Monday, February 21, 2011

கண்கலங்க வைக்கும் பெத்து எடுத்தவதான்.....



பாடலுக்கான  சூழ்நிலை :

கிராமத்திலிருந்து சென்னைக்கு வரும் ரகுபதி (ரஜினி) ஒரு ஓட்டலில் வேலைக்கு சேருகிறார்.  அந்த ஓட்டலில்  நல்ல பெயர் வாங்கி அந்த ஓட்டல் முதலாளின்  நல்ல வேலைக்காரன் என்ற பெயருடன் அவர் வீடுவரை சென்று பணியாற்றுகிறார். அவருடைய முதலாளியாக சரத்பாபு நடித்திருப்பார். ரகுபதி எவ்வாறு வேலை செய்கிறார் என்பதை பார்க்க  சென்னை வரும் வளையாபதி (வி.கே.ராமசாமி) ஓட்டலில் தங்கி ரகுபதியை கண்காணிக்கிறார்.

இதற்கிடையில் தான் தங்கி வேலை செய்யும் முதலாளியின் தாயார் தான் தன்னுடைய தாயார் என்று ரகுபதிக்கு தெரிய வருகிறது. (தாயாராக கே.ஆர். விஜயா நடித்திருப்பார்) ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பார். சரத்பாபு வளர்ப்பு தாய் என்று தெரிந்து, தன்னை கொல்ல இவர் சதி செய்கிறார் என்று சரத்பாபு குற்றம் சாட்ட, குற்றவாளியாக நிற்கும் தன் தாய்க்கு உதவமுடிய வில்லையே என் உருக்கமாக பாடும் படி பாடல் அமைந்துள்ளது..


பாடல் விளக்கம் :

தன்னை பெத்த நம் தாய் தன்னை தத்து கொடுத்து விட்டு வந்து விட்டாளே. தான் கடன் பட்டதற்காகவா என்னை விற்று வட்டி செலுத்திவிட்டால்..   என்னுடைய மனதை இப்படி பித்தாகு படி செய்து விட்டாரே உறுக்குமாக  பாடுகிறார்..

நான் தான் அவர் வயிற்றில் பிறந்தவன் ஆனால் என்னிடம் அன்பு காட்டவில்லை, ஆனால் வளர்ப்பு பிள்ளை அவருடைய அன்பையே கொச்சைப்டுத்துகிறானே.. நாமெல்லாம் குழைந்தையாகவே இருந்து விட்டால் இவ்வளவு பிரச்சனைகள் இல்லை வளர்ந்தால் இப்படிதான்.. சாதாரண ஒரு சட்டை கிழிந்து விட்டால் தைத்து உடுத்திக் கொள்ளலாம் ஆனால் நெஞ்சு கிழிந்து விட்டால் என்ன செய்வது

கிளியை வளர்த்தால் அதனால் எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனால் புலியை வளர்த்தால் அதனால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டும் தனக்கு உண்மை தெரிந்தும் அதை சொல்ல முடிய வில்லையே... இதற்கெல்லாம் ஒரே தீர்வு தன் தாய் வாய் திறந்து உண்மைகளை சொல்ல வேண்டும். அப்போதுதான் பிரிந்த இந்த கிளிகள் ஒன்று  சேரும் என்று பொருள் படும் படி இப்பாடல் இருக்கும்.

பாடல் சிறப்புகள் :

1. இப்பாடல் மலேசிய வாசுதேவன் மிகவும் உறுக்கமாக பாடியிருப்பார். தாய் சென்டிமென்டில் பார்ப்பவர்களை கண்கல்கவைக்கும் பாடல்.

2. கவிஞர் மு. மேத்தா அவர்கள் எழுதிய பாடல்

3. இரவு பிண்ணனியில் இப்பாடல் அமைந்திருக்கும்

4. இயைராஜாவின் இந்த இசை எக்காலத்திலும் அழியாமல் இருக்கும்.

5. ரஜினி அவர்கள் மிகவும் கதாபாத்திரத்தை உள்வாங்கி அந்த கவலையை முகத்தில் குடியேற்றி பாடியிருப்பார்.

பாடலின் விவரம் :


திரைப்படம் : வேலைக்காரன்
பாடலாசிரியர் : மு.மேத்தா
நடிகர்கள் : ரஜினிகாந்த, சரத்பாபு, அமலா, கே.ஆர் விஜயா, ராமசாமி
இசை : இளையராஜா
வருடம் : 1987
இயக்குனர் : S.P. முத்துராமன்

 

அந்த பாடல் வரிகள் :


பல்லவி : 


பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்து கொடுத்துப்புட்டா 
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து வட்டியை கட்டிப்புட்டா
 

பிள்ளையின் மனசு பித்தாச்சு இங்கு பெத்தவ மனசு கல்லாச்சு
இன்னொரு மனசு என்னாச்சு -அது முறிஞ்சுபோன வில்லாச்சு (பெத்து)
 

சரணம் : 1  
 

வயிற்றுல வளத்த புள்ள வந்து நிக்க வாசலில்லே
மடியிலே வளந்ததுக்கு இங்கிருந்த ஆசையில்லே
 


