Monday, February 21, 2011

கண்கலங்க வைக்கும் பெத்து எடுத்தவதான்.....



பாடலுக்கான  சூழ்நிலை :

கிராமத்திலிருந்து சென்னைக்கு வரும் ரகுபதி (ரஜினி) ஒரு ஓட்டலில் வேலைக்கு சேருகிறார்.  அந்த ஓட்டலில்  நல்ல பெயர் வாங்கி அந்த ஓட்டல் முதலாளின்  நல்ல வேலைக்காரன் என்ற பெயருடன் அவர் வீடுவரை சென்று பணியாற்றுகிறார். அவருடைய முதலாளியாக சரத்பாபு நடித்திருப்பார். ரகுபதி எவ்வாறு வேலை செய்கிறார் என்பதை பார்க்க  சென்னை வரும் வளையாபதி (வி.கே.ராமசாமி) ஓட்டலில் தங்கி ரகுபதியை கண்காணிக்கிறார்.

இதற்கிடையில் தான் தங்கி வேலை செய்யும் முதலாளியின் தாயார் தான் தன்னுடைய தாயார் என்று ரகுபதிக்கு தெரிய வருகிறது. (தாயாராக கே.ஆர். விஜயா நடித்திருப்பார்) ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பார். சரத்பாபு வளர்ப்பு தாய் என்று தெரிந்து, தன்னை கொல்ல இவர் சதி செய்கிறார் என்று சரத்பாபு குற்றம் சாட்ட, குற்றவாளியாக நிற்கும் தன் தாய்க்கு உதவமுடிய வில்லையே என் உருக்கமாக பாடும் படி பாடல் அமைந்துள்ளது..


பாடல் விளக்கம் :

தன்னை பெத்த நம் தாய் தன்னை தத்து கொடுத்து விட்டு வந்து விட்டாளே. தான் கடன் பட்டதற்காகவா என்னை விற்று வட்டி செலுத்திவிட்டால்..   என்னுடைய மனதை இப்படி பித்தாகு படி செய்து விட்டாரே உறுக்குமாக  பாடுகிறார்..

நான் தான் அவர் வயிற்றில் பிறந்தவன் ஆனால் என்னிடம் அன்பு காட்டவில்லை, ஆனால் வளர்ப்பு பிள்ளை அவருடைய அன்பையே கொச்சைப்டுத்துகிறானே.. நாமெல்லாம் குழைந்தையாகவே இருந்து விட்டால் இவ்வளவு பிரச்சனைகள் இல்லை வளர்ந்தால் இப்படிதான்.. சாதாரண ஒரு சட்டை கிழிந்து விட்டால் தைத்து உடுத்திக் கொள்ளலாம் ஆனால் நெஞ்சு கிழிந்து விட்டால் என்ன செய்வது

கிளியை வளர்த்தால் அதனால் எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனால் புலியை வளர்த்தால் அதனால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டும் தனக்கு உண்மை தெரிந்தும் அதை சொல்ல முடிய வில்லையே... இதற்கெல்லாம் ஒரே தீர்வு தன் தாய் வாய் திறந்து உண்மைகளை சொல்ல வேண்டும். அப்போதுதான் பிரிந்த இந்த கிளிகள் ஒன்று  சேரும் என்று பொருள் படும் படி இப்பாடல் இருக்கும்.

பாடல் சிறப்புகள் :

1. இப்பாடல் மலேசிய வாசுதேவன் மிகவும் உறுக்கமாக பாடியிருப்பார். தாய் சென்டிமென்டில் பார்ப்பவர்களை கண்கல்கவைக்கும் பாடல்.

2. கவிஞர் மு. மேத்தா அவர்கள் எழுதிய பாடல்

3. இரவு பிண்ணனியில் இப்பாடல் அமைந்திருக்கும்

4. இயைராஜாவின் இந்த இசை எக்காலத்திலும் அழியாமல் இருக்கும்.

5. ரஜினி அவர்கள் மிகவும் கதாபாத்திரத்தை உள்வாங்கி அந்த கவலையை முகத்தில் குடியேற்றி பாடியிருப்பார்.

