடலின் மூலம் விளக்கப்பட்டுள்ளது.

பாடலின் சிறப்பு

பொதுவாக தமிழ் சினிமா பல்வேறு புதுமைகளை புகுத்திக்கொண்டு வருகிறது. அதன் வரிசையில் இந்த பாடல் முழுவதும் தலைகீழாக பயணிக்கும்.. பொதுவாக கதை முதலில் ஆரம்பித்து இறுதியில் முடியும்.. ஆனால் இந்த பாடல் இறுதியில் தொடங்கி தொடக்கத்தில் முடியும்...
இந்த காட்சியில் நாயகன் (கமல்) இந்த பாடலுக்கு நேரடியாக பாடுவது போல் வாய் அசைப்பது மிகவும் அருமை... ஒரு பாடல் ஒரு கதை விளக்குகிறது..

பாடலின் விளக்கம் :

இந்த நீல வானம் போல் நாம் இணைந்தே இருப்போம். இந்த இயற்கையின் உதவியோடு நாம் வாழ்க்கை நடத்துவோம். பலநாடுகள் சேர்ந்து ஒரே நாடாக மாறுவது போல் நீ நானும் ஒன்றாக இணைவதைதான் இங்‌கே காதல் என்கிறார்கள்.. அதற்கு சாட்சியாக என்னை போல் பெண் குழந்தையும்.. என்று ஆண் பாடும் போது தன் மனைவின் பாதி என் உணர்கிறார்.. உணர்த்துகிறார்.

வந்தாரை வாழவக்கும் நம்இந்தியா காயத்தோடு வருபவரையும் காயம் ஆற்றும் ஆது போல நமக்குள் இருக்கும் காதல் நம் சோகங்களை ஆற்றும் இதுபோல் ஒண்றாக நாம் பல்லாண்டுகள் வாழ்வோம் என்று வர்ணனையுடன் இப்பாடல் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.


பாடல் காட்சிகள் கோடைக்கானல் விபத்தில் ஆரம்பித்து... காஷ்மீர் தீவிரவாத சண்டையில் முடிவது போன்று படமாக்கபட்டிருக்கும்... 



பாடலின் விவரம்

படம் : மன்மதன் அம்பு
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
பாடல் : கமலஹாசன்
பாடியவர் : கமலஹாசன்
இயக்கம் : கே.எஸ்.ரவிக்குமார்
படம் வெளியான தேதி : 23-12-2010
படத்தின் கால அளவு : 152 நிமிடங்கள்

பாடல் வரிகள் :

ஆண்     : நீலவானம் நீயும் நானும்
                  கண்களே பாஷையாய்
                  கைகளே ஆசையாய்
                  வையமே கோயிலாய்
                  வானமே வாயிலாய்
                  பால்வெளி பாயிலே
                  சாய்ந்து நாம் கூடுவோம்
                  இனி நீயென்று நானனென்று
                  இருவேறு ஆளில்லையே

{ஆண்      :   நீலவானம் நீயும் நானும்
பெண்      :   தி புளு ஸ்கை யூ அண்ட் ஐ} (ஓவர்லாப்)

சரணம் - 1

ஆண்      :    ஏதேதோ தேசங்களை
                   சேர்க்கின்ற நேசந்தனை
                   நீபாதி நான் பாதியாய்க்
                   கோர்க்கின்ற பாசந்தனை
                   காதல் என்று பேர் சூட்டியே
                   காலம் தந்த சொந்தமிது
                   என்னைப் போலே பெண்குழந்தை
                   உன்னைப் போலொரு ஆண் குழந்தை
                   நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது
                   இன்னொரு உயிர்தானடி

                    நீலவானம் நீயும் நானும்...

ஆ & பெ: பல்லாண்டு பல்லாண்டு
                   பல்லாயிரத்தாண்டு
                   பல கோடி நூறாயிரம்
                   பல்லாண்டு பல்லாண்டு
                   பல்லாயிரத்தாண்டு
                   பல கோடி நூறாயிரம்

குழு 
:  பல்லாண்டு பல்லாண்டு
              பல்லாயிரத்தாண்டு
              பல கோடி நூறாயிரம்


சரணம் - 2

ஆண்       :  ஆறாத காயங்களை
                  ஆற்றும் நம் நேசந்தனை
                  மாளாத சோகங்களை
                  மாய்த்திடும் மாயம்தனை
                  செய்யும் விந்தை காதலுக்கு
                  கை வந்த தொரு கலைதானடி
                  உன்னை என்னை ஒற்றி ஒற்றி
                  உயிர் செய்யும் மாயமும் அதுதானடி
                  நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது
                  இன்னொரு உயிர்தானடி

                  நீலவானம் நீயும் நானும் ...
 