மகனா பொறந்ததுக்கு தொட்டணைக்க தாயுமில்லை
மகனா வளர்த்த புள்ள துள்ளுறது நியாயமில்லை
 

தொட்டிலில் நாம் கிடந்தா சோகம் வந்து சேர்வதில்லை
தோளில் வாழும் வரை துன்பமுன்னு ஒண்ணுமில்லை
 

கட்டில் பார்த்த பின்னே காண்பதெல்லாம் எங்கு சொல்ல
கண்ணுல ஆறிருக்கு போவதுக்கு தோணி இல்லை
 

சட்டை கிழிஞ்சிருந்தா தைச்சி உடுத்திரலாம்
நெஞ்சு கிழிஞ்சிருக்கே எங்கே முறையிடலாம்
 

காவிரி கங்கை ஆறுகள் போல கண்களும் இங்கே நீராட
 

சரணம் : 2

தலையில் வகிடுடேடுத்த தங்க விரல் பார்த்தேனே
தலையில் எழுதிவைத்த அந்த விரல் - பார்த்தேனா
 

கிளியை வளர்த்தெடுத்தா கேள்வியது கேட்காது
புலியை வளர்த்தெடுத்தா பாசமுன்னு பார்க்காது
 

சொல்லத்தான் வார்த்தையின்றி தாய்மனசு நோகுமிங்கு
சொல்லவே வாயுமின்றி ஓர் மனசு வாடுமிங்கே
 

சொல்லிலே வேலெடுத்து வீசுகின்ற சேயுமங்கே
மௌனத்தை பேசவிட்டா மாறிவிடும் யாவும் இங்கே
 

ரெண்டு கிளியிருக்கு ஒண்ணு தனிச்சிருக்கு
பெத்த கிளி அதுக்கு எந்த துணையிருக்கு
ஊர்ல எங்கே நாட்டுல எங்கே - காட்டுங்க எங்க தாய்ப்போல


அந்த பாடலையும் பாருங்க :






மலேசிய வாசுதேவன் அவர்கள் மறைவிற்கு இப்பதிவு சமர்ப்பனம்
 இதை எப்போது படித்தாலும் ஏதாவது ஒரு கருத்து சொல்லிட்டு போங்க..

Monday, February 14, 2011

காதலின் மனம்வீ சும் கண்ணே கலைமானே...


பாட்டுக்கான சூழ்நிலை...

விபத்தின் காரணமாக மன நோயாளியாக்கப்படும் விஜி (ஸ்ரீதேவி) மருத்துவபரிசோதகைக்கு செல்லும் வழியில் தவறிவிடுகிறார். பின்னர்  தவறுதலாக விலைமாதுவாக விற்கப்படுகின்றார். அவரை அங்கு சந்தித்துக் கொள்ளும் நல்ல மனம் கொண்ட நாயகன் சுப்பிரமணி (கமலஹாசன்) எனும் ஆசிரியரால் காப்பாற்றப்பட்டு பின் அவரின் வீட்டிற்கு அழைத்து செல்கின்றார் விஜியின் நிலையைக்கண்டு பரிதவிக்கும் சுப்பிரமணி ஒரு கட்டத்தில் அவரை அறியாமலையே விஜிமீது காதல் கொள்ளுகிறார். அவ்வாறு அவ்வாறு காதல் கொண்டு அவரை மிகவும் பாதுகாப்பாக பாதுகாக்கிறார் அந்த சூழலில் இந்த பாடல் இடம் பெறுகிறது..

பாடலின் பொருள் : 

அன்பே உன்னை எண் கண்ணே உன்ன கன்னி மயில் என்று உன்னை நினைக்கிறேன்... ஒரு கனமும் தவறாமல் உன்னைப்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.. அன்பே ஊமையாக இருந்திருந்தால் நான் அமைதியாக இருந்து விட்டு இருப்பேன்.. இல்லை ஏழையாக இருந்து விட்டால் அது ஒரு தனிப்பட்ட அமைதி...  நீ கொஞ்சும் கிளிப்போன்றும்.. பாடும் குயில் போன்று இருக்க வேண்டியவள் உன் வாழ்வில் கடவுள் இப்படி சதி செய்து விட்டாரே.... உன் மீது நான் காதல் கொண்டு பல்வேறு கனவினை வளர்த்துள்ளளேன்.. உனக்காக உன் உயிராக மாறி விட்டடேன் அன்பே என்னை எந்நாளும் மறந்து விடாதே... உன்மையில் நீ இல்லாமல் எனக்கு நிம்மதியில்லை என்று உருக வைக்கும் பாடல் வரிகள்.

பாடலின் சிறப்புகள் :

1.   கவிஞர் கண்ணதாசன் தன் மூச்சை இறக்கி வைத்தப்பாடல்...
     திரைஉலக கவியரசர் சினிமாவில் எழுதிய கடைசிப்பாடல்.

