Thursday, February 10, 2011

போவோமா ஊர்கோலம் .... பூலோகம் எங்கெங்கும்...


பாடலின் சூழ் நிலை :


நாயகன் (பிரபு) ஒரு விவரம் தெரியாத அப்பாவி.. படத்தில் வி‌ஷேசங்களில் பாடல் பாடி பொழப்பு நடத்துவர் வெகுளி. நாயகி (குஷ்பு) மூன்று அண்ணன்களுக்கு தங்கையாக பிறந்து பொத்தி பொத்தி வளர்க்கிறார்கள். ஊரில் இவரை எந்த ஆம்பளையும் பார்க்க கூடாது.. பேசக்கூடாது என்று உத்திரவே போட்டு வய்த்துள்ளார்கள். இதனால் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே அடைபட்டுக்கிடக்கிறார். நாயகன் மட்டும் அந்த வீட்டில் போக வர உரிமையுள்ளது.. (அவர் வெகுளி என்பதால்) வீட்டில் அடைந்து கிடக்கும் நாயகி ஊரைச்சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டு அண்ணன்களுக்கு தெரியாமல் நாயகனுடன் ஊரைச்சுற்றிப்பார்க்க வெளியே செல்கிறார்.. அப்போது புதியதாக வெளியில் வந்து நாயகி பார்த்து அதிசயிக்கும் அத்தனையும் வியந்து பார்த்து பாடும் படி பாடல் அமைந்துள்ளது...

பாடல் பொருள் :
 

இக்கரைக்கு அக்கரை பச்சை என்பார்கள் அதனால் அரண்மனைக்குள்ளே இருந்தவருக்கு வெளி சூழல் வயல்வெளி, வரப்பு, வாய்க்கால், அறுவி,  தென்றல் காற்று, சிட்டுக்குருவியின் சினுங்கள், குயிலின் பாட்டு, என அத்தனையும் ஆனந்தப்படுத்துவதாய் இருக்கிறது.. அதனால்தான் இந்த பூலோகம் எங்கும் ஊர்கோலம் போவோமா என்று கேட்கிறார். ஓடுகின்ற இந்த பொன்னி நதிக்கூட ஆயிரம் சுரங்கள் சொல்கிறதே என்று அதிசயிக்கிறார். நதியின் ஓசை.. குருவியின் சப்தம், வயற்காடு இதையெல்லாம் ஆனந்தம் என்று சொல்லும் நாயகியின் கருத்து நாயகனை முகம் சுளிக்க வைக்கிறது.. இதிலென்ன சுகம் அரண்மனைதான் உண்மையான சுகம் என்று மறுப்பு தெரிவிக்கிறார் ஏன் என்றால் அவர் அரண்மனை சூழலைத்தான் சுகம் என்று நினைக்கிறார். எப்போதும் இயற்கையோடு ஓன்றி வாழ்வதால் அதை தனிமைப்படுத்தி பார்க்க முடியாதவராய் இருக்கிறார்.

பாடலின் சிறப்பு : 


இந்த பாடலை திரு. கங்கைஅமரன் எழுத அதை ராகதேவன் தன்னுடைய இனிமையான இசையில் மிகவும் அழகாக கொடுத்திருப்பார். பாடலை இயற்கை எழில் கொஞ்சும் கிராமப் ‌பிண்ணனியில் அழகாக படமாக்கியிருப்பார் வாசு. இதில் குஷ்புவின் முக பாவனையும், பிரபுவின் அந்த குறுஞ்சிரிப்பும் மிகவும் அ‌ழகாக இருக்கும்.


பாடலின் விவரம் :


திரைப்படம் :  சின்னத்தம்பி
நடிகர்கள் : பிரபு, குஷ்பு, ராதாரவி,
பாடியவர்கள் :
எஸ்.பி.பாலசுப்ரமணியம்  சுவர்ணலதா 
பாடலாசிரியர் : கங்கை அமரன்
இசை : இளையராஜா
இயக்கம் : பி.வாசு
படம் வெளியான ஆண்டு : 1991
 

அந்த பாடலின் வரிகள் :


பல்லவி

பெ : போவோமா ஊர்கோலம் ....
           பூலோகம் எங்கெங்கும்... 
           ஓடும் பொண்ணி ஆறும்...பாடும் கானம் நூறும்
           காலம் யாவும் பேரின்பம்...கானும் நேரம் ஆனந்தம்
           போவோமா ஊர்கோலம் ....
           பூலோகம் எங்கெங்கும்... 
 