அந்த பாடலையும் பாருங்க..






ஹலோ பாஸ்.. ஒரு ஓட்டுப்போட்டுட்டு.. அப்படியே ஒரு அட்னஸை போடுங்க பாஸ்...
நல்லதா ஒரு நாலு வார்த்தை சொன்ன எதுவுமே தப்பில்லை..

16 comments:

  1. பாடல் பற்றிய அனைத்து தகவல்களும் சூப்பர்...
    தொடருங்கள்...

    நானும் ஓட்டு போட்டுட்டேன்..

    ReplyDelete
  2. பாடல் விளக்கம் அருமை
    மிகவும் ரசித்தேன்...

    ReplyDelete
  3. நல்ல முயச்சி....தொடருங்கள்...எங்கள் ஆதரவு என்றும் உண்டு!

    ReplyDelete
  4. Speed Master said...

    நல்ல பாடல்


    நன்றி ...

    ReplyDelete
  5. # கவிதை வீதி # சௌந்தர் said...

    பாடல் பற்றிய அனைத்து தகவல்களும் சூப்பர்...
    தொடருங்கள்...

    நானும் ஓட்டு போட்டுட்டேன்..

    ஓட்டு போட்டதுக்கு நன்றி

    ReplyDelete
  6. jai said...

    பாடல் விளக்கம் அருமை
    மிகவும் ரசித்தேன்...

    நன்றி

    ReplyDelete
  7. வைகை said...

    நல்ல முயச்சி....தொடருங்கள்...எங்கள் ஆதரவு என்றும் உண்டு!

    நன்றி

    ReplyDelete
  8. படம்/பாடல் பற்றிய முழுமையான விவரங்களுடன் நல்ல பகிர்வு. தொடருங்கள் நண்பரே.

    நட்புடன்

    வெங்கட் நாகராஜ்
    http://venkatnagaraj.blogspot.com/2011/01/g.html
    http://rasithapaadal.blogspot.com/2011/01/blog-post_30.html

    ReplyDelete
  9. நல்ல பகிர்வு.. நன்றிகள் உங்களுக்கு..

    ReplyDelete
  10. மன்னிக்கவும் நண்பரே.. உங்களது இந்த தளம் எனக்கு தெரியாது அந்த தளத்தை இன்று கூகிள் பஸ் மூலமாக பார்த்தேன்.. இங்கிருந்து திருடி தான் அங்கே பதிவிடுகிறார்கள் என்பது எனக்கு தெரியாது..

    தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி... என்றும் என் ஆதரவு உங்களுக்கு உண்டு...

    ReplyDelete
  11. வெங்கட் நாகராஜ் said...

    படம்/பாடல் பற்றிய முழுமையான விவரங்களுடன் நல்ல பகிர்வு. தொடருங்கள் நண்பரே.

    நட்புடன்

    வெங்கட் நாகராஜ்
    http://venkatnagaraj.blogspot.com/2011/01/g.html
    http://rasithapaadal.blogspot.com/2011/01/blog-post_30.html


    உங்கள் தளத்திற்கு வழி காட்டியதற்கு நன்றி..!

    ReplyDelete
  12. பாரத்... பாரதி... said...

    நல்ல பகிர்வு.. நன்றிகள் உங்களுக்கு..

    நன்றி.!

    ReplyDelete
  13. வெறும்பய said...

    மன்னிக்கவும் நண்பரே.. உங்களது இந்த தளம் எனக்கு தெரியாது அந்த தளத்தை இன்று கூகிள் பஸ் மூலமாக பார்த்தேன்.. இங்கிருந்து திருடி தான் அங்கே பதிவிடுகிறார்கள் என்பது எனக்கு தெரியாது..

    தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி... என்றும் என் ஆதரவு உங்களுக்கு உண்டு...


    மன்னிப்பு கேட்கத் தேவையில்லை உங் கள் ஆதரவை என்றும் எதிர் பார்க்கிறேன்...

    ReplyDelete
  14. நல்ல முயற்ச்சி இன்னும் பல பாடல்கள் உங்களிடம் எதிர் பார்கிரேன்

    ReplyDelete
  15. படம்/பாடல் பற்றிய முழுமையான விவரங்களுடன் நல்ல பகிர்வு. vaalthukal..

    ReplyDelete

படிச்சி முடிச்சாச்சா..
தட்டிக் கொடுங்கள் அதை அடைக்கத்துக் கொள்கிறேன்...
இல்லையென்றால்
குட்டு வையுங்கள் அதை உரமாக்கிக் கொள்கிறேன்..
தட்டலோ குட்டோ அவசியம் பதிவு செய்யுங்கள்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...