2.  ஸ்ரீதேவியின் குறும்பு தன நடிப்பும், கமலின் காதலில் விழுந்த ஒரு இளைஞனின் மனநிலையும்,  நடிப்பும் மிக அருமையாக இருக்கும். இப்படத்தில் கடைசிக் காட்சிக்காக கமலுக்கு தேசிய விருது கிடைத்தது.

3. இளையராவின் இசையில் அமைந்த இந்த பாடல் என்றும் இளமையோடு காணப்படுகிறது.

4. இரண்டு சில்வர் லோட்ஸ் விருது இப்படத்திற்கு கிடைத்தது.

5. இப்பாடலில் ஊட்டியின் இயற்கை அழமை மிகவும் அழகாக காட்டியிருப்பார், இயக்குனர் பாலு மகேந்திரா.


பாடலின் விவரம் :



படம் : மூன்றாம் பிறை
பாடியவர் :  கே. ஜே. ஜேசுதாஸ்
பாடல்  : கண்ணதாசன்
இசை :  இளையராஜா
வெளிவந்த ஆண்டு : 1983
இயக்கம் : பாலு ம‌கேந்திரா

 

அந்தப்பாடல் : 


பல்லவி

கண்ணே கலைமானே..
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத் தான் கேட்கிறேன்
ஆரிராரோ... ஓராரிராரோ...
 

சரணம் - 1

ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு..
பண்பாடும் ஆனந்த குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது

சரணம் - 2


காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன்..
எந்நாளும் எனை நீ மறவாதே
நீயில்லாமல் எது நிம்மதி...
நீதானே என் சந்நிதி...



அந்தப்பாடலையும் கேளுங்கள் :



இந்தப்பாட்டு ரசிகனை ஆதரியுங்கள்... 
உங்களின் கருத்துக்காக காத்திருக்கிறேன்

Thursday, February 10, 2011

போவோமா ஊர்கோலம் .... பூலோகம் எங்கெங்கும்...


பாடலின் சூழ் நிலை :


நாயகன் (பிரபு) ஒரு விவரம் தெரியாத அப்பாவி.. படத்தில் வி‌ஷேசங்களில் பாடல் பாடி பொழப்பு நடத்துவர் வெகுளி. நாயகி (குஷ்பு) மூன்று அண்ணன்களுக்கு தங்கையாக பிறந்து பொத்தி பொத்தி வளர்க்கிறார்கள். ஊரில் இவரை எந்த ஆம்பளையும் பார்க்க கூடாது.. பேசக்கூடாது என்று உத்திரவே போட்டு வய்த்துள்ளார்கள். இதனால் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே அடைபட்டுக்கிடக்கிறார். நாயகன் மட்டும் அந்த வீட்டில் போக வர உரிமையுள்ளது.. (அவர் வெகுளி என்பதால்) வீட்டில் அடைந்து கிடக்கும் நாயகி ஊரைச்சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டு அண்ணன்களுக்கு தெரியாமல் நாயகனுடன் ஊரைச்சுற்றிப்பார்க்க வெளியே செல்கிறார்.. அப்போது புதியதாக வெளியில் வந்து நாயகி பார்த்து அதிசயிக்கும் அத்தனையும் வியந்து பார்த்து பாடும் படி பாடல் அமைந்துள்ளது...

பாடல் பொருள் :
 

இக்கரைக்கு அக்கரை பச்சை என்பார்கள் அதனால் அரண்மனைக்குள்ளே இருந்தவருக்கு வெளி சூழல் வயல்வெளி, வரப்பு, வாய்க்கால், அறுவி,  தென்றல் காற்று, சிட்டுக்குருவியின் சினுங்கள், குயிலின் பாட்டு, என அத்தனையும் ஆனந்தப்படுத்துவதாய் இருக்கிறது.. அதனால்தான் இந்த பூலோகம் எங்கும் ஊர்கோலம் போவோமா என்று கேட்கிறார். ஓடுகின்ற இந்த பொன்னி நதிக்கூட ஆயிரம் சுரங்கள் சொல்கிறதே என்று அதிசயிக்கிறார். நதியின் ஓசை.. குருவியின் சப்தம், வயற்காடு இதையெல்லாம் ஆனந்தம் என்று சொல்லும் நாயகியின் கருத்து நாயகனை முகம் சுளிக்க வைக்கிறது.. இதிலென்ன சுகம் அரண்மனைதான் உண்மையான சுகம் என்று மறுப்பு தெரிவிக்கிறார் ஏன் என்றால் அவர் அரண்மனை சூழலைத்தான் சுகம் என்று நினைக்கிறார். எப்போதும் இயற்கையோடு ஓன்றி வாழ்வதால் அதை தனிமைப்படுத்தி பார்க்க முடியாதவராய் இருக்கிறார்.

பாடலின் சிறப்பு : 


இந்த பாடலை திரு. கங்கைஅமரன் எழுத அதை ராகதேவன் தன்னுடைய இனிமையான இசையில் மிகவும் அழகாக கொடுத்திருப்பார். பாடலை இயற்கை எழில் கொஞ்சும் கிராமப் ‌பிண்ணனியில் அழகாக படமாக்கியிருப்பார் வாசு. இதில் குஷ்புவின் முக பாவனையும், பிரபுவின் அந்த குறுஞ்சிரிப்பும் மிகவும் அ‌ழகாக இருக்கும்.


