Wednesday, February 2, 2011

ஒரு பண்பாடு இல்லையென்றால்...


பாடலுக்கான சூழ்நிலை :

பட்டணத்துக்கு நடிக்க ஆசைப்ட்டு  தவறான ஒருக்கு உதவிசெய்ய அரண்மனையில் வேலைக்கு ‌சேறுகிறார் நாயகன் (ரஜினி). அங்கு ஆள்மாறட்டம் செய்து இருந்தாலும் இவர் தவறு செய்யாமல் இருக்கிறார். அந்த வீட்டில் இர்ந்துக் கொண்டு அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார்.. அப்படியிருக்க அந்த வீட்டில் இருக்கும் மூத்த மகள் தன் பிறந்த நாளை நாயகனுக்கு தெரியாமல் நண்பர்களுடன் போதை? ஆடல் பாடலுடன் கொண்டாடுகிறார். இதை பார்க்கும் இளைஞர்கள் இப்படி குடித்து விட்டு தன்னை மறந்து தன்னுடைய பண்பாட்டை மறந்து இப்படி கெட்டுப் போகிறார்களே.. என்று மனநொந்து பாடுவதாத இந்த பாடல் அமைந்துள்ளது...

பாடல் விளக்கம் :

மேலை நாட்டு கலாச்சாரம் எவ்வாறு நமது நாட்டில் புற்று நோய் போல மெல்ல மெல்ல நமது பண்பாட்டை சீரழித்து வருவதை எளிமையான பாடல் வரிகளில் அமைத்துள்ளார் கவிப்பேரரசு.

புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பெண்களும் ஆண்களும் அநாகரிகமாக குத்தாட்டம் போடுவதும், மது பானங்கள் குடிப்பதும், வயது வித்தியாசம் இல்லாமல் கூத்தடிப்பதும் கலாச்சார சீரழிவின் உச்ச கட்டம்.

இப்படி நம் தேசத்திற்கு என்று இருக்கும் பண்பாட்டை மறந்து இப்படியிருக்கிறார்களே என்று வேதனைப்படுவதாக உள்ளது தீய பழக்கமானது முதலில் சாதாரனமாக வந்து பின்பு அது நம்மை அடிமைப்படுத்திவிடும் என்று கவிப்பேரரசு மிகவும் தெளிவாக குறிப்பிட்டு இருப்பார்...

பொதுவாக பாவத்தை போக்க கங்கையில் குளிப்போம் ஆனால் பண்பாடு தவறியவர்கள் கங்கையில் குளித்தால் அந்த கங்கையே அழுக்காகி விடும் என்ற வரிகள் இந்த பாடலை உச்சத்தில் வைக்கிறது..
மயக்கம் என்பது ஒரு மாத்திரையில் இல்லை விளக்குள் இறுந்தும் இப்படி இருட்டுக்குள் வாழ்வது சரியா? தம் தேசம் உன்னை அழைத்துக் கொண்டிருக்கிறது ஏன் இப்படி கொட்டுப்போகிறாய் என்று அந்த பாடல் விளக்குகிறது..

‌‌ஜேசுதால் குரலில் மிகவும் இனியாக இருக்கும் இந்தபாடல் ஒரு பங்ளாவில் படமாக்கப்பட்டிருக்கும். காட்சிகள் வரி‌களட நம்மை கண்டிப்பாக ஆட்கொள்ளும்..

பாடல் விவரம் :

படம்: ராஜா சின்ன ரோஜா
இசை: சந்திரபோஸ்
பாடியவர்: KJ ஜேசுதாஸ்
வரிகள்: வைரமுத்து
‌வெளிவந்த ஆண்டு : 1989

அந்த பாடல் வரிகள் :

ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை
நம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை
சிறகில்லாமல் தள்ளாடும் செல்ல கிளிகள்
என் கண்ணோரம் இப்போது கண்ணீர் துளிகள்  (ஒரு பண்பாடு..)

வளர்ந்து வராத பிறை இல்லை
வடிந்து விடாத நுரை இல்லை
திரும்பி வராத பகல் இல்லை
திருந்திவிடாத மனம் இல்லை
ஒரு நாள் சுவைப்போம் என்று நினைத்தால்
ஒரு நாள் சுவைப்போம் என்று நினைத்தால்
உயிரை சுவைக்கும் பொய் இல்லை
இதை இன்பம் என்பது இழக்காகும்
நீ குளித்தால் கங்கை அழுக்காகும்   (ஒரு பண்பாடு..)

மயக்கம் என்பது மாத்திரையா
மரணம் போகும் யாத்திரையா
விளக்கு இருந்தும் இருட்டரையா
விடிந்த பின்னும் இருட்டறையா
வரம்பு கடந்து நரம்பு தளர்ந்து
வரம்பு கடந்து நரம்பு தளர்ந்து
இந்த உலகம் உன்னை அழைக்கிறது
அட இன்னும் வாழ்க்கை இருக்கிறது  (ஒரு பண்பாடு..)
 
