Monday, February 14, 2011

காதலின் மனம்வீ சும் கண்ணே கலைமானே...


பாட்டுக்கான சூழ்நிலை...

விபத்தின் காரணமாக மன நோயாளியாக்கப்படும் விஜி (ஸ்ரீதேவி) மருத்துவபரிசோதகைக்கு செல்லும் வழியில் தவறிவிடுகிறார். பின்னர்  தவறுதலாக விலைமாதுவாக விற்கப்படுகின்றார். அவரை அங்கு சந்தித்துக் கொள்ளும் நல்ல மனம் கொண்ட நாயகன் சுப்பிரமணி (கமலஹாசன்) எனும் ஆசிரியரால் காப்பாற்றப்பட்டு பின் அவரின் வீட்டிற்கு அழைத்து செல்கின்றார் விஜியின் நிலையைக்கண்டு பரிதவிக்கும் சுப்பிரமணி ஒரு கட்டத்தில் அவரை அறியாமலையே விஜிமீது காதல் கொள்ளுகிறார். அவ்வாறு அவ்வாறு காதல் கொண்டு அவரை மிகவும் பாதுகாப்பாக பாதுகாக்கிறார் அந்த சூழலில் இந்த பாடல் இடம் பெறுகிறது..

பாடலின் பொருள் : 

அன்பே உன்னை எண் கண்ணே உன்ன கன்னி மயில் என்று உன்னை நினைக்கிறேன்... ஒரு கனமும் தவறாமல் உன்னைப்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.. அன்பே ஊமையாக இருந்திருந்தால் நான் அமைதியாக இருந்து விட்டு இருப்பேன்.. இல்லை ஏழையாக இருந்து விட்டால் அது ஒரு தனிப்பட்ட அமைதி...  நீ கொஞ்சும் கிளிப்போன்றும்.. பாடும் குயில் போன்று இருக்க வேண்டியவள் உன் வாழ்வில் கடவுள் இப்படி சதி செய்து விட்டாரே.... உன் மீது நான் காதல் கொண்டு பல்வேறு கனவினை வளர்த்துள்ளளேன்.. உனக்காக உன் உயிராக மாறி விட்டடேன் அன்பே என்னை எந்நாளும் மறந்து விடாதே... உன்மையில் நீ இல்லாமல் எனக்கு நிம்மதியில்லை என்று உருக வைக்கும் பாடல் வரிகள்.

பாடலின் சிறப்புகள் :

1.   கவிஞர் கண்ணதாசன் தன் மூச்சை இறக்கி வைத்தப்பாடல்...
     திரைஉலக கவியரசர் சினிமாவில் எழுதிய கடைசிப்பாடல்.

2.  ஸ்ரீதேவியின் குறும்பு தன நடிப்பும், கமலின் காதலில் விழுந்த ஒரு இளைஞனின் மனநிலையும்,  நடிப்பும் மிக அருமையாக இருக்கும். இப்படத்தில் கடைசிக் காட்சிக்காக கமலுக்கு தேசிய விருது கிடைத்தது.

3. இளையராவின் இசையில் அமைந்த இந்த பாடல் என்றும் இளமையோடு காணப்படுகிறது.

4. இரண்டு சில்வர் லோட்ஸ் விருது இப்படத்திற்கு கிடைத்தது.

5. இப்பாடலில் ஊட்டியின் இயற்கை அழமை மிகவும் அழகாக காட்டியிருப்பார், இயக்குனர் பாலு மகேந்திரா.


பாடலின் விவரம் :



படம் : மூன்றாம் பிறை
பாடியவர் :  கே. ஜே. ஜேசுதாஸ்
பாடல்  : கண்ணதாசன்
இசை :  இளையராஜா
வெளிவந்த ஆண்டு : 1983
இயக்கம் : பாலு ம‌கேந்திரா

 

அந்தப்பாடல் : 


பல்லவி

கண்ணே கலைமானே..
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத் தான் கேட்கிறேன்
ஆரிராரோ... ஓராரிராரோ...
 

சரணம் - 1

ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு..
பண்பாடும் ஆனந்த குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது

சரணம் - 2


காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன்..
எந்நாளும் எனை நீ மறவாதே
நீயில்லாமல் எது நிம்மதி...
நீதானே என் சந்நிதி...



அந்தப்பாடலையும் கேளுங்கள் :



இந்தப்பாட்டு ரசிகனை ஆதரியுங்கள்... 
உங்களின் கருத்துக்காக காத்திருக்கிறேன்

12 comments:

  1. உங்க பதிவுக்கு நன்றி

    வாழ்கைல மறக்க முடியாத மனிதன் இவர்.

    இந்தப்பாடல் அப்படியே கண்ண குளமாக்கிடுங்க

    ReplyDelete
  2. இந்தப்பாட்டை ரசிக்காதவர் இதயம் இல்லாதவர். செம பாட்ட்டு

    ReplyDelete
  3. மிக நல்ல பாடல். ரசிக்காதவர்கள் இருக்க முடியாது!

    ReplyDelete
  4. பாட்டு மிகவும் அருமை
    அதற்கான விளக்கங்கள்.. தகவல்கள் அருமை

    ReplyDelete
  5. இதைப் போல் தொடருங்கள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. என்றுமே நினைவில் நிற்கும் பாடல்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  7. அருமயான பாடல்


    அப்படியே நம்ம பதிவு பக்கமும் வாங்க

    ஜிம்பலக்கா லேகிய ஜாடியும் - IPL – ல் வடிவேலும்

    http://speedsays.blogspot.com/2011/02/ipl.html

    ReplyDelete
  8. மிக நல்ல பாடல். ரசிக்காதவர்கள் இருக்க முடியாது!

    ReplyDelete
  9. காதலர் தினம் கலக்குதே
    நீயில்லாமல் எது நிம்மதி...
    நீதானே என் சந்நிதி.

    ReplyDelete
  10. அருமையான பாடல்... பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  11. பாடலும், பாடலுக்கான விளக்கங்களும் சூபர்

    ReplyDelete
  12. ரொம்ப விரிவா இன்ச் இன்சா ரசிச்சு விளக்கி இருக்கீங்க..இசை ஞானி ,கே ஜே ஜே ,கண்ணதாசன்,பாலு மகேந்திர னு அற்புத கூட்டணியில் காலத்திலும் மறக்க முடியாத அழகு பாட்டு இது...

    ReplyDelete

படிச்சி முடிச்சாச்சா..
தட்டிக் கொடுங்கள் அதை அடைக்கத்துக் கொள்கிறேன்...
இல்லையென்றால்
குட்டு வையுங்கள் அதை உரமாக்கிக் கொள்கிறேன்..
தட்டலோ குட்டோ அவசியம் பதிவு செய்யுங்கள்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...