பாடலின் விவரம் :


திரைப்படம் :  சின்னத்தம்பி
நடிகர்கள் : பிரபு, குஷ்பு, ராதாரவி,
பாடியவர்கள் :
எஸ்.பி.பாலசுப்ரமணியம்  சுவர்ணலதா 
பாடலாசிரியர் : கங்கை அமரன்
இசை : இளையராஜா
இயக்கம் : பி.வாசு
படம் வெளியான ஆண்டு : 1991
 

அந்த பாடலின் வரிகள் :


பல்லவி

பெ : போவோமா ஊர்கோலம் ....
           பூலோகம் எங்கெங்கும்... 
           ஓடும் பொண்ணி ஆறும்...பாடும் கானம் நூறும்
           காலம் யாவும் பேரின்பம்...கானும் நேரம் ஆனந்தம்
           போவோமா ஊர்கோலம் ....
           பூலோகம் எங்கெங்கும்... 
 

சரணம் - 1

ஆ : அரண்மனை அன்னக்கிளி தரையில நடப்பது 

           நடக்குமா அடுக்குமா
 

பெ : பணியிலும் வெட்டவெளி வெய்யிலிலும் உள்ளசுகம் 
           அரண்மண கொடுக்குமா
 

ஆ :  குளுகுளு அரையில கொஞ்சிக் கொஞ்சி தவழ்ந்தது
           குடிசைய விரும்புமா
 

பெ : சிலுசிலுசிலுவென இங்கிருக்கும் காத்து அங்க 
           அடிக்குமா கிடைக்குமா
 

ஆ :  பளிங்கு போல உன்வீடு வழியில பள்ளம் மேடு
பெ : வரப்பு மேடும் வயலோடும் பறந்து போவேன் பாரு
 

ஆ :  அதிசயமான பெண்தானே
பெ : புதுசுகம் தேடி வந்தேனே 
 

போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்... 
ஓடும் பொண்ணி ஆறும்...பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம்...கானும் நேரம் ஆனந்தம்
போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்...  

சரணம் - 2
 

பெ : கொட்டுகிற அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும் 
          அடடடா அதிசயம்
 

ஆ : கற்பனையில் மிதக்குது கண்டதையும் ரசிக்குது 
          இதிலென்ன ஒரு சுகம் 
 

பெ : ரத்தினங்கள் தெறிக்குது முத்துமணி ஜொலிக்குது
           நடந்திடும் நதியிலே
 

ஆ :  உச்சந்தல சொழலுது உள்ளுக்குள்ள மயங்குது 
          எனக்கொண்ணும் புரியல்லே
 

பெ : கவிதை பாடும் காவேரி ஜதிய சேர்த்து ஆடும்
         அணைகள் நூறு போட்டாலும் அடங்கிடாம ஓடும்
 

ஆ :  போதும் போதும் உம் பாட்டு
பெ : பொறப்படப் போறேன் நிப்பாட்டு 
 

போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்... 
ஓடும் பொண்ணி ஆறும்...பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம்...கானும் நேரம் ஆனந்தம்
போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்... 


அந்தப்பாடலையும் பாருங்களேன் :


அன்பான வாசகர்களே இதை எப்போது படித்தாலும்  தங்களுடைய கருத்தை சொல்லி விட்டுபோங்கள்.. அதுதான் என்னை உற்சாகப்படுத்தும்...

Monday, February 7, 2011

பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்...


பாடலுக்கான சூழ்நிலை :
 
எதற்கும் கவலைப்படாத ஒரு யாதர்த்தமான வாலிபராக. நாயகன்.. தவறுநடக்கும் போது... ‌அது யாராக இருந்தாலும் தட்டிக் கேட்பவர் . ஒரு முரட்டு குணம், தந்தையுடன் வசிக்கிறார்.. நாயகியும் ஏறக்குறைய ‌அதே போன்று தான்... இவர்கள் இருவருக்கும் சந்திக்கும் போதெல்லாம் சண்டையில் ஆரம்பிக்கிறது.. பின்பு கொஞ்சம் கொஞ்சமாக அது அவர்களுக்கு தெரியாமல் காதலாக மாறுகிறது அப்படி காதலாக மாறும் போது ஏற்படுகிற  சந்தோஷ உணர்வை சொல்வது போல் இந்த பாடல் அமைந்துள்ளது...
 
பாடலுக்கான விளக்கம் :
 
பொதுவாக மனிதனுக்கு ஏற்படுகின்ற மகிழ்ச்சியான சம்பவங்கள் மிகக்குறைவு.. ஆனால் வாழ்க்கையில் நம்மை அறியாமலையே பல்வேறு மகிழ்ச்சியான சம்பவங்கள் தம்மை சுற்றியே இருக்கிறது.. அவற்றை நாம் அப்போது நம்மை அறியா‌தலேயே உணர்கிறோம்...
 