அந்தப்பாடலையும் பாருங்களேன்..


கண்டிப்பாக 
ஓட்டுகளும்.. பின்னுட்டமும் நம்மை ஒண்றினைக்கும்...

16 comments:

  1. அருமை தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  2. Me the first., இதைபோலவே இன்னோரு பிளாக் உங்களுடையதா?
    http://jojosurya2011.blogspot.com/

    ReplyDelete
  3. பாடல் அருமை.. விளக்கமும் அருமையாக உள்ளது
    மனம் தளராதிர்கள் பதிவிடுங்கள்

    ReplyDelete
  4. நீங்கள் மட்டும் சொந்தமாகவா பதிவு போடுகிரீர்கள்..
    பதிவுலகில் இது சகஜம்.மனம் தளராதிர்கள்..

    ReplyDelete
  5. சாரி ஃபார் லேட் எண்ட்ரி பாஸ்

    ReplyDelete
  6. யார் மீது தவறோ?
    நடந்தவை முடிந்துபோனவை..
    இனி நடப்பவை நல்லதாகவே இருக்கட்டும்...
    உங்கள் பதிவுகளில் உழைப்பு தெரிகிறது..
    தொடர்ந்து எழுதுங்கள்...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. 80துகளில் வந்த பாடல்கள் எல்லேமே மனதை கிறங்கவைப்பவை, வைரமுத்து, இளையராஜா, பாலசுப்ரமணியம் மூவரின் கூட்டு அருமையாக இருந்தது. ஒங்க பதிவை ரொம்ப மிஸ் பண்ணிட்டேன் போல இருக்கு, இனி டெய்லி ஆஜர் போட்டுர்றேன் யுவர் ஆனர்!

    ReplyDelete
  8. Speed Master said...

    அருமை தொடர்ந்து எழுதுங்கள்
    உங்கள் ஆதரவு இருந்தால் கண்டிப்பாக தொடருவேன்..
    நன்றி

    ReplyDelete
  9. sakthistudycentre-கருன் said...

    Me the first., இதைபோலவே இன்னோரு பிளாக் உங்களுடையதா?
    http://jojosurya2011.blogspot.com/

    நன்றி...

    ReplyDelete
  10. # கவிதை வீதி # சௌந்தர் said...

    பாடல் அருமை.. விளக்கமும் அருமையாக உள்ளது
    மனம் தளராதிர்கள் பதிவிடுங்கள்

    கண்டிப்பாக மனம் தளரமாட்டேன்..ஆறுதலுக்கு நன்றி

    ReplyDelete
  11. சி.பி.செந்தில்குமார் said...

    சாரி ஃபார் லேட் எண்ட்ரி பாஸ்

    லேட்டாவ ந்தாலும் நீங்க எனக்கு எப்பவும் லேட்டஸ்தான்

    ReplyDelete
  12. sakthistudycentre-கருன் said...

    யார் மீது தவறோ?
    நடந்தவை முடிந்துபோனவை..
    இனி நடப்பவை நல்லதாகவே இருக்கட்டும்...
    உங்கள் பதிவுகளில் உழைப்பு தெரிகிறது..
    தொடர்ந்து எழுதுங்கள்...வாழ்த்துக்கள்...

    நன்றி..

    ReplyDelete
  13. வசந்தா நடேசன் said...

    80துகளில் வந்த பாடல்கள் எல்லேமே மனதை கிறங்கவைப்பவை, வைரமுத்து, இளையராஜா, பாலசுப்ரமணியம் மூவரின் கூட்டு அருமையாக இருந்தது. ஒங்க பதிவை ரொம்ப மிஸ் பண்ணிட்டேன் போல இருக்கு, இனி டெய்லி ஆஜர் போட்டுர்றேன் யுவர் ஆனர்!


    ஆஜருக்கு நன்றி...

    ReplyDelete
  14. பாடலும் சிறப்பான தேர்வு விளக்கமும் அருமை..

    பகிர்வுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  15. மாணவன் said...

    பாடலும் சிறப்பான தேர்வு விளக்கமும் அருமை..

    பகிர்வுக்கு நன்றி நண்பரே

    நன்றி மாணவரே..

    ReplyDelete
  16. பாரத்... பாரதி... said...

    வணக்கங்களும்,வாக்குகளும்...


    உங்களுக்கும் என் வணக்கங்கள்..

    ReplyDelete

படிச்சி முடிச்சாச்சா..
தட்டிக் கொடுங்கள் அதை அடைக்கத்துக் கொள்கிறேன்...
இல்லையென்றால்
குட்டு வையுங்கள் அதை உரமாக்கிக் கொள்கிறேன்..
தட்டலோ குட்டோ அவசியம் பதிவு செய்யுங்கள்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...