Monday, February 28, 2011

இது கடவுள் தந்த அழகிய வீடு...


பாடலுக்கா சூழ்நிலை
மாமல்லபுரத்தில் டூரிஸ்ட் கைடாகக் காலம் தள்ளி வருபவர் 'அபேஸ்' பாலையாவான சூர்யா. பணம் இல்லாத போது அவ்வப்போது டூரிஸ்டுகளின் நகைகளை அபேஸ் செய்பவர்.   சூர்யாவுடன் அவரது நண்பராக சத்யன்  வருகிறார்.

டூரிஸ்ட் சீஸன் இல்லாத நேரத்தில் கொஞ்சம் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு விடுகிறது. வீடு புகுந்து திருடுகிற முடிவை எடுக்கிறார்கள் சூர்யாவும் சத்யனும்.

நீலாங்கரையில் ஒரு பெரிய பங்களாவில் திருட நுழைகிறார்கள். அது திரைப்பட நடிகை ஜோதிகாவின் வீடாக இருக்கவே மனம் மாறி எடுத்த பொருட்களையெல்லாம் வைத்து விட்டுக் கிளம்பி விடுகிறார்கள். என்றாலும் வெளியேறும் நேரத்தில் போலீஸில் மாட்டிக் கொள்கிறார்கள். ஜோதிகாவின் மேனேஜர் அவரது விளம்பரத்துக்காக "வேறு மாதிரி" புகார் கொடுத்துவிட, சூர்யா மூன்று மாதம் ஜெயிலில் கழித்துவிட்டு வருகிறார். கடுப்பில் ஒரு ஷூட்டிங்கில் இருக்கும் ஜோதிகாவைக் கடத்தி விடுகிறார். 

அவ்வாறு கடத்திவிட்டு ஒதுக்கு புற பங்களாவில் தங்குகிறார்கள். அன்று ஜோதிகாவுக்கு பிறந்த நாள் வருகிறது  அதை கொண்டாடும் விதமாக ஒரு பிறந்த நாள் விழா ஏற்பாடு செய்து ஒரு ஊனமுற்ற பெண் அதை தொடர்ந்து சூர்யாவும் பாடும் படி பாடல் அமைந்துள்ளது.


பாடலுக்கான பொருள் : 



இந்த உலகம் ஒரு மிகப்பெரிய வீடு..  இந்த வீடு கடவுள் நமக்கு தந்த பரிசு...  இந்த உலகம் முழுவதும் நிறைந்து இருப்பது அவரே... எப்போதும் கண்களை மூடிக் கொண்டு அவரை துதிப்பாடுவோம்... நாமெல்லாம் கடவுளின் பிள்ளைகள்.. இங்கே கருணைப் பொங்கும் உள்ளங்கள் உண்டு.. ஒரு துயரறெண்று கலங்கிளால் கண்ணீரைத் துடைக்கும் கைகள் இங்கே நிறைய உண்டு. இந்த உலகத்தில் இருக்கும் எதுவும் நமக்கு சொந்தம் இல்லை. அதனால் அன்பு காட்டி அனைவரும் ஒன்று பட்டு வாழ்வோம்.

இந்த உலகில் எல்லா இடங்களிலும் இன்பங்கள் குடிக் கொண்டு இருக்கிறது. அவைகள் என்று‌மே குறைவதில்லை. நாம் வாழுகின்ற வாழ்க்கையில் என்று மே குறைகள் இல்லை.. எவ்வளவு நாள் நாம் வாழ வேண்டும் என்ற தீர்மானம் இருக்கிறதோ அதுவரை இந்த உலகில் வாழ்ந்து விட்டு போவோம்.. அப்படி மரணம் நம்மை அழைக்கும் போது அனைத்திடமும் நன்றி சொல்லி விட்டு சந்தோஷமாக விடைப் பெற்றுச் செல்வோம்.


இந்த உலகத்தில் இருக்கும் அனைவரும் சமம் தான்.. அவரவர் சுவாசிப்பதற்கு தனி காற்றோ.. குடிப்பதற்கு தனித்தனி தண்ணீர் என்று பிரித்து வைக்க வில்லை. இந்த இடத்தில் தான் மழையை பெய்விக்க  வேண்டும் என்று எந்த மேகமும் நினைப்பதில்லை...  நாமக்கு துன்பம் வரும் அதைக்க்ணடு கலங்காதீர்கள்.. அடுத்து வருவது இன்பம் நிறைந்த வசந்தக்காலம் தான்


வீழ்வதும் எழுவதும் தான் வாழ்க்கை இனி வசந்தத்தை நோக்கியே பயனிப்போம். அது தான் உண்மையான வாழ்க்கை என்று பொருள் படும் படி இந்த பாட்டு இயற்றப்பட்டு உள்ளது.


பாடலின் சிறப்புகள் :

1. படத்தில் சூர்யா ஜோதியா சேர்ந்து நடித்திருப்பார் (இந்த படத்தில் மட்டும் தான் ஜோதிக தன் சொந்த குரலில் பேசி நடித்தார்)

2. தமிழக செல் போன்களில் அதிக அளவில் ரிங் டோனாக இடம் பிடித்த பாடல்.

3. லைட் வெளிச்சம் இல்லாமர் அதிக பட்ச காட்சிகள் மெழுவர்த்திக் கொண்டே படமாக்கப்பட்டது.