உண்டு முடித்தப்பின் தெரியும் நெல்லிக்கனியின் சுவையைப்போல்.. சில விஷயங்கள் முடிந்த பிறகே அவற்றின் மதிப்பை  நாம் உணர்வோம்..  அந்த யாதர்த்த தருணங்களை வரிசைப்படுத்தியே இந்த பாடல் இயற்றப்பட்டுள்ளது..

பேருந்தில் ஏறியவுடன் நாம் ஜன்னலோர‌த்தில் தான் சீட் பிடிப்போம்... ஜன்னுலோரத்தில் அமர்ந்து அனைத்தையும் வேடிக்கைப்பார்ப்பது  தன்னுடை பயணத்ததை இனிமையாக்கும்... அது போல பள்ளி பருவத்தில் விடுமுறையின் போதுதான்  இது போன்று பல்வேறு தருணங்களில் நாம் அனுபவிக்கும் சந்தோஷத்தருணங்னளை நாயகனும் நாயகியும் மாறி.. மாறி... செல்லிக் கொள்வது போல் இந்த பாடல் இருக்கிறது..

இறுதியில் காதலிக்கு காதலனும்.. காதலனுக்கு காதலியும் எழுதும் கடிதத்தில் இருக்கும் எழுத்துப்பிழையைக்கூட ரசிக்கிற பக்குவம் இந்த காதலுக்குதான் வரும் என்று காதலுக்கு மிக அழகான விளக்கத்தை தருகிறது.

அனைத்து சந்தோஷகளையும் காதலில்  பெறலாம் என்ற இந்த பாடல் காலம் முழுக்க நிலைத்து நிற்கும்...
 
பாடல் காட்சிகள் :
 
பாடல் காட்சிகள் மலைப்பிரதேச புள்வெளி படுகை, அருவி.. என அழகு கொஞ்சும் சூழலழல் மலையாள பாரம்பரிய கலரி சண்டை வீரர்கள் பின்னணியில் ஆடி பாடலை அழகுபட இயக்கியிருக்கிறார் சிவா.
 
பாடல் விவரம் :

படம் : பொறி (2007)
நடிப்பு : ஜீவா, பூஜா,
இசை : தீனா

பாடலாசிரியர்: யுகபாரதி
பாடியவர்கள் : மது பாலகிருஷ்ணன், மதுஸ்ரீ
ஒளிப்பதிவு : ஏகாம்பரம்
இயக்கம் : சுப்பிரமணிய சிவா
 
பாடல் வரிகள் :

ஆண்: பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்
                பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பெண்: பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்
                 பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

ஆண்: விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
               விளையாட்டுப் பிள்ளைகளின் செல்ல கோபம்

பெண்: ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல் அன்பே அன்பே நீயே   (பேருந்தில்..)
 

சரணம் - 1
 

ஆண்: பயணத்தில் வருகிற சிறு தூக்கம்
               பருவத்தில் வருகிற முதல் கூச்சம்

பெண்: பரிட்சைக்கு படிக்கிற அதிகாலை
                கழுத்தினில் விழுந்திடும் முதல் மாலை

ஆண்: புகைப்படம் எடுக்கையில் திணறும் புன்னகை
               அன்பே அன்பே நீதானே
               அடைமழை நேரத்தில் பருகும் தேநீர்
                அன்பே அன்பே நீதானே

பெண்: தினமும் காலையில் எனது வாசலில்
                கிடக்கும் நாளிதழ் நீதானே                              (பேருந்தில்..)


சரணம் - 2

ஆண்: தாய் மடி தருகிற அரவணைப்பு
                உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு

பெண்: தேய்பிறை போல் படும் நகக் கணுக்கள்
                 வகுப்பறை மேஜையில் இடும் கிறுக்கல்

ஆண்: செல்ஃபோன் சிணிங்கிட குவிகிற கவனம்
               அன்பே அன்பே நீதானே
               பிடித்தவர் தருகிற பரிசுப் பொருளும்
              அன்பே அன்பே நீதானே

பெண்: எழுதும் கவிதையின் எழுத்துப் பிழைகளை
                ரசிக்கும் வாசகன் நீதானே                          (பேருந்தில்...)


அந்த பாடலையும் பாருங்கள்..




நண்பர்களே...  இனி உங்கள் வேலை...
வாக்களித்து.. பின்னூட்ட்ம்  அளித்து என் பணி சிறக்க உதவுங்கள்..

Wednesday, February 2, 2011

ஒரு பண்பாடு இல்லையென்றால்...


