Thursday, April 7, 2011

எதிரிக்கும் வேண்டாம் இந்த அவஸ்தை...


பாடலின் சூழ்நிலை :
 

நாயகன் ஒரு பிரபல ரவுடியின் தம்பி.. இவரும் ஒரு ரவுடி.. நியாயத்திற்காக தன் அண்ணனின் கட்டளையை ஏற்று அடிதடி செய்கிறார். இவர் வாழ்வில் ஒரு பெண் குறுக்கிடுகிறாள். இருவருக்கும் அவர்களை அறியாமலே காதல் வயப்படுகிறார்கள். நாயகன் தன் காதலை நாயகியிடம் சொல்லி விட நினைக்கும் போது பயம் அவரை ஆட்கொள்கிறது. அடிதடியில் அமர்க்களப்படுத்தும் அவர் காதலை சொல்ல நினைக்கும் பேர்து தடுமாறுகிறார். இப்படி இருவருக்கும் நெருக்கம் அதிகமாகிறது. ஒரு வழியாக நாயகியே நாயகனிடம்  காதலை சொல்ல வர அடுத்த நாள் நாயகனின் பிறந்த நாள் என்று தெரியவருகிறது. சரி சொல்ல வந்த காதலை நாளை தங்களுடைய பிறந்த நாளில் சொல்வதாக கூறி சென்று விடுகிறார்.. அந்த ஒரு நாள் ஏற்படும் தவிப்பை உணர்த்துவது போன்று பாடல் அமைக்கப்பட்டுள்ளது.

பாடலுக்கான விளக்கம் :
 

என் காதலியின் கண்கள் என்பது என்ன தெரியுமா.. அது என்னை தொடாமலே தொட்டுச் செல்லும் தென்றல் காற்று. என்னுடைய நெஞ்சத்தில் கொட்டுகின்ற மின்னல் ‌எது தெரியுமா.. அது அவள் கண்ணோறம் மின்னுகின்ற காதல்தான் இருப்பது ஒரு நாள்தான் அதுக்குள்ளே உன் மௌனம் என்னை கொன்று விடும்போலிருக்கிறதே. அதனால் தான் நான் காற்றில் பறக்கிற காகிதம் போல் ஆகிவிட்டேன்..


இந்த காதல் என்பது எவ்வளவு கொடுமையாக அவஸ்தை.. நரகத்தில் இருப்பது போன்றே இருக்கிறேன்... தயவு இந்த அவஸ்த்தை என்னுடைய எதிரிக்கூட வரவேண்டாம். நெருப்பை தின்றது போலவும்.. அமிலத்தை (ஆசிட்) குடித்தது போல் இருக்கிறதே.. நோயை கொடுத்தவளே அதற்கான மருந்தை ஏன் தர மறுத்தாய்.. இந்த வாலிபத்தின் தோட்டத்தில் ரகசியமாய் வந்து பூப்பறித்துவிட்டு சென்றவள் நீதானா...

‌பெண்களின் உள்ளம் மிகப்பெரிய படுகுழி.. இதில் விழுந்து எழுந்தவ‌ன்.. அவற்றின் அளவு ஆழம்.. அளந்தவன் எவனுமில்லை.. ஓ.. உலகமே இந்த கடவுள் பூமிக்கு வராதாதற்கு காரணம் என்ன தெரியுமா.. அது காதல் இருக்கிற பயத்தில் தான் அப்படி கடவுள் பூமிக்கு வந்தால் தாடியுடன் தான் இந்த பூமியில் அலைவான் என்று இந்த பாடல் விளக்குகிறது..
 

பாடலின் சில தகவல்கள் :
 

1. இப்படம் 2001 வெளிவந்த வெற்றிப்படங்களில் சிறந்தப்படம்.
2. பாடல் காட்சிகள் இயற்கை சூழலில் மிகவும் ரம்மியமாக அமைந்திருக்கும்.
3. அஜித்தின் பேர் சொல்லக்கூடிய விதத்தில் இப்படத்தை கொடுத்திருந்தார் முருகதாஸ்.


பாடலின் விவரம் :


படம் : தீனா 2001
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : ஷங்கர் மஹாதேவன்
கதை இயக்கம் : ஏ.ஆர்.முருகதாஸ்.

அந்த பாடல் வரிகள் : 

பல்லவி :

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்

ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல
உன் மௌனம் என்னை கொல்ல கொல்ல
இந்த காதலில் நான்
காற்றில் பறக்கும் காகிதமானேன்

(சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்,)

சரணம் - 1

ஓ....
காதலின் அவஸ்தை  எதிரிக்கும் வேண்டாம்,
நரக சுகம் அல்லவா நெருப்பை விழிங்கிவிட்டேன்,
ஓ... அமிலம் அருந்திவிட்டேன்,

நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்
மருந்தை ஏனடி தர மறந்தாய்
வாலிபத்தின் சோலையிலே
ரகசியமாய் பூ பறித்தவள் நீ தானே…

(சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்)

சரணம் -2

 ம்.... பெண்களின் உள்ளம் படுக்குழி என்பேன்...
விழுந்து எழுந்தவன் யார்?
ஆழம் அளந்தவன் யார்?
கரையை கடந்தவன் யார்?
காதல் இருக்கும் பயத்தினில் தான்
கடவுள் பூமிக்கு வருவதில்லை
மீறி அவன் பூமி வந்தால்
தாடியோடதான் அலைவான் வீதியிலே,

(சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்)

அந்த பாடலை டவுன் லோடு செய்ய :


சொல்லாமல் தொட்டு செல்லும்
அந்த பாடலைப் பாருங்கள்...