சரணம் - 1

ஆ : அரண்மனை அன்னக்கிளி தரையில நடப்பது 

           நடக்குமா அடுக்குமா
 

பெ : பணியிலும் வெட்டவெளி வெய்யிலிலும் உள்ளசுகம் 
           அரண்மண கொடுக்குமா
 

ஆ :  குளுகுளு அரையில கொஞ்சிக் கொஞ்சி தவழ்ந்தது
           குடிசைய விரும்புமா
 

பெ : சிலுசிலுசிலுவென இங்கிருக்கும் காத்து அங்க 
           அடிக்குமா கிடைக்குமா
 

ஆ :  பளிங்கு போல உன்வீடு வழியில பள்ளம் மேடு
பெ : வரப்பு மேடும் வயலோடும் பறந்து போவேன் பாரு
 

ஆ :  அதிசயமான பெண்தானே
பெ : புதுசுகம் தேடி வந்தேனே 
 

போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்... 
ஓடும் பொண்ணி ஆறும்...பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம்...கானும் நேரம் ஆனந்தம்
போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்...  

சரணம் - 2
 

பெ : கொட்டுகிற அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும் 
          அடடடா அதிசயம்
 

ஆ : கற்பனையில் மிதக்குது கண்டதையும் ரசிக்குது 
          இதிலென்ன ஒரு சுகம் 
 

பெ : ரத்தினங்கள் தெறிக்குது முத்துமணி ஜொலிக்குது
           நடந்திடும் நதியிலே
 

ஆ :  உச்சந்தல சொழலுது உள்ளுக்குள்ள மயங்குது 
          எனக்கொண்ணும் புரியல்லே
 

பெ : கவிதை பாடும் காவேரி ஜதிய சேர்த்து ஆடும்
         அணைகள் நூறு போட்டாலும் அடங்கிடாம ஓடும்
 

ஆ :  போதும் போதும் உம் பாட்டு
பெ : பொறப்படப் போறேன் நிப்பாட்டு 
 

போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்... 
ஓடும் பொண்ணி ஆறும்...பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம்...கானும் நேரம் ஆனந்தம்
போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்... 


அந்தப்பாடலையும் பாருங்களேன் :


அன்பான வாசகர்களே இதை எப்போது படித்தாலும்  தங்களுடைய கருத்தை சொல்லி விட்டுபோங்கள்.. அதுதான் என்னை உற்சாகப்படுத்தும்...

9 comments:

  1. Me the first,

    என்னை ஞாபகம் இருக்கா?

    என் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அதனால் கடந்த வாரம் பதிவிடவில்லை.. நன்றி..

    See,

    ReplyDelete
  2. நல்ல பாடல். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. பாடல் மிக அருமை..
    விளக்கமும் பாடலின் பொருளும் சொன்னதற்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. பாடல்களுக்கு உங்க விளக்கங்கள் சூப்பருங்கோ!

    பதிவு சூப்பரு

    ReplyDelete
  5. sakthistudycentre-கருன் said...

    Me the first,

    என்னை ஞாபகம் இருக்கா?

    என் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அதனால் கடந்த வாரம் பதிவிடவில்லை.. நன்றி..

    நன்றி கருண்.. தங்கள் வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  6. சூப்பர்! ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க!

    ReplyDelete
  7. இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டதற்கு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. பாடல்பற்றி விளக்கங்களுடன் பதிவு அருமை...

    தொடர்ந்து கலக்குங்க... வாழ்த்துக்கள் :))

    ReplyDelete

படிச்சி முடிச்சாச்சா..
தட்டிக் கொடுங்கள் அதை அடைக்கத்துக் கொள்கிறேன்...
இல்லையென்றால்
குட்டு வையுங்கள் அதை உரமாக்கிக் கொள்கிறேன்..
தட்டலோ குட்டோ அவசியம் பதிவு செய்யுங்கள்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...