பாடலுக்கான சூழ்நிலை :

பட்டணத்துக்கு நடிக்க ஆசைப்ட்டு  தவறான ஒருக்கு உதவிசெய்ய அரண்மனையில் வேலைக்கு ‌சேறுகிறார் நாயகன் (ரஜினி). அங்கு ஆள்மாறட்டம் செய்து இருந்தாலும் இவர் தவறு செய்யாமல் இருக்கிறார். அந்த வீட்டில் இர்ந்துக் கொண்டு அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார்.. அப்படியிருக்க அந்த வீட்டில் இருக்கும் மூத்த மகள் தன் பிறந்த நாளை நாயகனுக்கு தெரியாமல் நண்பர்களுடன் போதை? ஆடல் பாடலுடன் கொண்டாடுகிறார். இதை பார்க்கும் இளைஞர்கள் இப்படி குடித்து விட்டு தன்னை மறந்து தன்னுடைய பண்பாட்டை மறந்து இப்படி கெட்டுப் போகிறார்களே.. என்று மனநொந்து பாடுவதாத இந்த பாடல் அமைந்துள்ளது...

பாடல் விளக்கம் :

மேலை நாட்டு கலாச்சாரம் எவ்வாறு நமது நாட்டில் புற்று நோய் போல மெல்ல மெல்ல நமது பண்பாட்டை சீரழித்து வருவதை எளிமையான பாடல் வரிகளில் அமைத்துள்ளார் கவிப்பேரரசு.

புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பெண்களும் ஆண்களும் அநாகரிகமாக குத்தாட்டம் போடுவதும், மது பானங்கள் குடிப்பதும், வயது வித்தியாசம் இல்லாமல் கூத்தடிப்பதும் கலாச்சார சீரழிவின் உச்ச கட்டம்.

இப்படி நம் தேசத்திற்கு என்று இருக்கும் பண்பாட்டை மறந்து இப்படியிருக்கிறார்களே என்று வேதனைப்படுவதாக உள்ளது தீய பழக்கமானது முதலில் சாதாரனமாக வந்து பின்பு அது நம்மை அடிமைப்படுத்திவிடும் என்று கவிப்பேரரசு மிகவும் தெளிவாக குறிப்பிட்டு இருப்பார்...

பொதுவாக பாவத்தை போக்க கங்கையில் குளிப்போம் ஆனால் பண்பாடு தவறியவர்கள் கங்கையில் குளித்தால் அந்த கங்கையே அழுக்காகி விடும் என்ற வரிகள் இந்த பாடலை உச்சத்தில் வைக்கிறது..
மயக்கம் என்பது ஒரு மாத்திரையில் இல்லை விளக்குள் இறுந்தும் இப்படி இருட்டுக்குள் வாழ்வது சரியா? தம் தேசம் உன்னை அழைத்துக் கொண்டிருக்கிறது ஏன் இப்படி கொட்டுப்போகிறாய் என்று அந்த பாடல் விளக்குகிறது..

‌‌ஜேசுதால் குரலில் மிகவும் இனியாக இருக்கும் இந்தபாடல் ஒரு பங்ளாவில் படமாக்கப்பட்டிருக்கும். காட்சிகள் வரி‌களட நம்மை கண்டிப்பாக ஆட்கொள்ளும்..

பாடல் விவரம் :

படம்: ராஜா சின்ன ரோஜா
இசை: சந்திரபோஸ்
பாடியவர்: KJ ஜேசுதாஸ்
வரிகள்: வைரமுத்து
‌வெளிவந்த ஆண்டு : 1989

அந்த பாடல் வரிகள் :

ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை
நம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை
சிறகில்லாமல் தள்ளாடும் செல்ல கிளிகள்
என் கண்ணோரம் இப்போது கண்ணீர் துளிகள்  (ஒரு பண்பாடு..)

வளர்ந்து வராத பிறை இல்லை
வடிந்து விடாத நுரை இல்லை
திரும்பி வராத பகல் இல்லை
திருந்திவிடாத மனம் இல்லை
ஒரு நாள் சுவைப்போம் என்று நினைத்தால்
ஒரு நாள் சுவைப்போம் என்று நினைத்தால்
உயிரை சுவைக்கும் பொய் இல்லை
இதை இன்பம் என்பது இழக்காகும்
நீ குளித்தால் கங்கை அழுக்காகும்   (ஒரு பண்பாடு..)

மயக்கம் என்பது மாத்திரையா
மரணம் போகும் யாத்திரையா
விளக்கு இருந்தும் இருட்டரையா
விடிந்த பின்னும் இருட்டறையா
வரம்பு கடந்து நரம்பு தளர்ந்து
வரம்பு கடந்து நரம்பு தளர்ந்து
இந்த உலகம் உன்னை அழைக்கிறது
அட இன்னும் வாழ்க்கை இருக்கிறது  (ஒரு பண்பாடு..)
 
அந்தப்பாடலையும் பாருங்களேன்..


கண்டிப்பாக 
ஓட்டுகளும்.. பின்னுட்டமும் நம்மை ஒண்றினைக்கும்...

Monday, January 31, 2011

நீல வானம் நீயும்... நானும்...