4. உண்மையிலே ஊணமான ஒரு பெண்னை நடிக்க வைத்திருந்தார் இயக்குனர் சிங்கம் புலி.

பாடலின் விவரம் :

திரைப்படம் : மாயாவி
நடிகர்கள் : சூர்யா,  ஜோதிக, சத்யன்
பாடலாசிரியர் : பழனிபாரதி

பாடியவர்கள்:கல்பனா , SPB சரண்
இசையமைத்தவர்:தேவி ஸ்ரீப்ரசாத்
இயக்கம் : சிங்கம்புலி


அந்த முழு பாடல் MP3 வடிவில் 


TamilState - Kadavul Thantha Azagiya Vaazhu

Powered by mp3skull.com



அந்த பாடலின் வரிகள் :



பல்லவி :


கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் மூடியே...
வாழ்த்து பாடு


கருணை பொங்கும்.. உள்ளங்கள் உண்டு
கண்ணிர் துடைக்கும் கைகளும் உண்டு

இன்னும் வாழனும் நூறு ஆண்டு
 

எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்

அழகே பூமியின் வாழ்க்கையை
அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்...

ஓ ஓ ஓஓஒ.....



சரணம் : 1


பூமியில் பூமியில்
இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில்
எனக்கென்றும் குறைகள் கிடையாது
 

எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ.. ஒ..
எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ
அது வரை நாமும் சென்றுவிடுவோம்
 

விடைபெறும் நேரம்
வரும் போதும் சிரிப்பினில்
நன்றி சொல்லிவிடுவோம்
 

ஓஓஒ ஓஒ
 

பரவசம் இந்த பரவசம்
என் நாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே

சரணம் - 2

நாம் எல்லாம் சுவாசிக்க தனி தனி காற்று கிடையாது
மேகங்கள் மேகங்கள்
இடங்களை பார்த்து பொழியாது
 

கோடையில் இன்று இலையுதிரும்
வசந்தங்கள் நாளை திரும்பி வரும்
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும்
 

முடிவதும் பின்பு தொடர்வதும்
இந்த வாழ்க்கை சொல்லும்
பாடங்கள் தானே
கேளடி
( கடவுள் தந்த அழகிய வாழ்வு )



‌ அந்த பாடலையும் பார்த்துட்டு போங்க..



என் வேலையை நான் செய்து விட்டேன் ரசித்தவர்கள் தயவு செய்து  கருத்து சொல்லிவிட்டு செல்லுங்கள்..
 
இப்பாடல் நண்பர் நாஞ்சில் மனோ அவர்களுக்கு  சமர்ப்பிக்கிறேன்..

அன்பான வாசகர்களே இதை எப்போது படித்தாலும்  தங்களுடைய கருத்தை சொல்லுங்க.. அதுதான் என்னைமேலும் உழைக்க வலுசேர்க்கும்... நன்றி... நன்றி...

16 comments:

  1. நல்ல அருமையான பாடல்

    ReplyDelete
  2. நல்ல பாடல் .. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நல்ல பாடல்;நல்ல பகிர்வு!

    ReplyDelete
  4. அருமையான பாடல்....
    மாயாவி படமும் ஜாலிதான்....

    ReplyDelete
  5. ////இந்த படத்தில் மட்டும் தான் ஜோதிக தன் சொந்த குரலில் பேசி நடித்தார்////

    அருமையான பாடலுடன் நல்ல விடயங்களை பகிர்கிறிர்கள் நன்றிகள்....

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    காணாமல் போன 2 பதிவர்கள், மறைமுக பணம் பறிக்கும் தொலைத் தொடர்பு சேவையும்.

    ReplyDelete
  6. இந்தப் பாட்டு எனக்கும் பிடிக்கும்க.

    அதிலும் இந்த வரிகள் " எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ , அதுவரை ..
    அப்புறம் உடனே ஆண் குரல் வரும் .. ரொம்ப அருமையா இருக்கும் ..

    பாடலின் கருத்தும் ரொம்ப நல்லா இருக்கும் ..

    ReplyDelete
  7. நல்ல பாடல். இந்த படத்தை இயக்குனர் பாலா தயாரித்தார் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  8. நல்லா பாருங்க வடையே எனக்குதான்

    ReplyDelete
  9. எனக்கு மிகவும் பிடிச்ச பாட்டு தல..

    ReplyDelete
  10. I LIKE THIS SONG VERY MUCH.

    THE WAY YOU WROTE THIS POST IS MENTIONABLE........

    THANKS...

    ReplyDelete
  11. நண்பர் நாஞ்சில் மனோவின் பாடல் தேர்வு கலக்கல். அதிலும் உங்களின் அர்பணிப்பு அருமை

    ReplyDelete
  12. ரொம்ப யதார்த்தமான பாட்டு பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  13. அருமையான பாடல்

    ReplyDelete
  14. கண்களில் கண்ணீர்....

    ReplyDelete

படிச்சி முடிச்சாச்சா..
தட்டிக் கொடுங்கள் அதை அடைக்கத்துக் கொள்கிறேன்...
இல்லையென்றால்
குட்டு வையுங்கள் அதை உரமாக்கிக் கொள்கிறேன்..
தட்டலோ குட்டோ அவசியம் பதிவு செய்யுங்கள்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...