பாடலின் விவரம் :


திரைப்படம் : வேலைக்காரன்
பாடலாசிரியர் : மு.மேத்தா
நடிகர்கள் : ரஜினிகாந்த, சரத்பாபு, அமலா, கே.ஆர் விஜயா, ராமசாமி
இசை : இளையராஜா
வருடம் : 1987
இயக்குனர் : S.P. முத்துராமன்

 

அந்த பாடல் வரிகள் :


பல்லவி : 


பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்து கொடுத்துப்புட்டா 
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து வட்டியை கட்டிப்புட்டா
 

பிள்ளையின் மனசு பித்தாச்சு இங்கு பெத்தவ மனசு கல்லாச்சு
இன்னொரு மனசு என்னாச்சு -அது முறிஞ்சுபோன வில்லாச்சு (பெத்து)
 

சரணம் : 1  
 

வயிற்றுல வளத்த புள்ள வந்து நிக்க வாசலில்லே
மடியிலே வளந்ததுக்கு இங்கிருந்த ஆசையில்லே
 


மகனா பொறந்ததுக்கு தொட்டணைக்க தாயுமில்லை
மகனா வளர்த்த புள்ள துள்ளுறது நியாயமில்லை
 

தொட்டிலில் நாம் கிடந்தா சோகம் வந்து சேர்வதில்லை
தோளில் வாழும் வரை துன்பமுன்னு ஒண்ணுமில்லை
 

கட்டில் பார்த்த பின்னே காண்பதெல்லாம் எங்கு சொல்ல
கண்ணுல ஆறிருக்கு போவதுக்கு தோணி இல்லை
 

சட்டை கிழிஞ்சிருந்தா தைச்சி உடுத்திரலாம்
நெஞ்சு கிழிஞ்சிருக்கே எங்கே முறையிடலாம்
 

காவிரி கங்கை ஆறுகள் போல கண்களும் இங்கே நீராட
 

சரணம் : 2

தலையில் வகிடுடேடுத்த தங்க விரல் பார்த்தேனே
தலையில் எழுதிவைத்த அந்த விரல் - பார்த்தேனா
 

கிளியை வளர்த்தெடுத்தா கேள்வியது கேட்காது
புலியை வளர்த்தெடுத்தா பாசமுன்னு பார்க்காது
 

சொல்லத்தான் வார்த்தையின்றி தாய்மனசு நோகுமிங்கு
சொல்லவே வாயுமின்றி ஓர் மனசு வாடுமிங்கே
 

சொல்லிலே வேலெடுத்து வீசுகின்ற சேயுமங்கே
மௌனத்தை பேசவிட்டா மாறிவிடும் யாவும் இங்கே
 

ரெண்டு கிளியிருக்கு ஒண்ணு தனிச்சிருக்கு
பெத்த கிளி அதுக்கு எந்த துணையிருக்கு
ஊர்ல எங்கே நாட்டுல எங்கே - காட்டுங்க எங்க தாய்ப்போல


அந்த பாடலையும் பாருங்க :






மலேசிய வாசுதேவன் அவர்கள் மறைவிற்கு இப்பதிவு சமர்ப்பனம்
 இதை எப்போது படித்தாலும் ஏதாவது ஒரு கருத்து சொல்லிட்டு போங்க..

8 comments:

  1. வடை வாங்க வந்துட்டோம்ல ....

    ReplyDelete
  2. பாடல் அருமை வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. மறைந்த மலேசிய வாசுதேவன் அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..

    ReplyDelete
  4. நல்ல பதிவு. மலேசியா வாசுதேவன் புகழ் வாழ்க.

    ReplyDelete
  5. நல்ல பாடல். திரு மலேசியா வாசுதேவன் அவர்களது ஆன்மா சாந்தி அடையட்டும்.

    ReplyDelete
  6. ரஜினிக்கு வாய்ஸ் கொடுத்தார்...
    ரஜினி பதிலுக்கு என்ன கொடுத்தார் என்று தெரியவில்லை ?

    ReplyDelete
  7. காலத்தால் அழியாத பாட்டும் வாசு தேவனின் குரலும்....என்றும் நிற்கும் காலம் கடந்தும்...

    ReplyDelete
  8. என்னையும் என் தாய் தத்து கொடுத்த வேதனையின் வலியை யார் அறிவார்?

    ReplyDelete

படிச்சி முடிச்சாச்சா..
தட்டிக் கொடுங்கள் அதை அடைக்கத்துக் கொள்கிறேன்...
இல்லையென்றால்
குட்டு வையுங்கள் அதை உரமாக்கிக் கொள்கிறேன்..
தட்டலோ குட்டோ அவசியம் பதிவு செய்யுங்கள்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...