 கதைகளம் :

நாயகன் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி தற்போது ஒருவருக்காக வேவு பார்க்கும் வேலையை செய்ய ஒரு சொகுசு கப்பலில் பயணிக்கிறார். அதே கப்பலில் பயணிக்கும் நாயகி இவர் நம்மை வேவு பார்க்க வந்தவர் ‌என்று அறியாமல் அவருடன் பழகுகிறார். ஒரு கட்டத்தில் இவருக்கு திருமணம் ஆகிவிட்டாதா? இல்லையா? என்று கேள்வி எழும்போது நாயகன் எனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று சொல்லி, ஆனால் இப்போது அவள் உயிருடன் இல்லை என்று கூறுகிறார். அவர் எப்படி இறந்தார் என்று நாயகி கேட்ட அதை விளக்கியாக வேண்டும். அப்படி விளக்கும் போது இந்த பாடல் பயணிக்கிறது.

பொதுவாக தமிழ் படங்களில் பிளாஸ்பேக் கதைகள் வெகு நீளமாக பயணிக்கும். ஆனால் இந்த படத்தில் ஒரு பாடலில் அவரின் மொத்த கதையும் சொல்லப்பட்டு விடுகிறது...

நாயகன் ராணுவத்தில் இருக்கும் போது... தீவிரவாதியிடம் மாட்டிக் கொண்ட ஒரு குடும்பத்தை காப்பாற்றுகிறார். அதில் எஞ்சிய ஒரு பெண்ணை காப்பாற்றி பின் அது காதலாக மாறுகிறது.. பின் திருமணம்.. பின்பு மகிழ்ச்சியான வாழ்க்கை.. அவர் கர்பமாகிறார்..ஒரு நாள்  கொடைக்கானல் செல்லும் வழியில் ஒரு கார் விபத்தில் மனைவி இறந்து விடுகிறார்.  இதைதான் பாடலின் மூலம் விளக்கப்பட்டுள்ளது.

பாடலின் சிறப்பு

பொதுவாக தமிழ் சினிமா பல்வேறு புதுமைகளை புகுத்திக்கொண்டு வருகிறது. அதன் வரிசையில் இந்த பாடல் முழுவதும் தலைகீழாக பயணிக்கும்.. பொதுவாக கதை முதலில் ஆரம்பித்து இறுதியில் முடியும்.. ஆனால் இந்த பாடல் இறுதியில் தொடங்கி தொடக்கத்தில் முடியும்...
இந்த காட்சியில் நாயகன் (கமல்) இந்த பாடலுக்கு நேரடியாக பாடுவது போல் வாய் அசைப்பது மிகவும் அருமை... ஒரு பாடல் ஒரு கதை விளக்குகிறது..

பாடலின் விளக்கம் :

இந்த நீல வானம் போல் நாம் இணைந்தே இருப்போம். இந்த இயற்கையின் உதவியோடு நாம் வாழ்க்கை நடத்துவோம். பலநாடுகள் சேர்ந்து ஒரே நாடாக மாறுவது போல் நீ நானும் ஒன்றாக இணைவதைதான் இங்‌கே காதல் என்கிறார்கள்.. அதற்கு சாட்சியாக என்னை போல் பெண் குழந்தையும்.. என்று ஆண் பாடும் போது தன் மனைவின் பாதி என் உணர்கிறார்.. உணர்த்துகிறார்.

வந்தாரை வாழவக்கும் நம்இந்தியா காயத்தோடு வருபவரையும் காயம் ஆற்றும் ஆது போல நமக்குள் இருக்கும் காதல் நம் சோகங்களை ஆற்றும் இதுபோல் ஒண்றாக நாம் பல்லாண்டுகள் வாழ்வோம் என்று வர்ணனையுடன் இப்பாடல் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.


பாடல் காட்சிகள் கோடைக்கானல் விபத்தில் ஆரம்பித்து... காஷ்மீர் தீவிரவாத சண்டையில் முடிவது போன்று படமாக்கபட்டிருக்கும்... 



பாடலின் விவரம்

படம் : மன்மதன் அம்பு
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
பாடல் : கமலஹாசன்
பாடியவர் : கமலஹாசன்
இயக்கம் : கே.எஸ்.ரவிக்குமார்
படம் வெளியான தேதி : 23-12-2010
படத்தின் கால அளவு : 152 நிமிடங்கள்

பாடல் வரிகள் :

ஆண்     : நீலவானம் நீயும் நானும்
                  கண்களே பாஷையாய்
                  கைகளே ஆசையாய்
                  வையமே கோயிலாய்
                  வானமே வாயிலாய்
                  பால்வெளி பாயிலே
                  சாய்ந்து நாம் கூடுவோம்
                  இனி நீயென்று நானனென்று
                  இருவேறு ஆளில்லையே

{ஆண்      :   நீலவானம் நீயும் நானும்
பெண்      :   தி புளு ஸ்கை யூ அண்ட் ஐ} (ஓவர்லாப்)

சரணம் - 1

ஆண்      :    ஏதேதோ தேசங்களை
                   சேர்க்கின்ற நேசந்தனை
                   நீபாதி நான் பாதியாய்க்
                   கோர்க்கின்ற பாசந்தனை
                   காதல் என்று பேர் சூட்டியே
                   காலம் தந்த சொந்தமிது
                   என்னைப் போலே பெண்குழந்தை
                   உன்னைப் போலொரு ஆண் குழந்தை
                   நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது
                   இன்னொரு உயிர்தானடி

                    நீலவானம் நீயும் நானும்...