என் வேலையை நான் செய்து விட்டேன் ரசித்தவர்கள் தயவு செய்து  கருத்து சொல்லிவிட்டு செல்லுங்கள்..   
 

இப்பாடல் நண்பர் ஆர்.கே. சதீஷ்குமார்  அவர்களுக்கு. ....

அன்பான வாசகர்களே இதை எப்போது படித்தாலும்  தங்களுடைய கருத்தை சொல்லுங்க.. அதுதான் என்னை உற்சாகப்படுத்தும்... நன்றி... நன்றி...

31 comments:

  1. எங்க தல பாட்டு ம்ம்ம்ம் ரொம்ப பிடிக்கும்...விளக்கம் கொடுத்து கலக்குறீங்க போங்க

    ReplyDelete
  2. அருமையான பாடல்

    ReplyDelete
  3. உண்மைலேயே மிக சிறந்த பாட்டு
    மிக சிறந்த நடிப்பு
    மிக சிறந்த கருத்து

    தல தலதான்

    ReplyDelete
  4. எனக்கு சோகப்பாடல்களே பிடிப்பதில்லை! ஆனாலும் உங்களுக்காக இப்பாடலை ரசிக்கிறேன்! மியூசிக் ரொம்ப அருமை!!

    ReplyDelete
  5. என் நண்பா தமிழ்மணத்தில் சேர்க்கல?

    ReplyDelete
  6. அட,நம்ம தல பாட்டு! ’தல’க்கு நான் ஆரூடம் சொன்ன கதை--http://chennaipithan.blogspot.com/2009/02/blog-post_5647.html

    ReplyDelete
  7. தமிழ்மணம் என்ன ஆச்சு?

    ReplyDelete
  8. >>
    இப்பாடல் நண்பர் ஆர்.கே. சதீஷ்குமார் அவர்களுக்கு. ....

    சித்தோடு ஷீலா மேட்டர் எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சா.. அய்யய்யோ.. சதீஷ்க்கு தெரிஞ்சா வருத்தப்படுவாரே,. ஹி ஹி

    ReplyDelete
  9. நான் கல்லூரியில் படித்த காலத்தில் இந்த பாட்டு முழுமையாக என் நினைவில் இருந்தது. அது ஒரு கனா காணும் காலம்.

    ReplyDelete
  10. நல்ல ரசனைதான் உங்களுக்கு :))

    ReplyDelete
  11. நல்லா இருக்கு மக்கா...

    ReplyDelete
  12. அருமையான காதல் பாடல்.

    ReplyDelete
  13. எம்.ஜி.ஆர் பற்றிய புதிய தகவல்கள் விபரம் அறிய;
    sathish777.blogspot.com

    ReplyDelete
  14. நல்ல பாடல். பகிர்வுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  15. கடை முழுதும் பாட்டு இருக்குறதப் பார்த்தா நீங்க பாட்டு ரசிகன்ன்னு தெரியுது.

    அடுத்த முறை பாட்டு தேவைன்னா இந்தக் கடைக்கு ஓடி வந்து விடவேண்டியதுதான்:)

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  16. இந்தப் பாட்டு எனக்கும் ரொம்ப பிடிக்கும் .. ஹி ஹி

    ReplyDelete
  17. நல்ல பாடல் அந்த படம் வந்த புதிதில் அதிகமாக ஒலிபரப்பட்ட மற்றும் ரசிக்கப்பட்ட பாடல்...

    ReplyDelete
  18. பாடல் வரிகள் ரசிக்கவைத்தன.

    ReplyDelete
  19. மாப்ள அருமையான எனக்குபுடிச்ச பாடலு நன்றி ஹிஹி!

    ReplyDelete
  20. ம்.. அசத்தல் பாட்டு அசத்தல் விளக்கம்..

    ReplyDelete
  21. செம பாட்டு மச்சி..

    ReplyDelete
  22. //கடவுள் பூமிக்கு வருவதில்லை
    மீறி அவன் பூமி வந்தால்
    தாடியோடதான் அலைவான் வீதியிலே,
    //
    இது நான் மிக ரசித்த வரிகள்..
    இந்த பாடலை தெரிவு செய்தமை பாராட்டுக்குரியது. ரசனையான
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  23. உங்களையும், உங்கள் வலைப்பூவையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.
    பார்க்கவும்: வியாழன் கவிதைகள் சரமாக

    ReplyDelete
  24. கருத்திட்டு ஆதரவு நல்கிய அனைவருக்கும் என் நன்றிகள்.....

    ReplyDelete
  25. இந்த பாடலைப் பாடியது ஹரிஹரன், சங்கர் மகாதேவன் அல்ல..

    ReplyDelete

படிச்சி முடிச்சாச்சா..
தட்டிக் கொடுங்கள் அதை அடைக்கத்துக் கொள்கிறேன்...
இல்லையென்றால்
குட்டு வையுங்கள் அதை உரமாக்கிக் கொள்கிறேன்..
தட்டலோ குட்டோ அவசியம் பதிவு செய்யுங்கள்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...