Monday, February 7, 2011

பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்...


பாடலுக்கான சூழ்நிலை :
 
எதற்கும் கவலைப்படாத ஒரு யாதர்த்தமான வாலிபராக. நாயகன்.. தவறுநடக்கும் போது... ‌அது யாராக இருந்தாலும் தட்டிக் கேட்பவர் . ஒரு முரட்டு குணம், தந்தையுடன் வசிக்கிறார்.. நாயகியும் ஏறக்குறைய ‌அதே போன்று தான்... இவர்கள் இருவருக்கும் சந்திக்கும் போதெல்லாம் சண்டையில் ஆரம்பிக்கிறது.. பின்பு கொஞ்சம் கொஞ்சமாக அது அவர்களுக்கு தெரியாமல் காதலாக மாறுகிறது அப்படி காதலாக மாறும் போது ஏற்படுகிற  சந்தோஷ உணர்வை சொல்வது போல் இந்த பாடல் அமைந்துள்ளது...
 
பாடலுக்கான விளக்கம் :
 
பொதுவாக மனிதனுக்கு ஏற்படுகின்ற மகிழ்ச்சியான சம்பவங்கள் மிகக்குறைவு.. ஆனால் வாழ்க்கையில் நம்மை அறியாமலையே பல்வேறு மகிழ்ச்சியான சம்பவங்கள் தம்மை சுற்றியே இருக்கிறது.. அவற்றை நாம் அப்போது நம்மை அறியா‌தலேயே உணர்கிறோம்...
 
உண்டு முடித்தப்பின் தெரியும் நெல்லிக்கனியின் சுவையைப்போல்.. சில விஷயங்கள் முடிந்த பிறகே அவற்றின் மதிப்பை  நாம் உணர்வோம்..  அந்த யாதர்த்த தருணங்களை வரிசைப்படுத்தியே இந்த பாடல் இயற்றப்பட்டுள்ளது..

பேருந்தில் ஏறியவுடன் நாம் ஜன்னலோர‌த்தில் தான் சீட் பிடிப்போம்... ஜன்னுலோரத்தில் அமர்ந்து அனைத்தையும் வேடிக்கைப்பார்ப்பது  தன்னுடை பயணத்ததை இனிமையாக்கும்... அது போல பள்ளி பருவத்தில் விடுமுறையின் போதுதான்  இது போன்று பல்வேறு தருணங்களில் நாம் அனுபவிக்கும் சந்தோஷத்தருணங்னளை நாயகனும் நாயகியும் மாறி.. மாறி... செல்லிக் கொள்வது போல் இந்த பாடல் இருக்கிறது..

இறுதியில் காதலிக்கு காதலனும்.. காதலனுக்கு காதலியும் எழுதும் கடிதத்தில் இருக்கும் எழுத்துப்பிழையைக்கூட ரசிக்கிற பக்குவம் இந்த காதலுக்குதான் வரும் என்று காதலுக்கு மிக அழகான விளக்கத்தை தருகிறது.

அனைத்து சந்தோஷகளையும் காதலில்  பெறலாம் என்ற இந்த பாடல் காலம் முழுக்க நிலைத்து நிற்கும்...
 
பாடல் காட்சிகள் :
 
பாடல் காட்சிகள் மலைப்பிரதேச புள்வெளி படுகை, அருவி.. என அழகு கொஞ்சும் சூழலழல் மலையாள பாரம்பரிய கலரி சண்டை வீரர்கள் பின்னணியில் ஆடி பாடலை அழகுபட இயக்கியிருக்கிறார் சிவா.
 
பாடல் விவரம் :

படம் : பொறி (2007)
நடிப்பு : ஜீவா, பூஜா,
இசை : தீனா

பாடலாசிரியர்: யுகபாரதி
பாடியவர்கள் : மது பாலகிருஷ்ணன், மதுஸ்ரீ
ஒளிப்பதிவு : ஏகாம்பரம்
இயக்கம் : சுப்பிரமணிய சிவா
 
பாடல் வரிகள் :

ஆண்: பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்
                பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பெண்: பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்
                 பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

ஆண்: விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
               விளையாட்டுப் பிள்ளைகளின் செல்ல கோபம்

பெண்: ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல் அன்பே அன்பே நீயே   (பேருந்தில்..)
 

சரணம் - 1
 

ஆண்: பயணத்தில் வருகிற சிறு தூக்கம்
               பருவத்தில் வருகிற முதல் கூச்சம்

பெண்: பரிட்சைக்கு படிக்கிற அதிகாலை
                கழுத்தினில் விழுந்திடும் முதல் மாலை

ஆண்: புகைப்படம் எடுக்கையில் திணறும் புன்னகை
               அன்பே அன்பே நீதானே
               அடைமழை நேரத்தில் பருகும் தேநீர்
                அன்பே அன்பே நீதானே

பெண்: தினமும் காலையில் எனது வாசலில்
                கிடக்கும் நாளிதழ் நீதானே                              (பேருந்தில்..)


சரணம் - 2

ஆண்: தாய் மடி தருகிற அரவணைப்பு
                உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு

பெண்: தேய்பிறை போல் படும் நகக் கணுக்கள்
                 வகுப்பறை மேஜையில் இடும் கிறுக்கல்

ஆண்: செல்ஃபோன் சிணிங்கிட குவிகிற கவனம்
               அன்பே அன்பே நீதானே
               பிடித்தவர் தருகிற பரிசுப் பொருளும்
              அன்பே அன்பே நீதானே

பெண்: எழுதும் கவிதையின் எழுத்துப் பிழைகளை
                ரசிக்கும் வாசகன் நீதானே                          (பேருந்தில்...)


அந்த பாடலையும் பாருங்கள்..




நண்பர்களே...  இனி உங்கள் வேலை...
வாக்களித்து.. பின்னூட்ட்ம்  அளித்து என் பணி சிறக்க உதவுங்கள்..

4 comments:

  1. அருமையான பாட்டு அதற்கான விளக்கம் அருமை..
    இப்பணனத்தை விடாது தொடருங்கள்..

    ReplyDelete
  2. நானும் ரசித்த பாடல் இது, பகிர்ந்தமைக்கு நன்றி, வாழ்த்துக்கள்.

    ReplyDelete

படிச்சி முடிச்சாச்சா..
தட்டிக் கொடுங்கள் அதை அடைக்கத்துக் கொள்கிறேன்...
இல்லையென்றால்
குட்டு வையுங்கள் அதை உரமாக்கிக் கொள்கிறேன்..
தட்டலோ குட்டோ அவசியம் பதிவு செய்யுங்கள்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...