ஆ & பெ: பல்லாண்டு பல்லாண்டு
                   பல்லாயிரத்தாண்டு
                   பல கோடி நூறாயிரம்
                   பல்லாண்டு பல்லாண்டு
                   பல்லாயிரத்தாண்டு
                   பல கோடி நூறாயிரம்

குழு 
:  பல்லாண்டு பல்லாண்டு
              பல்லாயிரத்தாண்டு
              பல கோடி நூறாயிரம்


சரணம் - 2

ஆண்       :  ஆறாத காயங்களை
                  ஆற்றும் நம் நேசந்தனை
                  மாளாத சோகங்களை
                  மாய்த்திடும் மாயம்தனை
                  செய்யும் விந்தை காதலுக்கு
                  கை வந்த தொரு கலைதானடி
                  உன்னை என்னை ஒற்றி ஒற்றி
                  உயிர் செய்யும் மாயமும் அதுதானடி
                  நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது
                  இன்னொரு உயிர்தானடி

                  நீலவானம் நீயும் நானும் ...
 

அந்த பாடலையும் பாருங்க..






ஹலோ பாஸ்.. ஒரு ஓட்டுப்போட்டுட்டு.. அப்படியே ஒரு அட்னஸை போடுங்க பாஸ்...
நல்லதா ஒரு நாலு வார்த்தை சொன்ன எதுவுமே தப்பில்லை..

Saturday, January 29, 2011

பொன்மாலைப் பொழுது...


திரை இசை தமிழ் பாடல்களில் வளமான பாடல்கள் நம்மில் இருக்கிறது... அவற்றின் ஒளிந்துக்கிடக்கும் ஒருசில பாடல்களில் ஒன்றை இன்று தந்திருக்கிறோன் (என் அறிவுக்கு எட்டிய அளவுக்கு) இப்பாடலைப்பற்றி இன்னும் தகவல்கள் இருந்தால் பின்னுட்டத்தில் தெரியப்படுத்தவும்.

பாடலின் விவரம் :


பாடல் : பொன் மாலை பொழுது!!
படம் : நிழல்கள்  
வெளிவந்த நாள் : நவம்பர் 6, 1980
குரல் : S.P.பாலசுப்பிரமணியம்
இசை : இசை ஞானி இளையராஜா.
பாடலாசிரியர் : வைரமுத்து (இது வைரமுத்து திரைக்காக எழுதிய முதல் பாடல்)
படத்தின் இயக்கம் : பாரதிராஜா
பாடலில் நடித்தது : சந்திரசேகர்
 

பாடலுக்கான சூழ் நிலை :

ஓர் இளைஞன் கலா ரசிகன், வாழ்க்கையை மிகவும் நேசிப்பவன், சமூகத்தில் இருக்ககூடிய சிக்கல்களை தீர்க்க நினைப்பவன், ஆனால் அதற்கான தீர்க்கமான முடிவு தெரியாதவன் அப்படி இருக்கும் ஒரு இளைஞன் ஒரு மாலை நேரத்தில் மண்ணில் கொட்டிக் கிடக்கும் இயற்கை அழகை ரசித்து பாடும் படி இந்த பாடல் அமைந்துள்ளது.
பாடலுக்கானப் பொருள் :

மாலை நேரம் பகலின் தோலுரித்தி இரவு ஆடை அணிந்துக் கொள்ளும். அந்தநேரத்தில் இருக்கும் வண்ணமானது என்து வாசலில் கோலமிட்டு வானமானது இரவுசெல்ல பாலம் அமைத்து கொடுக்கும் போது பறவைகள் தாளமிட்டு இரவை வழியனுப்பும்.... இந்த வானம்தான் எனக்கு ஞானத்தை கொடுக்கும்.. கேள்விகளாளே எனது வேள்விகள் நடக்கும் என்று நாயகன் இயற்கையை பார்த்து பாடுகிறார். பாடல் காட்சியில் மாலைப் பொழுதை தன் கண்முன்னே கொண்டு காட்டியிருப்பார் பாரதிராஜா.

இதோ அந்த பாடல் வரிகள் :


பல்லவி

ஹே ஹோ ஹிம் லலா

பொன் மாலைப் பொழுது
இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானம் மகள் நானுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலைப் பொழுது

சரணம் -1

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ... (இது..

சரணம் -2

வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் சேதி வரும்
கேள்விகளால் வேள்விகளை நான் செய்தேன்... (இது...



விடுப்பட்ட  சரணம் -3

(வைரமுத்து அவர்களால் எழுதப்பட்டு பாடலில் இடம் பெறாத மூன்றாவது சரணம்)

”இரவும் பகலும் யோசிக்கிறேன்
எனையே தினமும் பூசிக்கிறேன்
சாலை மனிதரை வாசிக்கிறேன்
தீயின் சிவப்பை நேசிக்கிறேன்
பேதங்களே... வேதங்களா.. கூடாது..  (இது...

என்பது தான் அது.

இப்போது இந்த பாடலையும் கேட்டு ரசியுங்கள்...


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...